Tor Browser
ஆண்ட்ராய்டு இல் தற்போது கிடைக்கின்ற Tor Browser மூலமாக பிரவுஸ் செய்திடும் போது யாராலும் உங்களது இணைய நடவடிக்கைளை கண்காணிக்க முடியாது
நமது பெரும்பாலான செயல்பாடுகள் அனைத்துமே மொபைல், இன்டர்நெட் சார்ந்தே இருக்கிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசு புலனாய்வு அமைப்புகள், பிற ஏஜென்சிகள் என பலரும் நாம் இணையத்தில் என்ன செய்கிறோம் என்பதனை கண்காணிக்க முடியும். நீங்கள் சமூகத்தில் முக்கிய நபராக இருந்தால் கண்காணிப்பு வளையத்திற்குள் நிச்சயமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனை தவிர்க்க, இணையத்தில் உங்களது அடையாளங்களை மறைத்து செயல்பட VPN என போன்ற வசதிகள் இருக்கின்றன. ஆனால் இதற்கு சில சமயம் பணம் செலுத்த வேண்டி வரும், அதேபோல நீங்கள் தனியாக VPN ஆப்பை இன்ஸ்டால் செய்யவேண்டி வரும்.
Tor browser ஆனது உங்களுக்கு முழுமையான பிரைவேசியை தரும், தற்போது ஆண்ட்ராய்டில் இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இதற்காக VPN போன்றவற்றை பயன்படுத்திட தேவை இல்லை. ஒவ்வொருமுறை நீங்கள் இந்த பிரவுசரை ஆன் செய்யும் போதும் என்கிரிப்ட் செய்யப்பட்ட சர்வர்களின் மூலமாக உங்களது தகவல்கள் அனுப்பப்படும். ஆகையினால் நீங்கள் குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை காண சர்ச் செய்கிறீர்கள் எனில் அந்த இணையதளத்தை நேரடியாக தொடர்பு கொள்ளாமல் என்கிரிப்ட் செய்யப்பட்ட சர்வர்களின் மூலமாக தொடர்பு கொள்ளப்படும். இதனால் உங்களுடைய IP தகவல்கள் யாராலும் கண்டறிய முடியாதபடி மறைக்கப்படும்.
முன்பிருந்த Tor Browser ஆப்பில் Orbot/Orfox app மூலமாக மட்டுமே முழு பிரைவேசியுடன் பிரவுஸ் செய்திட முடியும். ஆனால் புதிய Tor browser இல் அப்படி இல்லை, நீங்கள் நேரடியாகவே ஆப்பினை பயன்படுத்தலாம். இந்த பிரவுசரை பயன்படுத்தினால் யாரும் உங்களை கண்காணிக்க இயலாது, விளம்பர நிறுவனங்கள் கூட உங்களை பின்தொடர முடியாது. நீங்கள் ஒரு சமூக செயற்பாட்டாளராக அல்லது செய்தி சேகரிப்பாளராக இருந்தால் உங்களுக்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கண்காணிக்க முடியாது என்ற காரணத்தினால் தவறான செயல்களில் ஈடுபடுவோருக்கும் இந்த ஆப் பயன்படும் என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது.
தற்போது ஆண்ட்ராய்டு இல் மட்டுமே இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளது. IOS இல் இந்த ஆப்பிற்கு அனுமதி இல்லை, Onion Browser பிரவுசரை ஆப்பிள் பயனாளர்கள் பயன்படுத்தலாம்.
நீங்கள் நல்ல விசயத்திற்க்காக பயன்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.