Highlights :
> இரண்டு Display யுடன் கலக்கும் Vivo NEX Dual Display Edition
> சீனாவில் அறிமுகமாகி இருக்கிறது, இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை
> Price Rs 52,000 [More or less]
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
“Notch Free or Full Display” மொபைல்களான Vivo Nex, Oppo Find X போன்ற மொபைல்களை தொடர்ந்து விவோ நிறுவனம் Vivo NEX Dual Display Edition என்ற மொபைலை சீனாவில் விற்பனைக்கு விட்டுள்ளது. தற்போது இந்த மொபைல் பற்றித்தான் மொபைல் விரும்பிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். Dual Display வை தாண்டி இன்னும் பல சிறப்பம்சங்கள் இதில் இருக்கின்றன வாருங்கள் பார்க்கலாம்.
Dual Display
Vivo NEX Dual Display Edition மொபைலின் முக்கிய சிறப்பம்சமே இரண்டு பக்கமும் இருக்கின்ற Display தான். முன்பக்க Display , 6.39 inch OLED Full HD+ display, resolution of 2340×1080 pixels. மேற்புறத்தில் ஸ்பீக்கர், கேமரா போன்றவைகளுக்காக எந்தவொரு தேவையும் இல்லையென்பதால் ஒரு முழு திரையாக இருக்கும். பின்பக்கத்தில் இருக்கின்ற Display ஆனது 5.49-inch OLED full HD display, resolution of 1920×1080 pixels உடன் இருக்கும்.
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
Camera
முதல் ஆச்சர்யமான விசயம், முன்பக்க கேமரா (Front Camera) இந்த மொபைலில் இல்லை. பிறகு எப்படி Selfie எடுக்க முடியும்? என கேட்கலாம். அங்கு தான் பின்பக்க Display பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் கேமரா ஆப்பில் முன்பக்கத்தை தெரிவு செய்தவுடன் பின்பக்க திரையில் உங்களது புகைப்படத்தை காண இயலும்.
பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் இருக்கின்றன.
12-megapixel primary camera with optical image stabilization support, a
2-megapixel night vision sensor,
Time of Flight (TOF) 3D camera
In Display Finger Print & 3D Face UnLock
மற்ற போன்களை போலவே Display இல் Finger Print வைத்து unlock செய்யவும் முகத்தை வைத்து unlock செய்யவும் முடியும். Finger Print முன்பக்கத்தில் இருக்கின்ற main display இல் மட்டுமே வேலை செய்யும்
சிலர் இரண்டு Display இருப்பதனால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியுமா என்கிறார்கள். ஆனால் ஒரு display வேலை செய்யாவிட்டாலும் இன்னொரு display இல் பயன்படுத்திட முடியும். மேலும் இரண்டு display என்பது special ஆன ஒன்று அதனை அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள் ரிவியூ செய்பவர்கள்.
ஒரு நேரத்தில் ஒரு display வை மட்டுமே பயன்படுத்திட முடியும்.
Battery :
பேட்டரி 3,500mAh தான். இரண்டு display இருக்கக்கூடிய மொபைலில் பேட்டரி இவ்வளவு தானா என எண்ணலாம். ஆனால் ஒரே நேரத்தில் ஒரு display ஐ மட்டுமே பயன்படுத்திட முடியும் என்பதனால் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்க போவது இல்லை. இன்னும் கூறியிருக்கலாம் என்றாலும் மிகப்பெரிய குறையாக பார்க்க வேண்டியது இல்லை.
இதையும் தவறாமல் படிங்க !
ஆபாச தளங்களுக்கு தடைவித்த கூகுள் நல்ல முயற்சி
Google Search ஆல் 1 லட்சம் இழந்த பெண் | பாதுகாப்பாக இருப்பது எப்படி?
WhatsApp இல் செக்ஸ் வீடியோ அனுப்புறீங்களா? உங்க வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்படும்
TECH TAMILAN