இன்றைய தொழில்நுட்ப செய்திகள்
டிரம்ப் பதிவுகளை ஊக்குவிக்கப்போவதில்லை Snapchat அறிவிப்பு
கறுப்பினத்தவர் ஒருவர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததை தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறையும் போராட்டமும் பரவி இருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். அவற்றை ட்விட்டர் வன்முறையை தூண்டும் பதிவு என வகைப்படுத்தி இருந்தது. தற்போது Snapchat நிறுவனமும் இதில் இணைந்துள்ளது. அந்த நிறுவனம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், அதிபர் டிரம்ப் கணக்கில் இருந்து வரும் பதிவுகளை அவரை பின்தொடராதவர்களுக்கும் காண்பித்து [Promoting] ஊக்குவிக்கப்போவது இல்லை என தெரிவித்துள்ளது.
ஆனால் அதிபர் டிரம்ப் கணக்கை பின்தொடர்கிறவர்களுக்கு வழக்கம் போல பதிவுகள் காண்பிக்கப்படும். அதுதவிர மற்றவர்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது.
ட்விட்டரை சோதித்த நபர், காத்திருந்த அதிர்ச்சி
Experiment Update – Well it finally happened. Took longer than expected. 12 hour suspension and had to delete the offending tweet. Here’s the screenshots @suspendthepres. Will post to the account when suspension is lifted. pic.twitter.com/wvKV9HDKBn
— Bizarre Lazar (@BizarreLazar) June 1, 2020
பொதுவாகவே பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் விதமான பதிவுகளை பதிவிட்டால் அதனை உடனடியாக கண்டுபிடித்து அந்த நிறுவனங்கள் நீக்கிவிடும். தொடர்ச்சியாக செய்தால் குறிப்பிட்ட அந்த கணக்கையே நீக்கவும் செய்வார்கள். ஆனால் அதிபர் டிரம்ப் கணக்கை ஏன் ட்விட்டர் இதுவரைக்கும் தாற்காலிகமாகக்கூட நீக்கவில்லை என நினைத்த ஒரு நபர் ட்விட்டரை சோதிக்க நினைத்தார்.
அதன்படி, அமெரிக்க அதிபர் என்ன பதிவை இடுகிறாரோ அதனை அப்படியே இன்னொரு கணக்கிலும் பதிவிட்டார். கொள்ளை ஆரம்பிக்கும் போது துப்பாக்கிசூடும் ஆரம்பிக்கும் என்ற அதிபர் டிரம்ப் போட்ட ஒரு பதிவை இவரும் பதிவிட அந்தப்பதிவை “வன்முறையை தூண்டும் பதிவு” என்று கூறி கணக்கையும் தற்காலிகமாக முடக்கிவிட்டார்கள். மேலும் அந்தப்பதிவை நீக்கினால் மட்டுமே மீண்டும் கணக்கை பயன்படுத்த முடியும் என்ற நிலையும் உருவானது. அவர் பதிவை நீக்கிய பிறகு 12 மணிநேர தற்காலிக முடக்கம் துவங்கியது.
ஆக ட்விட்டர் அதிபர் டிரம்ப் பதிவை ஒரு மாதிரியாகவும் சாதாரண மனிதரின் பதிவை வேறொரு மாதிரியாகவும் பார்ப்பது தெரிய வந்துள்ளது என அந்த நபர் தெரிவித்து இருக்கிறார்.
ஆன்லைனில் வெளியான Redmi 9 போட்டோக்கள்
வருகிற ஜூன் 25 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் Redmi 9 மொபைலின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. Redmi 9A, Redmi 9C, மற்றும் Redmi 9 என மூன்று மொபைல் போன்கள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இணையத்தில் வெளியான புகைப்படங்கள் பற்றி அதிகாரபூர்வமாக ரெட்மி சார்பில் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்தப்புகைப்படங்களை பார்க்கும் போது இரண்டு நிறங்களில் Redmi 9 போன் வெளியாகலாம்.
Zoom to exclude free calls from end-to-end encryption
போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்ற குற்றசாட்டு பிரபல வீடியோ கான்பரன்சிங் தளமான Zoom மீது வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் Zoom நிறுவனத்தின் தலைமை அதிகாரி எரிக் யுவான் [Eric Yuan] பேசும்போது இலவச அழைப்புகளுக்கு end-to-end encryption என்ற பாதுகாப்பு வசதி நீக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த வசதி நீக்கப்பட்டால் அழைப்புகளை இடைமறித்து கேட்பது என்பது எளிதான விசயமாக மாறும். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி பேசும்போது, பலர் Zoom ஆப்பை தவறான காரணங்களுக்காக பயன்படுத்துகிறார்கள் எனவும் இதுதொடர்பாக நாங்கள் அமெரிக்க காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Delhi Corona app
தற்போது டெல்லி மாநில அரசால் ஒரு ஆப் “Delhi Corona app” வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலமாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தயாராக இருக்கும் இருக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர் போன்றவற்றின் தகவல்களை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். மருத்துவமனைகளில் இருக்கைகள் காலியாக இருக்கும் போதே பொதுமக்களிடமிருந்து மருத்துவமனைகளில் இடமில்லை என்கிற குற்றசாட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தான் இந்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக டெல்லி அரசு இந்த ஆப்பை வெளியிட்டு இருக்கிறது.
லைக் பட்டனை அழுத்தி இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பெற்றிடுங்கள்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.