Sunday, November 24, 2024
HomeAppsடிக்டாக்கில் நவம்பர் முதல் விளம்பரங்கள் | TikTok starts monetising in india from November

டிக்டாக்கில் நவம்பர் முதல் விளம்பரங்கள் | TikTok starts monetising in india from November

TikTok starts monetising

நடந்த நவம்பர் மாதம் முதலே இந்தியாவில் இருக்கக்கூடிய விளம்பர நிறுவனங்கள் மற்றும் பல கம்பெனிகளிடம் தனது ஆப் குறித்தும் அதில் இருக்கும் பயனாளர்கள் குறித்தும் பேசி விளம்பரதாரர்களாக்க டிக்டாக் முயன்று வந்தது. டிக்டாக் ஆப்பில் முதல் விளம்பரதாரராக இணைந்திருப்பது Voonik நிறுவனம் தான்


அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தினால் தடைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தது டிக்டாக். இந்தியாவில் அதிகப்படியான நபர்களால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் சில ஆப்களில் டிக்டாக் ஆப்பும் ஒன்று. இதுவரை டிக்டாக் ஆப்பில் விளம்பரங்கள் காண்பிக்கப்படுவது இல்லை. ஆனால் மிகப்பெரிய அளவில் பயனாளர்களை கொண்டிருக்கும் டிக்டாக் ஆப் நவம்பர் மாதம் முதல் விளம்பரங்களை காண்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்த நவம்பர் மாதம் முதலே இந்தியாவில் இருக்கக்கூடிய விளம்பர நிறுவனங்கள் மற்றும் பல கம்பெனிகளிடம் தனது ஆப் குறித்தும் அதில் இருக்கும் பயனாளர்கள் குறித்தும் பேசி விளம்பரதாரர்களாக்க டிக்டாக் முயன்று வந்தது. டிக்டாக் ஆப்பில் முதல் விளம்பரதாரராக இணைந்திருப்பது Voonik நிறுவனம் தான்.


டிக்டாக் ஆப் கூறுவது என்ன?


டிக்டாக் ஆப்பின் மூல நிறுவனமான ByteDance இன் Head of Ad Sales அதிகாரி பேசும் போது ” டிக்டாக் ஆப்பிற்கு இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மேலும் டிக்டாக் ஆப்பினை சராசரியாக நாளொன்றுக்கு 106 நிமிடங்கள் கிராமப்புறங்களில் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக எளிமையாக நிறுவனங்கள் தங்களது பொருள்களை எளிமையாக அவர்களிடம் சந்தை படுத்திட இயலும்”

டிக்டாக் ஆப்பில் வரும் நவம்பர் முதல் “Full length vertical and In Feed Native Video” format விளம்பரங்களை காணலாம்.

பயனாளர்களுக்கு இது தொந்தரவாக இருக்கப்போகிறதா? Youtube போன்று வீடீயோ உரிமையாளர்களுக்கும் பங்குத்தொகை கொடுக்கப்படுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular