Site icon Tech Tamilan

சாதனையாளர் ஸ்ரீதர் வேம்பு வெற்றிக்கதை? எப்படி ஜெயித்தார் ஸ்ரீதர் வேம்பு? Success story of Sridhar Vembu In Tamil

Succcess Story Of Sridar Vembu

இந்தியாவில் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு சிலிகான் வேலியில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களால் உருவாக்கப்படும் மென்பொருள்களுக்கு இணையான மென்பொருள்களை தனது ZOHO நிறுவனம் மூலமாக உருவாக்கி வருகிறார். இவருக்கு அண்மையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்முனைவோர்களின் ஆதர்ச நாயகனாக வளம் வருகிறார் தமிழகத்தில் பிறந்து பெரும் தொழிலதிபராக சாதனை படைத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீதர் வேம்பு. தற்போது தென்காசியின் மிகச்சிறிய கிராமத்தில் தங்கி தனது அலுவல் பணிகளை மேற்கொண்டிருக்கும் இவர் சிலிகான் வேலியில் தான் மிகப்பெரிய மென்பொருள்கள் [Software] தயாரிக்க முடியும் என்ற கோட்பாட்டை தகர்த்தெறிந்து கிராமப்பகுதியில் இருந்தும் கூட உலகின் சிறந்த மென்பொருள்களை தயாரித்து வழங்க முடியும் என நிரூபித்துக்கொண்டு இருக்கிறார். சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் உயர் பதவியை பெரும்போதெல்லாம் நாம் பாராட்டுகிறோம். எவ்வளவு உயர்ந்த பதவியென்றாலும் கூட சுந்தர் பிச்சை அதன் உரிமையாளர் இல்லை. ஆனால் ஸ்ரீதர் வேம்பு ZOHO என்ற நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். அந்த வகையில் அவர் சிறந்தவர் ஆகிறார். யார் இந்த ஸ்ரீதர் வேம்பு? வாருங்கள் அவரைப்பற்றி அறிவோம். 

ஸ்ரீதர் வேம்பு இளமைப்பருவம்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில்  ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீதர் வேம்பு. தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராபர் பணியில் இருக்க இவர் தனது பள்ளிப்படிப்பை அரசு உதவிபெறும் கல்லூரியில் தான் முடித்தார். பின்னர் சென்னை ஐஐடியில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். 1989 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது மின் பொறியியலையும் [Electrical Engineering] முடித்தார். பி.எச்.டி முடித்த பின்னர், 1994 இல் சான் டியாகோவில் இருக்கும் குவால்காமில் [Qualcomm ] சேர்ந்தார். அங்கிருந்த போது . குறிப்பாக, CDMA, power control மற்றும் தொலைதொடர்பில் சிக்கலான பிரச்சனைகள் குறித்த வேலைகளில் ஈடுபட்டார்.

 

தற்போது மிகப்பெரிய தொழிலதிபராக வளம் வந்தபோதும் கூட சமூகத்தை பற்றிய அக்கறை கொண்டிருக்கும் ஸ்ரீதர் வேம்பு அவர்கள் இளம் வயதிலும் அவ்வாறே இருந்தார். ஆமாம், தான் பொறியியல் துறையில் வேலை செய்தாலும் கூட அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் [Political Science and Economics] இவற்றின் மீது அக்கறை கொண்டிருந்தார். இதனால் நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அவரிடம் ஏற்பட்டது. குறிப்பாக, ஜப்பான், சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட நாடுகளில் எப்படி வணிகங்கள் நடைபெறுகின்றன என்பது குறித்தும் அங்கே எப்படி பொருளாதாரம் வேலை செய்கிறது என்பது பற்றியும் அறிந்துகொள்ள முயற்சி செய்தார். 

 

இந்தியாவில் சோசலிசம் தான் மிகப்பெரிய பிரச்சனை என்பதை அறிந்துகொண்ட ஸ்ரீதர் வேம்பு அதனை சரி செய்திட விரும்பினார். அதற்கு ஏற்றாற்போல தனது தம்பி இந்தியாவில் நிறுவனம் துவங்குவது சம்பந்தப்பட்ட யோசனையுடன் வந்தபோது அதனை ஏற்று அவர் இந்தியாவிற்கு வந்தார், வேலையை விட்டுவிட்டு. இந்தியாவில் அடிப்படை பிரச்சனைகளாக என்ன இருக்கின்றன என்பதை கவனித்து அதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் இவர்களது பயணம் அமைய வேண்டும் என எண்ணினார்கள். 

 

நெட்ஒர்க் மேனேஜ்மெண்ட் துறையில் ஏற்கனவே அனுபவம் வாய்ந்த டோனி தாமஸ் என்பவருடன் இணைந்து சென்னையில் சிறிய அபார்ட்மெண்டில் Vembu Software நிறுவனம் துவங்கப்பட்டது. இது நடந்தது 1996. 

Zoho Corporation உருவானது எப்படி?

இந்தியாவில் தற்போது பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெற்றிநடை போடுகின்றன. மேம்போக்காக பார்த்தால் அந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கியவர்கள் இந்தியர்களாக இருப்பார்கள். ஆனால் அதிலே அதிகபட்ச முதலீடுகளை செய்திருப்பது வெளிநாட்டு நிறுவனங்களாக இருக்கும். ஸ்ரீதர் வேம்பு இதில் ஒரு முன்மாதிரி, ஆமாம், தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களின் உதவிபோக வேறெங்கும் இருந்து அவர் முதலீட்டை பெறவில்லை. தற்போதும் கூட Zoho Corporation இல் பல  நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் முதலீடு செய்திட விருப்பம் தெரிவிக்கிறார்கள். ஆனால் எதற்கும் அசைந்துகொடுக்காமல் Zoho Corporation இன் 88% பங்குகளை தன்னகத்தே வைத்திருக்கிறார் ஸ்ரீதர் வேம்பு. 

ஆரம்பத்தில் ஒரு சிறிய அபார்ட்மெண்டில் தான் இவரது அலுவகம் செயல்படத்துவங்கியது. ஸ்ரீதர் வேம்புவின் மனைவி வீட்டை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 

நிறுவனம் துவங்கப்பட்டபோது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் சேர்மனாக டோனி தான் இருந்தார். ஸ்ரீதர் வேம்பு நிறுவனத்தின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரப்படுத்துதலில் ஈடுபட்டு இருந்தார். இவர்களது மென்பொருளுக்கு அந்த நேரத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. 2000 ஆண்டு வாக்கில் இந்தியாவில் 115 பொறியாளர்கள், அமெரிக்காவில் 7 பொறியாளர்கள் என வளர்ந்தது நிறுவனம். மேலும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை நடைபெற்றது. 

2001 ஆம் ஆண்டு மிகப்பெரிய சறுக்கல் சந்தையில் நடைபெற்றது. அப்போது நெட்வொர்க்கிங் துறையில் ஈடுபட்டிருந்த பல நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்தன. இதனால் 150 வாடிக்கையாளர்கள் இருந்த நிலையில் 2002 இல் வெறும் 3 வாடிக்கையாளர்கள் என்ற நிலைக்கு வந்தது. பலர் இந்த தாக்கத்தில் காணாமல் போயினர் ஆனால் ஸ்ரீதர் வேம்பு இதனையும் சாதகமாக பார்த்தார். ஒரே மாதிரியான தயாரிப்புகளை மேற்கொண்டால் இதுபோன்ற இழப்புகள் பெரிதும் பாதிக்கும் என்பதை இதன் மூலமாக உணர்ந்துகொண்டார். இந்த படிப்பினையை அடுத்து பல துறைகளில் அவர் அக்கறை செலுத்த விரும்பினார். 

அடுத்த சில ஆண்டுகளில் டோனி வேறு நிறுவனம் துவங்குவதற்காக வெளியில் செல்ல நிறுவனத்தின் கட்டுப்பாடு அனைத்தும் ஸ்ரீதர் வேம்புவிடம் வந்தது. அவர் பல மாற்றங்களை செய்தார். 2005 இல் நிறுவனத்தின் பெயரை AdventNet  என மாற்றினார். Zoho University என அழைக்கப்படும் பயிற்சி நிலையத்தையும் துவங்கினார். பெரிய நிறுவனங்கள் நல்ல புகழ்பெற்ற கல்லூரிகளில் இருந்து மாணவர்களை தெரிவு செய்கிறது. நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்கிறது. இதிலிருந்து மாற்றாக திறமையுள்ள மாணவர்களை கிராம புறங்கள் முதற்கொண்டு தேடி பிடித்து அவர்களுக்கு தற்போதைய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியை கொடுத்து வெளியே அனுப்புகிறது Zoho University. தனது நிறுவனத்தின் 15% பணியாட்கள் தேவையையும் இதன் மூலமாகவே பூர்த்தியும் செய்து கொள்கிறார். 

2009 இல் தான்  Zoho Corporation என்ற பெயர் நிறுவனத்திற்கு சூட்டப்பட்டது. இந்த நிறுவனம் மூன்று முக்கிய பகுதிகளில் அக்கறை செலுத்துகிறது. Zoho.com, WebNMS and Manage Engine. சிறப்பான மென்பொருள்களை வழங்குவதனால் பல்வேறு நாடுகளிலும் வரவேற்பு அதிகரித்தது. Zoho Corporation பல்வேறு பெரிய ஜாம்பவான்களுக்கு போட்டியாக களத்தில் நிற்கிறது. ஆமாம், Salesforce.com, Microsoft or Google’s cloud என பெரிய ஆட்களோடு இது மோதுகிறது.Salesforce ஒரு மென்பொருளை $65 விற்கிறது என்றால் அதையே $10-12 க்கு விற்கிறது Zoho. இதனால்  Salesforce.com நிறுவனம் Zoho வை வாங்க முற்பட்டது. ஆனால் மவுனமாக அதை நிராகரித்தார் ஸ்ரீதர் வேம்பு. 

சிலிகான் வேலியில் தான் சிறந்த மென்பொருள்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை மாற்றி தென்காசியில் இருந்துகொண்டும் அதாவது ஒரு கிராமப்புறத்தில் இருந்துகொண்டும் சிறந்த மென்பொருள்களை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. அவர் நமது தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை. அவருக்கு பத்மஸ்ரீ விருது சரியான அங்கீகாரம்.

தாமஸ் ஆல்வா எடிசன் எனும் கண்டுபிடிப்புகளின் பேரரசன்

Click Here

யார் இந்த சர் சிவி ராமன்?

Click Here

ஒன்பிளஸ் நிறுவனத்தின் வெற்றிக்கதை

Click Here

அலிபாபா நிறுவனர் ஜாக் மா சாதித்தது எப்படி?

Click Here

கேமரான் ஜான்ஸன் 19 வயதில் மில்லியனர்

Click Here



Get updates via whatsapp

Exit mobile version