Saturday, November 23, 2024
HomeUncategorizedஇன்றைய தொழில்நுட்ப செய்திகள் | Tech News in Tamil - June 06

இன்றைய தொழில்நுட்ப செய்திகள் | Tech News in Tamil – June 06

ஆபத்தான ஷாப்பர் மால்வேர், உங்க போன் பாதிக்கப்பட்டிருக்கா? | Shopper Malware
இன்றைய தொழில்நுட்ப செய்திகள்

Photo Room App

பின்புறத்தை [background] துல்லியமாக நீக்கிவிட்டு மற்றொரு பின்பக்கத்தை செட் செய்கின்ற ஆப் தான் Photo Room App. தற்போது ஐபோன் பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த ஆப்பை அதிகம் பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இதில் இருக்கும் water mark ஐ நீக்க விரும்பினால் [$9.49 per month or $46.99 per year]  கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்.

View this post on Instagram

Want some tea 🍵 ?

A post shared by PhotoRoom (@photoroom_app) on

விளம்பரங்கள் – பேஸ்புக் தடை

facebook mark zukerberg

வரப்போகும் அமெரிக்க தேர்தலில் வெளிநாடுகளின் பங்கேற்பை தடை செய்வதன் ஒரு பகுதியாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள் பேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது என பேஸ்புக் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பக்கங்களை  லேபிள் செய்யவும் துவங்கியுள்ளது. அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் வன்முறையை தூண்டும் விதத்திலான கருத்துக்களை பேஸ்புக் நீக்கவில்லை என்பது குறித்த அதிருப்தி நிலவியது குறிப்பிடத்தக்கது. 

அமேசான் – பாரதி ஏர்டெல்

அமேசான் நிறுவனம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பாரதி ஏர்டெல் இந்தியாவின் பங்குகளை வாங்க ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பாரதி ஏர்டெல் இந்தியாவின் 5% பங்குகளை அமேசான் நிறுவனம் வாங்கலாம். ஏற்கனவே இந்தியாவில் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் ஏர்டெல் பங்குகளை வாங்குவதன் மூலமாக இந்திய டெலிகாம் துறையிலும் அமேசான் நுழைகிறது. 

பேஸ்புக் போட்டோக்களை கூகுள் போட்டோஸ் க்கு மாற்றும் வசதி

கடந்த ஜனவரி மாதத்தில் உலகிலேயே சிறந்த சாட்பாட் [chatbot] எங்களுடைய மீனா சாட்பாட் தான் என கூகுள் அறிவித்து இருந்தது. இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 29 அன்று பேஸ்புக் அவர்களது பிளாக்கில் வெளியிட்ட பதிவில் தற்போதைக்கு உலகில் சாட்பாட்களிலேயே எங்களுடைய பிளெண்டர் தான் சிறந்தது என கூறியிருக்கிறது.

பேஸ்புக்கில் இருக்கும் உங்களது போட்டோக்களை “Google Photos” க்கு பதிவேற்றம் செய்ய விரும்பினால் இப்போது அதனை மிக எளிமையாக செய்துமுடிக்க முடியும். ஏற்கனவே  சோதனை அளவில் இருந்த இந்த வசதியை பேஸ்புக் தற்போது அனைத்து பயனாளர்களுக்கும் கொடுத்துள்ளது. 

 

நீங்கள் இந்த வசதியை பயன்படுத்த, 

 

“Settings” ஆப்சனுக்குள் சென்று “Your Facebook Information” என்ற ஆப்ஷனை கிளிக் செய்திடுங்கள் 

 

“Transfer a copy of your photos and videos” இதை கிளிக் செய்திடுங்கள் 

 

உங்களது கூகுள் பாஸ்வேர்டை கொடுத்திடுங்கள் 

 

இப்போது உங்களது பேஸ்புக் போட்டோஸ் கூகுளில் பதிவேற்றம் ஆகும். 

 

 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular