Thursday, November 21, 2024
HomeTech Articlesசந்திரயான் 2 வை வழிநடத்தும் இரண்டு பெண்கள் - வரலாற்றில் முதல் முறை

சந்திரயான் 2 வை வழிநடத்தும் இரண்டு பெண்கள் – வரலாற்றில் முதல் முறை

சந்திரயான் 2 வை வழிநடத்தும் இரண்டு பெண்கள் - வரலாற்றில் முதல் முறை

Two women lead Chandrayan 2

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்திரயான் 2, இரண்டு பெண்களால் வழிநடத்தப்படுகிறது. சந்திரயான் 2 இன் 30% பணிகள் பெண்களால் செய்துமுடிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 2 வருகிற ஜூலை 22 அன்று விண்ணில் ஏவப்பட இருக்கிறது. சந்திரனுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் இரண்டாவது செயற்கைக்கோள் என்பதனையும் தாண்டி மிகப்பெரிய பெருமையினை பெற்று இருக்கிறது சந்திரயான் 2. இரண்டு பெண்களின் தலைமையின் கீழ் சந்திரயான் வழிநடத்தப்படுகிறது என்பது தான் அந்தப்பெருமை . இவர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவில் பல்வேறு பொறுப்புகளில் பணி அனுபவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சந்திரயான் 2 வில் 30% பங்களிப்பு பெண்களுடையது என்பது கூடுதல் சிறப்பு.

இந்தியா,  சந்திராயன் 1 ஐ நிலவுக்கு அனுப்பியதில் இருந்து (22 October 2008) கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து சந்திரயான் 2 எனும் செயற்கைக்கோளை நிலவின் தென் படுத்திக்கு அனுப்ப இருக்கிறது. ஜூலை 15 அன்று விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த சந்திரயான் 2 ஏவப்படுவதற்கு 1 மணி நேரம் முன்னதாக நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சந்திரயான் 2 ஜூலை 22 அன்று ஏவப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திட்ட இயக்குனர் (Project Director) ஆக மதிப்பு மிகு முத்தையா வனிதா (Muthayya Vanitha) அவர்களும் பணி இயக்குனராக (Mission Director) மதிப்பு மிகு ரித்து கரிதால் (Ritu Karidhal)  அவர்களும் சந்திரயான் 2 வை வழிநடத்துகிறார்கள்.

முத்தையா வனிதா

முத்தையா வனிதா

இஸ்ரோ வரலாற்றில் முதல் பெண் திட்ட இயக்குனர் என்ற மாபெரும் பெருமையினை பெறுகிறார் முத்தையா வனிதா . கடந்த 2006 ஆம் ஆண்டில் சிறந்த அறிவியல் விஞ்ஞானிக்கான விருதினை பெற்ற இவருக்கு இஸ்ரோவில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் இருக்கிறது. தகுந்த திறமை இருந்தும் போதிய அனுபவம் இருந்தும் சந்திரயான் 2 வின் திட்ட இயக்குனராக பொறுப்பேற்பதில் தயக்கம் கொண்டிருந்தார். இருந்தாலும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் அண்ணாதுரை போன்றவர்களின் தூண்டுதலினால் இந்த பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

 

முத்தையா வனிதா அவர்களை பற்றி சந்திரயான் 1 இன் திட்ட இயக்குனர் திரு அண்ணாதுரை அவர்கள் குறிப்பிடும்போது “முத்தையா வனிதா பிரச்சனைகளை கையாள்வதில் மிகவும் திறமையானவர், தகவல்களை கையாள்வதிலும் ஹார்டுவேர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் வல்லவர், ஆனாலும் அவருக்கு சந்திரயான் 2 போன்ற மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த, மக்கள் கவனிக்கிற திட்டத்தின் தலைமை பொறுப்பினை ஏற்பதில் தயக்கம் இருந்தது”என தெரிவித்தார்.

 

நிச்சயமாக மாபெரும் பெருமையை இந்தியாவிற்கு முத்தையா வனிதா பெற்றுத்தருவார் என நம்புவோம்.

ரித்து கரிதால்

ரித்து கரிதால்

2007 ஆம் ஆண்டு இளம் விஞ்ஞானிக்கான விருதினை வென்ற ரித்து கரிதால் இந்தியாவின் “ராக்கெட் பெண்மணி” என அழைக்கப்படுகிறார். இளம் வயதிலேயே விண்வெளி குறித்து பேரார்வம் கொண்டிருந்த ரித்து லக்னோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டமும் Indian Institute of Science இல் முதுகலை பட்டமும் (Aerospace Engineering) பெற்றார். இதற்க்கு முன்னர் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷனில் ஆப்ரேசன் டைரக்டர் ஆக பணியாற்றினார்.

இஸ்ரோவில் மிக நீண்ட அனுபவம் கொண்ட ரித்து கரிதால் தற்போது சந்திரயான் 2 இன்  மிசன் டைரக்டர் ஆக பொறுப்பேற்று இருக்கிறார்.

சில சிறப்பம்சங்கள்

சந்திரயான் 2

தென் துருவத்தில் தரையிறங்குகிறது :

 

முதல் முறையாக “Soft Landing” முறையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திரயான் 2. ஏன் நிலவின் தென் துருவத்தை தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு “நிலவின் தென் துருவம் தான் பூமியுடன் தடையில்லா தொலைதொடர்பினை உகந்த பகுதி, மேலும் சூரிய ஒளியின் வாயிலாக மின்சாரத்தையும் தயாரிக்க முடியும், தரையிறங்குவதற்கு உகந்த பகுதி” என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 2 செலவு :

 

சந்திரயான் 2 திட்டத்தின் மொத்த செலவு 978 கோடி. ஆர்பிட்டர், ரோவர் , லேண்டர் ஆகியவற்றிற்காக 603 கோடியும் GSLV ராக்கெட்டுக்காக 375 கோடியும் செலவாகியிருக்கிறது.

 

ஆர்பிட்டர்,  ரோவர் , லேண்டர் :

ரோவர் நிலவில் இருக்கும் தாதுப்பொருள்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும், ஆர்பிட்டரானது தன்னுடைய சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்து ஆய்வினை மேற்கொள்ளும். லேண்டரில் இருக்கும் கருவிகள் நிலவு பகுதியின் அதிர்வு குறித்து ஆராயும்.

சந்திரயான் 2 வெற்றிபெற வேண்டும்

சந்திரயான் 2

சந்திரயான் 2 என்பது பூமிக்கு அப்பால் இஸ்ரோவினால் கையாளப்படும் மூன்றாவது திட்டம். குறிப்பாக இரண்டு பெண்களை தலைமையாக கொண்டிருக்கிற திட்டம். இந்திய மக்கள் மட்டுமல்லாது உலகமே தற்போது இஸ்ரோவின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டு இருக்கிறது. அதற்க்கு மிக முக்கியக்காரணம் மிகக்குறைந்த செலவில் வெற்றிகரணமான பல விண்வெளி பயணங்களை மேற்கொள்வதனால் தான். சந்திராயன் 2 வருகிற ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருக்கிறது. வெற்றியடைய வாழ்த்துவோம்





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular