Saturday, November 23, 2024
HomeUncategorizedTwitter ஐ இனி எலான் மஸ்க் வாங்க முடியாது? Shareholder rights plan ஐ ஏற்ற...

Twitter ஐ இனி எலான் மஸ்க் வாங்க முடியாது? Shareholder rights plan ஐ ஏற்ற ட்விட்டர் நிர்வாகம்?

யார் இந்த எலன் மஸ்க்

Elon Musk Trying To Buy Twitter

எலன் மஸ்க் ஏன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க நினைக்கிறார்? Shareholder rights plan என்றால் என்ன? வாருங்கள் விரிவாக பேசுவோம்.

சில நாட்களுக்கு முன்னதாக $43 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார் உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க். அப்படி அவர் வாங்கியிருந்தால் தற்போது பொது நிறுவனமாக இருக்கக்கூடிய ட்விட்டர் ஒரு தனியார் நிறுவனமாக மாறியிருக்கும். ஆனால் எலான் மஸ்க்கின் இந்த முடிவை ஏற்க விருப்பம் இல்லாத ட்விட்டர் நிர்வாகம் Shareholder rights plan ஐ ஏற்றுக்கொண்டுள்ளது. 

எலன் மஸ்க் ஏன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க நினைக்கிறார்? Shareholder rights plan என்றால் என்ன? வாருங்கள் விரிவாக பேசுவோம்.

Neuralink’s Elon musk brain reading tech

I made an offer https://t.co/VvreuPMeLu

— Elon Musk (@elonmusk) April 14, 2022

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவரும் உலகின் நம்பர் 1 பணக்காரரும் ஆகிய எலான் மஸ்க் ட்விட்டரில் மிகவும் தீவிரமாக இயங்கக்கூடிய நபர். மிகவும் சுவாரஸ்யமாகவும் தீவிரமாகவும் கருத்துக்களை பகிரக்கூடியவர். ஆகையால் அவருக்கு பாலோயர்ஸ் மிகவும் அதிகம். சில சமயங்களில் ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கூட அவர் விமர்சனம் செய்வது உண்டு. ஒரு முழுமையான கருத்து சுதந்திரம் ட்விட்டரில் இல்லை என்பது அவரது விமர்சனம். அப்படி விமர்சனம் செய்தவர் “பரந்த கருத்து சுதந்திரம் கொண்ட சமூக வலைத்தளம் வேண்டுமா என்ற கேள்வியையும் முன்வைத்தார். 

மஸ்க் இவ்வாறு கூறியவுடன் புதியதொரு சமூக வலைத்தளத்தை இவர் உருவாக்கப்போகிறாரோ என பலரும் நினைத்தனர். ஆனால், அவர் அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் ட்விட்டர் பங்குகளை வாங்கினார். சுமார் 9.2% பங்குகளை அவர் வாங்கினார். இதன் மூலமாக ட்விட்டர் நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை வைத்திருப்பவர் ஆனார். இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைக்குழுவில் மஸ்க் இடம் பெறுவார் என்றும் இனி ட்விட்டர் பல மாற்றங்களை சந்திக்கும் என்றும் எதிர்பாக்கப்பட்டது. ஆனால் இங்கே மீண்டும் ஒரு ட்விஸ்ட் வைத்தார் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தின் அழைப்பை நிராகரித்தார்.


சரி, எலன் மஸ்க் ஒதுங்கி இருக்க நினைக்கிறார் என அனைவரும் நினைக்கையில் மீண்டும் ஒரு ஆச்சர்யத்தை கொடுத்தார். ஆமாம், ட்விட்டர் நிர்வாகம் தனியார் நிறுவனமாக இல்லாததால் தான் அதன் செயல்பாடு சரி இல்லை. ஆகவே, அதன் ஒவ்வொரு பங்கையும் $54.20 க்கு வாங்கிக்கொள்ள விரும்புகிறேன் என விண்ணப்பம் செய்தார். இதன் மொத்த மதிப்பு  $43 பில்லியன் டாலர்கள். 

 

இதனால் ட்விட்டர் நிறுவனமே அதிர்ந்தது. நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இடையே விமர்சனங்கள் எழுந்தன. மீண்டும் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை குழு கூடியது. அங்கே விவாதிக்கப்பட்டு பின்னர் எலன் மஸ்க் போன்ற தனி நபர்களோ அல்லது இன்னொரு நிறுவனமோ ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை மொத்தமாக வாங்குவதை தடுக்க “Shareholder rights plan” ஐ ஏற்பதாக அறிவித்தது. 

 

Shareholder rights plan என்பது குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை ஒரு தனி நபரோ அல்லது இன்னொரு நிறுவனமோ மொத்தமாக பங்குகளை வாங்குவதை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. உதாரணத்திற்கு, ட்விட்டர் நிறுவனத்தின் 15% பங்குகளை எலன் மஸ்க் மொத்தமாக வாங்க நினைத்தார் என்றால் Shareholder rights plan வேலை செய்திட ஆரம்பிக்கும். இதன்படி, மஸ்க் தவிர்த்த மற்ற முதலீட்டாளர்கள் ஒரு பங்கின் விலைக்கு இரண்டு பங்குகளை வாங்கிக்கொள்ள முடியும். அதாவது, அந்த நேரத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு $100 டாலர் எனில் $100 க்கு இரண்டு பங்குகளை வாங்க முடியும். இதனால் பலரும் பங்குகளை வாங்குவார்கள். ஆகவே, பங்குகளின் மதிப்பு வேகமாக உயரும். இதனால் பங்குகளை வாங்க எலன் மஸ்க் செலவு செய்ய வேண்டிய தொகை அதிகமாகும். ஆகவே அவர் வாங்க மாட்டார்.

கொரோனா காலகட்டத்தில் சிக்கலில் தவித்த பல நிறுவனங்கள் தங்களை மற்றொரு நிறுவனம் அல்லது தனி நபரிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள இந்த Shareholder rights plan ஐ ஏற்றுக்கொண்டன. இப்போது ட்விட்டர் நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எலன் மஸ்கின் கனவு நனவாகவில்லை. 



Get updates via whatsapp

Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular