நாம் உயிருடன் இருக்கும்போதே யாருக்கு தகவல்கள் கொடுக்கப்படவேண்டும் என்பதனை தீர்மானிக்க முடியுமா ?
நீங்கள் எதிர்பாராதவிதமாக இறந்துபோனால் குறிபிட்ட தகவல்கள் யாருக்கேனும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என விரும்பினாலோ அல்லது தன்னுடய தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என விரும்பினாலும் அதனை உயிரோடு இருக்கும்போதே செய்ய முடியும் .
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நமது ஜிமெயில் (Gmail) இல் எந்தவொரு செயல்பாடும் இல்லையெனில் பிறருக்கு தகவல்களை தெரிவிக்க ,குறிப்பிட்ட தகவல்களை பிறருடன் பகிர்ந்துகொள்ள அனைத்து ஆப்சன்களையும் வழங்குகின்றது Inactive Account Manager.
ஒரு அக்கவுண்ட் (Google Account) செயல்படாமல் இருக்கிறதா என்பதனை கூகுள் கண்டறிவதற்கு உங்களது அக்கவுண்ட் கடைசியாக எப்போது login செய்யப்பட்டது , gmail பயன்பாடு , ஆண்ட்ராய்டு மொபைலில் ஜிமெயில் ஆப் உள்ளிட்ட அனைத்துமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் .
யாரால் தகவல்களை பெற முடியும்?
கூகுள் வேறு ஒருவருடைய password உள்ளிட்டவற்றை எவருடன் பகிர்ந்துகொள்வதில்லை
உங்களுக்கு பிறகு யார் உங்களது தகவல்களை பார்க்கலாம் என விரும்புகிறீர்களோ அவர்களின் தகவல்களை அளித்திடுங்கள் .
கூகுள் சரியான நபரை கண்டறிவதற்கு மொபைல் எண்ணை பயன்படுத்துகின்றது . இதன் மூலமாக தவறான நபர் உங்களது தகவல்களை டவுன்லோடு செய்வது தடுக்கப்படுகிறது .
உங்களது அக்கவுண்ட் குறிப்பிட்ட கால இடைவெளிவரை பயன்படுத்தப்படாமல் இருந்தால் கூகுள் நீங்கள் குறிப்பிட்ட நபருக்கு notification அனுப்பும் . அந்த notification இல் யாருடைய அக்கவுண்ட் செயல்படாமல் போனதால் notification வருகின்றது போன்ற தகவல்கள் இருக்கும் .
உதாரணமாக வருகின்ற ஈமெயில் இப்படிதான் இருக்கும்
உங்களுடைய அக்கவுண்ட் deactivate ஆன பிறகு எந்ததெந்த தகவல்களை அடுத்தநபர் தெரிந்துகொள்ளலாம் அல்லது டவுன்லோடு செய்யலாம் என விரும்புகிறீர்களோ அதனை செலக்ட் செய்திட முடியும்
குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தகவல்களை டவுண்லோடு செய்துகொள்ளலாம் .