Tik Tok Banned
டிக்டாக் செயலியை டவுண்லோடு செய்வதற்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கும் டிக்டாக் செயலி வீடியோக்களை ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
TikTok Mobile App
ஏற்கனவே இருக்கின்ற ஆடியோவிற்கு ஏதுவாக வாயசைத்தோ அல்லது நடித்தோ வீடியோவாக மாற்றி நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுகிற ஆப் “டிக் டாக்” [Tik Tok]. கிட்டத்தட்ட மொபைல் வைத்திருக்கும் அனைத்து இளைஞர்களின் ஆப் லிஸ்டில் கண்டிப்பாக டிக் டாக் இருக்கும். உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் ஆப்களின் வரிசையிலும் டிக் டாக் இடம்பிடித்துள்ளது. பலர் இதற்க்கு அடிமையாகி விட்டார்கள் என்றே கூறலாம். அப்படி அடிமையானவர்கள் எப்படி மீள்வது என முன்பே நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்
சீனாவை சேர்ந்த Byte Dance எனும் நிறுவனத்தால் இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுமைக்கும் 500 மில்லியன் பயன்பாட்டாளர்களையும் இந்தியாவில் 104 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களை கொண்டிருக்கிறது.
டிக் டாக் செயலி தடை – சரியான தீர்வா?
டிக்டாக் ஆப்பிற்கு அடிமையாக வேண்டாம்?
Why court banned TikTok App?
டிக் டாக் ஆப்பானது கலாச்சாரத்தை சீர்குலைக்கின்ற விதமாகவும் [Degrading Culture] பாலியல் விசயங்களை ஊக்குவித்து [encouraging pornography] அதன் மூலமாக பாலியல் குற்றங்களுக்கு காரணமாகவும் இருக்கிறது. மேலும் பிறருக்கு தொந்தரவு கொடுக்கிற தகவல்களையும் சமூகத்திற்கு களங்கம் விளைவிக்கக்கூடிய விசயங்களையும் இளைஞர்களுக்கு மருத்துவரீதியான பிரச்சனைகளை உருவாக்கிடும் படியும் இருப்பதனால் டிக் டாக் ஆப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“Chennai High Court Banned Tik Tok Mobile App”
டிக் டாக் ஆப்பிற்கு தடை கேட்டு தொடரப்பட்ட மனுவில் ” தற்போது பெரும்பாலான இளைஞர்களால் பயன்படுத்தப்படுகின்ற டிக் டாக் ஆப்பில் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ இணைந்து வீடீயோ எடுத்து பகிர்கிறார்கள் . மேலும் டூயட் வீடியோக்களை split screen எனப்படும் வசதியின் மூலமாக யாரென்றே தெரியாத நபருடன் இணைந்து செய்தும் வெளியிடுகின்றனர். வயதில் குறைந்தவர்கள் இந்த ஆப்பினை பயன்படுத்துவதனால் பாதிக்கப்படுகின்றனர் அதோடு சேர்த்து அவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கும் தெரியப்படுகிறார்கள். இதுபோன்ற காரணங்களுக்காக இந்தோனீசியா மற்றும் வங்கதேசத்தில் டிக் டாக் ஆப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் குழந்தைகள் மீதான தாக்குதலை தடுக்கும் விதமாக அமெரிக்காவில் Children Online Privacy Act எனும் சட்டமும் குழந்தைகளை பாதுகாக்க இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் இணையத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எளிதில் அடையாளம் காண இயலாது என்பதனை பயன்படுத்திக்கொண்டு பயப்படாமல் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
எப்படி ரஷ்யாவில் இருந்து வந்த ப்ளூவேல் விளையாட்டு மிகவும் ஆபத்தான விளையாட்டாக கருதி கோர்ட் தடைவிதித்தது. ஆனால் அதன் பின்னரும் ஆட்சி நடத்துபவர்கள் ஆபத்தான இணைய விளையாட்டுகள் குறித்த கவனம் கொண்டிராமல் இருக்கின்றனர். மூன்றாம் நபரை பயன்படுத்தி உருவாக்கப்படும் சிரிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை சட்டமியற்றுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.தொலைக்காட்சி உள்ளிட்ட தளங்களிலும் டிக் டாக் போன்ற வீடியோக்கள் ஒளிபரப்படுகின்றன.
டிக் டாக் போன்ற ஆப்களில் பாலியல் சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்றும் தேவையில்லாத தகவல்கள் இருப்பதனை அறிய முடிகிறது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எளிமையாக தவறிழைப்பவர்களின் கைகளுக்கு சென்று சேர இவ்வகையான ஆப்கள் பயன்படுகின்றன. மேலும் இந்த ஆப்களில் யாரென்றே தெரியாத நபர் கூட குறிப்பிட்ட குழந்தை அல்லது பெண்கள் அல்லது அந்த நபரை தொடர்பு கொள்ள முடியும். இதன் மூலமாக குழந்தைகள் எளிமையாக ஏமாற்றப்பட்ட அதிக வாய்ப்புகள் உண்டு.
இதற்கு உதாரணங்களாக, இந்த ஆண்டு மார்ச் 27 அன்று ஒரு பெண்ணுடன் இருந்த வீடியோவை வெளியிட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது, டிக் டாக் ஆப் பயன்படுத்தியதை பாட்டி கண்டித்ததால் 15 வயது பெண் மும்பையில் தற்கொலை, டிக் டாக் இல் வால்பாறையில் செல்பி வீடியோ எடுத்தவர் மரணம் என உதாரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆபத்தான நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பாக அரசாங்கம் நடவெடிக்கை எடுக்க வேண்டும். யாராவது ஒருவர் வழக்கு தொடுத்து நீதிமன்றம் உத்தரவிடும் வரை காத்திருக்க கூடாது.
மேற்கூறியவற்றை வலியுறுத்துவதோடு பின்வரும் உத்தரவுகளையும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது,
>> டிக் டாக் மொபைல் ஆப் டவுன்லோடு செய்வதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
>> மீடியாவில் டிக் டாக் வீடியோ ஒளிபரப்ப தடைவிதிக்கப்படுகிறது.
>> குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க அமெரிக்காவை போன்று Children Online Privacy Act ஏன் கொண்டுவரக்கூடாது?
பெரும்பாலான இளைஞர்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டு வந்த டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டுள்ளது. டிக் டாக் ஆப் மட்டுமின்றி இன்னும் பல ஆப்கள் இப்படி குற்றச்செயல்களை பரப்பும் விதமாகவும் குற்றவாளிகள் நமது தகவல்களை எளிமையாக பெறுகின்ற விதமாகவும் இருக்கின்றன. மிகப்பிரபலமடையும் ஆப்கள் தொடர்ச்சியாக அரசின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவது இக்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்று.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.
What you think?
[…] டிக் டாக் ஆப்பானது கலாச்சாரத்தை சீர்குலைக்கின்ற விதமாகவும் [Degrading Culture] பாலியல் விசயங்களை ஊக்குவித்து [encouraging pornography] அதன் மூலமாக பாலியல் குற்றங்களுக்கு காரணமாகவும் இருக்கிறது. மேலும் பிறருக்கு தொந்தரவு கொடுக்கிற தகவல்களையும் சமூகத்திற்கு களங்கம் விளைவிக்கக்கூடிய விசயங்களையும் இளைஞர்களுக்கு மருத்துவரீதியான பிரச்சனைகளை உருவாக்கிடும் படியும் இருப்பதனால் டிக் டாக் ஆப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]
[…] இருப்பதனால் டிக் டாக் ஆப்பிற…. மத்திய […]