Saturday, November 23, 2024
HomeTech Articlesட்ரோன், பறக்கும் கார்களுக்கான உலகின் முதல் ஏர்போர்ட் | Urban Air Port

ட்ரோன், பறக்கும் கார்களுக்கான உலகின் முதல் ஏர்போர்ட் | Urban Air Port

Small-Urban-Air-Port-Coventry-Copyright-Urban-Air-Port-min

Urban-Air-Port

ட்ரோன் மற்றும் பறக்கும் கார்கள் வந்து போவதற்கான சிறிய ரக ஏர்போர்ட் உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்து நாட்டின் கோவென்ட்ரி [Coventry] எனும் இடத்தில் அமையவிருக்கிறது. இந்த ஏர்போர்ட் அமைப்பதற்கு இங்கிலாந்து அரசும் உதவ முன்வந்துள்ளது.

சில நாடுகளின் முக்கிய நகரங்களில் மருந்துப்பொருள்கள் மற்றும் சில பொருள்கள் ட்ரோன் மூலமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. பறக்கும் கார்கள் இன்னமும் பயன்பாட்டிற்கு வரவில்லை என்றாலும் கூட கூடிய விரைவில் சிறிய அளவிலான பறக்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு ரீசார்ஜ் செய்வதற்கான இடங்களை அமைப்பது எப்படி முக்கியமோ அதைப்போலவே ட்ரோன் மற்றும் பறக்கும் சிறிய ரக கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்த சிறிய ரக அர்பன் ஏர்போர்ட் மிகவும் அவசியமாகிறது. 

ஏன் இந்த சிறிய அளவிலான Urban Air Port தேவைப்படுகிறது?

Small-Urban-Air-Port-Coventry-Copyright-Urban-Air-Port-min

சிறிய அளவிலான ஏர்போர்ட் ஏன் அவசியம் என Urban Air Port என்ற நிறுவனத்தை உருவாக்கிய ரிக்கி சாந்து என்பவரிடம் எழுப்பியபோது அவர் அளித்துள்ள பதில் ‘நான் இந்த திட்டத்தில் பணியாற்றிட துவங்கியபோது 6 மைல் தூரம் லண்டனில் பயணிக்க வேண்டியதாக இருந்தது. மாசு, நெரிசல் என இந்த தூரத்தை கடப்பதற்கு சுமார் 1 மணி நேரம் தேவைப்பட்டது. ஏன் இந்த நெருக்கடியான சூழலை மாற்றக்கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. தூய்மையான மற்றும் பசுமையான வழிகள் மூலமாக ஏன் இந்தக்குறைகளை நிவர்த்தி செய்திடக்கூடாது என்ற எண்ணம் தான் இந்த திட்டத்தில் ஈடுபட வைத்தது. 

 

 

3 ஆண்டுகளுக்கு முன்பு ஏர்பஸ் நிறுவனம் குறுகிய தூரங்களுக்கு காற்று வழி போக்குவரத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது. எங்களை அணுகி, தங்களுக்கு சிறிய அளவிலான விமானங்களை உருவாக்கிட தெரியும். ஆனால் நகரத்தை பற்றிய தகவல் எங்களுக்கு தெரியாது. அவர்கள் சிறிய, மின்சார மற்றும் குறுகிய பயணங்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு புதிய வகை விமானங்களை உருவாக்கி வந்தனர் – மேலும் இதுபோன்ற உள்கட்டமைப்பை ஆதரிக்கக்கூடிய உள்கட்டமைப்பு என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள விரும்பினர்.அதன் பிறகு தான் , இந்த உள்கட்டமைப்பு என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு ஆய்வறிக்கையை நான் உருவாக்கினேன்’ என்றார்.

 

சாலைக்கு பதிலாக ஏன் விமான-டாக்ஸி அல்லது விமான விநியோகம் தேவைப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவிலான மக்கள் நகரத்தை நோக்கி நகர்கிறார்கள். ஆகையினால் தான் சாலைகள் நெருக்கம் மிகுந்து காணப்படுகிறது. அமேசான் உள்ளிட்ட பொருள்களை வீடுகளுக்கு பொருள்களை டெலிவரி செய்திடும் நிறுவனங்கள் சாலை வழி பயணத்திற்கு மாற்றாக சிறிய ரக விமானம் அல்லது ட்ரோன் போன்றவற்றின் உதவியை நாடுகின்றனர். மக்களுக்கும் கூட விரைவாகவும் சரியாகவும் பொருள்களை கொண்டு சேர்க்க விமான டாக்சி சேவை தேவையாக இருக்கிறது.

முற்றிலும் பசுமை சார்ந்து உருவாக இருக்கிறது Urban Air Ports

Small-Urban-Air-Port-Coventry-Copyright-Urban-Air-Port-min

உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் அமையவிருக்கும் Urban Air Ports பசுமை சார்ந்து உருவாக்கப்படுகிறது. சுற்றுசூழலுக்கு எந்தவித தீங்கும் நேராத விதத்தில் இந்த Urban Air Port அமையவிருக்கிறது. ஏற்கனவே பல வெளிநாடுகளிடமிருந்து Urban Air Ports  ஆர்டர்களை பெற்றுள்ளது. ஐரோப்பாவில் இருக்கும் பல்வேறு தனியார் கட்டுமான பொறியாளர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களிடமும் இவர்கள் பேசி வருகிறார்கள். 

 

 

எதிர்காலத்தில் பெரிய விமான நிலையங்கள் போலவே சிறிய சிறிய விமான நிலையங்கள் வந்துவிடும். 

 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular