Sunday, October 6, 2024
HomeApps"கூகுள் கிளாஸ்ரூம்" பற்றி தெரியுமா? | Teachers and Parents Should Know About Google...

“கூகுள் கிளாஸ்ரூம்” பற்றி தெரியுமா? | Teachers and Parents Should Know About Google Class Room

கூகுள் கிளாஸ்ரூம்

Google Classroom

தற்போது ஆண்ட்பள்ளிக்கு செல்ல முடியாத ஆசிரியர்களும் மாணவர்களும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு ஆன்லைன் வகுப்பறையை இலவசமாக நடத்திட முடியும். கூகுள் நிறுவனம் இதற்காகவே Google Class Room என்ற செயலியை உருவாக்கி இருக்கிறது.

இன்று ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வீட்டிற்குள் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையாக இருப்பது பிள்ளைகளின் கல்வி தடைபட்டுவிட்டதே என்பதுதான். ஆனால் ஆசிரியர்கள் மனது வைத்தால் தொழில்நுட்பத்தின் வாயிலாக ஆன்லைனில் தங்களது வகுப்பறையை நடத்திட முடியும். ஆம், பெற்றோர்கள் இந்த வசதியினை கண்டிப்பாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த கட்டுரையில் Google Class Room அப்ளிகேஷன் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை தான் உங்களுக்கு கொடுக்கப்போகிறேன். நீங்கள் இந்த அறிமுகத்தோடு உள்ளே சென்றால் உங்களால் பிற விசயங்களையும் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும்.

Google Classroom என்றால் என்ன?

கூகுள் கிளாஸ்ரூம்

மேலெழுந்தவாரியாக இந்த பெயரை கேட்போர் ஆசிரியர் நேரடியாக இதில் வீடியோ வடிவில் பாடம் நடத்துவார் மாணவர்கள் பார்த்துக்கொள்ள முடியும் என்று தான் பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்வார்கள்.[Google Meet, Google Hangout போன்றவை அதற்கு இருக்கின்றன]. ஆனால் உண்மையில் கூகுள் கிளாஸ்ரூம் அதுவல்ல. கூகுள் கிளாஸ்ரூம் ஆனது ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துரையாடலில் ஈடுபடவும் வீட்டுப்பாடங்களை [assignment] வழங்கிடவும் அதை திருத்தி அது பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு வழங்கிடவும் பல்வேறு ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு ஆசிரியர் ஒரு பாடம் குறித்து வகுப்பு நடத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அதனை அவர் யூடியூப் மூலமாக பதிவேற்றம் செய்து வெளியிடலாம் அல்லது Google Meet, Google Hangout போன்ற ஆப்களை பயன்படுத்தி நேரடியாகவே நடத்தலாம். அப்படி நடத்திய வீடியோவை ஆசிரியரால் Google Classroom இல் மாணவர்களுக்கு பகிர முடியும். மேலும் அந்த பாடத்திட்டம் குறித்து அவர் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கலாம், ஒரு ஆன்லைன் தேர்வை நடத்தலாம். அவர்களுக்கு அதை திருத்தி அந்த தகவலையும் அங்கேயே கொடுக்கலாம்.

Google Classroom ஐ எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் இதற்கு ஒரு கூகுள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக்கொள்ள வேண்டும் [ஜிமெயில் ஐடி பெறுவது எப்படி?]

 

இந்த URL ஐ கிளிக் செய்து அதில் உள்நுழையுங்கள்

https://classroom.google.com/

வலது மேற்புறத்தில் இருக்கும் + பட்டனை அழுத்தினால் உங்களுக்கு இரண்டு ஆப்சன்கள் தோன்றும்

 

>> Join Class

 

>> Create Class

 

Join Class – நீங்கள் மாணவராக இருந்தால் Join Class ஆப்ஷனை கிளிக் செய்திடுங்கள். உங்களது ஆசிரியரிடம் உங்கள் வகுப்பிற்கான Code ஐ கேட்டுப்பெறுங்கள். அதை அங்கே உள்ளீடு செய்தால் உங்களால் வகுப்பில் இணைந்துகொள்ள முடியும்.

 

நீங்கள் ஒரு ஆசிரியராக இருக்கின்ற பட்சத்தில் Create Class ஆப்சனை கிளிக் செய்திடுங்கள்

 

விதிமுறைகளை படித்துவிட்டு “i have read …” அந்த ஆப்சனை டிக் செய்து continue கொடுங்கள்

இப்போது பின்வரும் படத்தில் இருக்கின்ற ஆப்சன்கள் உங்களுக்கு தெரியும். அதை பூர்த்தி செய்திடுங்கள்

step 1create class

அவ்வளவு தான் உங்களுக்கான வகுப்பறை துவங்கப்பட்டுவிட்டது.

 

இப்போது மாணவர்களை இதில் இணைக்க வேண்டும். இதற்கு இரண்டு வழிகள் உண்டு. முதலாவதாக நீங்கள் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியை people க்கு அருகே இருக்கும் பட்டனை அழுத்தி அதில் கொடுத்து இணைக்கலாம். இல்லையெனில் அங்கு காட்டப்படும் Code ஐ மாணவர்களிடம் கொடுத்தால் அவர்களால் அதைவைத்து உங்களது வகுப்பில் சேர்ந்துகொள்ள முடியும். நீங்கள் விரும்பினால் பிற ஆசிரியர்களையும் இதில் இணைக்க முடியும்.

 

join students in google classroom

Class Work என்ற பகுதிக்குள் நுழைந்தால் அங்கே பல்வேறு ஆப்சன்கள் இருக்கும். அவற்றை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Assignment கொடுக்க முடியும், ஆன்லைன் தேர்வுகளை எழுத முடியும். இவை அனைத்தையுமே மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் மொபைல் போன்களில் கூகுள் கிளாஸ்ரூம் ஆப்பை டவுன்லோட் செய்துகொண்டு செய்ய முடியும்.

கிட்டத்தட்ட ஒரு வகுப்பறையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக செய்திட முடியும்.

quiz assignment in google classroom




Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular