Thursday, September 19, 2024
HomeAppsஸ்பீட் லிமிட் மற்றும் ஸ்பீட் டிராப் வசதி கூகுள் மேப்பில் அறிமுகம் | Speed Limit...

ஸ்பீட் லிமிட் மற்றும் ஸ்பீட் டிராப் வசதி கூகுள் மேப்பில் அறிமுகம் | Speed Limit and Speed Trap features

ஸ்பீட் லிமிட் மற்றும் ஸ்பீட் டிராப் வசதி கூகுள் மேப்பில் அறிமுகம்

Google Map

40 நாடுகளில் கூகுள் மேப் ஸ்பீட் லிமிட் மற்றும் ஸ்பீட் டிராப் எங்கிருக்கிறது என்பதனை அறியும் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது


இந்த ஊர் பெயர் திருவப்பூர் தானே, இது கல்யாணராமன் வீதிதானே என கேட்டுக்கொண்டிருந்த காலமெல்லாம் கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் வருகைக்கு பிறகு மலையேறிவிட்டது. இப்போது இருப்பிடத்தை அனுப்பிவிட்டால் போதும் கூகுள் மேப் வழிசொல்லிவிடும். இப்படி வசதிகளை கொண்ட கூகுள் மேப்பில் வழியை சொல்வதோடு தற்போது வாகன போக்குவரத்துக்கு நெரிசல் தற்போது எப்படி இருக்கிறது போன்ற வசதியை கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். தற்போது கூகுள் நிறுவனம் ஸ்பீட் லிமிட் மற்றும் ஸ்பீட் டிராப் ஆகிய வசதிகளை 40 நாடுகளில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஸ்பீட் லிமிட் வசதி

ஸ்பீட் லிமிட் மற்றும் ஸ்பீட் டிராப் வசதி கூகுள் மேப்பில் அறிமுகம்

நாம் புதிய ஊருக்கு பயணம் செய்துகொண்டு இருக்கிறோம் எனில் குறிப்பிட்ட பகுதியில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட வேகம் என்ன என்பதனை அறியாமல் வேகமாக செல்லுவதற்கு வாய்ப்பு உண்டு. இதனால் விபத்து ஏற்படலாம் அல்லது வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரிடம் நாம் மாட்டிக்கொள்ளலாம். கூகுள் மேப் தற்போது அனுமதிக்கப்பட்ட வேகத்தை காட்டும் நீங்கள் அதனை விட அதிகமாக சென்றால்உங்களுக்கு அறிவுறுத்தும். இதனால் உங்களால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

ஸ்பீட் டிராப் அறியும் வசதி

பல வெளிநாடுகளில் முக்கியமான சாலைகளில் வேகத்தை அளக்கும் ரேடார்கள் நிரந்தரமாக பொருத்தப்பட்டு இருக்கும். சில இடங்களில் போலீசார் தற்காலிக ஸ்பீட் டிராப்பை வைத்திருப்பார்கள். குறிப்பிட்ட சாலையில் நீங்கள் பயணம் செய்திடும் போது அங்கு எங்கே ஸ்பீட் டிராப் இருக்கிறது என்பதனையும் கூகுள் மேப் மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.

அனுமதிக்கப்பட்ட நாடுகளில் மட்டுமே

அதிகபட்ச வேகம் கூகுள் மேப்பில் காட்டப்படும்

மேற்கூறிய இரண்டு வசதிகளும் பின்வரும் நாற்பது நாடுகளில் மட்டுமே கூகுள் கொண்டுவந்து இருக்கிறது. இவற்றில் சில நாடுகளில் ஸ்பீட் டிராப்பை ஆப் மூலமாக அறிவது சட்டப்படி குற்றம் எனில் அங்கு இருப்பவர்களால் இந்த வசதியினை பெற முடியாது.

 

Australia, Brazil, US, Canada, UK, India, Mexico, Russia, Japan, Andorra, Bosnia and Herzegovina, Bulgaria, Croatia, Czechia, Estonia, Finland, Greece, Hungary, Iceland, Israel, Italy, Jordan, Kuwait, Latvia, Lithuania, Malta, Morocco, Namibia, Netherlands, Norway, Oman, Poland, Portugal, Qatar, Romania, Saudi Arabia, Serbia, Slovakia, South Africa, Spain, Sweden, Tunisia, and Zimbabwe

 

இந்த அப்டேட் இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

 

கூகுள் இந்த இரண்டு வசதிகளையும் தனக்கு சொந்தமான Waze நிறுவனத்திடமிருந்து பெற்று அதனை கூகுள் ஆப்பில் வழங்குகிறது. Waze இன்னும் பல வசதிகளை கொண்ட ஆப் என்பது குறிப்பிடத்தக்கது.





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular