Giordano Bruno
மதங்கள் மட்டுமே ஆட்சி செய்த காலங்களும் உண்டு. அங்கே அறிவியலுக்கும் உண்மைக்கும் இடம் இல்லை. பூமி உருண்டையானது, பூமி உட்பட கிரகங்கள் சூரியனை சுற்றி வருகிறது என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்தமைக்காக கடுமையான சித்ரவதைகளுடன் எரித்துக்கொள்ளப்பட்டார் ஜியார்டானோ புருனோ
ஜியார்டானோ புருனோ பல்வேறு துறைகளில் திறமை பெற்று இருந்தார். ஆனால் அவர் எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவரை எரித்துக் கொல்வதற்கு காரணமாக சொல்லப்படுகிற அண்டவியல் பற்றிய கருத்துக்கள் “கோப்பர்நிக்கஸ்” என்ற அறிவியலாளரின் கண்டுபிடிப்பில் இவர் புரிந்துகொண்ட கருத்துக்களே. அந்த காலகட்டத்தில் அண்டவியல் பற்றிய அவரது கருத்துக்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் அவர் நகரும் பூமிக்கு வாதிட்டது மட்டுமல்லாமல், சூரியனைப் போன்ற பிற நட்சத்திரங்களையும், பூமி போன்ற பிற உலகங்களையும் கொண்ட எல்லையற்ற பிரபஞ்சத்திற்கும் வாதிட்டார். நிச்சயமாக இது பிரபஞ்சத்தின் விவிலிய பதிப்பிற்கு முரணானது என்பதை புருனோ அறிந்திருந்தார், ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிலியோ முன்வைத்த அதே வாதத்தை அவர் முன்வைத்தார்.
யார் இந்த ஜியார்டானோ புருனோ?
காலம் மாறிக்கொண்டு இருக்கிறது, மதங்களும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பரிந்துரைத்த கருத்துக்கள் அறிவியலுக்கும் எதார்த்தத்திற்கும் ஒவ்வாததாக இருக்கும் போது அதை விமர்சிக்க ஒரு தைரியம் வேண்டும். அப்படி ஒருவர் விமர்சித்தால் அதனை பக்குவமாக ஆராய்ந்து அதிலிருக்கும் உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் மத தலைமைகளுக்கு இருக்க வேண்டும். ஒருவேளை அப்படி இல்லாவிடில் உண்மைக்கு பக்கம் நிற்கும் மக்கள் இருக்க வேண்டும். ஆரோக்கியமான சமூகத்திற்கான அடையாளமாக நான் கருதுவது இதையே.
ஜியார்டானோ புரூனோ ஓர் இத்தாலிய தத்துவவாதி, கணிதவியலாளர், வானவியலாளர், மிகச் சிறந்த எழுத்தாளர்,சிறப்பாக விவாதங்களை செய்திடும் திறமை வாய்ந்தவர், நல்ல பேச்சாளர், இறையியலைச் சார்ந்து பேசுபவர், அறிவியலின் கலங்கரை விளக்கமாக இருந்தவர், கருத்துக்களை அறிவியலின் சாயலில் நின்று பார்க்கும் பக்குவவாதி. இத்தனை சிறப்புகளை உடைய புருனோ இத்தாலி நாட்டில் இருக்கும் நோலா எனும் நகரில் அமைந்திருக்கும் சிசுலா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜியோவானி புருனோ [Giovanni Bruno] ஒரு தொழில்முறை சிப்பாய், அவர் ஃபிரவுலிசா சவோலினோவை மணந்தார். இவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் “பிலிப்யோ புரூனோ”.
1561ல் மற்ற பிள்ளைகளைப்போலவே மதக்கல்வி பயிலவும், கிறித்தவ போதகராகவும் டொமினிகனிலுள்ள துறவிகள் மதத்திற்குச் சென்றார். அங்குள்ள பாதிரிகளிடமும், சகோதரர்களிடம் தத்துவம், இறையியல், அறிவியல் போன்றவற்றில் அனுபவமும், அறிவும் பெற்றார். அங்குள்ள துறவி ஒருவரின் மேலுள்ள ஈடுபாட்டாலும், கிறித்தவ திருச்சபையாலும், “பிலிப்போ புரூனோ” என்ற பெயரை “ஜியார்டானோ புரூனோ” என மாற்றிக்கொண்டார்.
14 வயதாக இருந்தபோது புருனோ தனது சொந்த ஊரான நோலாவை விட்டு வெளியேறி நேப்பிள்ஸுக்கு படிக்கச் சென்றார். அவர் நேபிள்ஸில் மனிதநேயம், தர்க்கம் மற்றும் இயங்கியல் பற்றிய சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார், இந்த நேரத்தில்தான் அவர் தனது ஆசிரியர்களில் ஒருவரால் Averroism ஐ நோக்கி செல்வாக்கு பெற்றார். இது முஸ்லீம் தத்துவஞானி அவெர்ரோஸ் மூலம் அரிஸ்டாட்டில் படைப்புகளின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ தத்துவமாகும். அதன் அடிப்படை நம்பிக்கை என்னவென்றால், காரணமும் தத்துவமும் நம்பிக்கையை விடவும் நம்பிக்கையின் மூலமாக கிடைத்த அறிவை விடவும் மேலானவை என்பதே.
இவரது கருத்துக்களால் இவரை மத வெறியர் என நினைத்துக்கொண்டார்கள், ஆயினும்கூட அவர் 1572 இல் ஒரு கத்தோலிக்க பாதிரியாராக நியமிக்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட கிறிஸ்தவ போதனை. அவர் பின்னர் எழுதினார்: –
தகுதியான மற்றும் உயர்ந்த தொழில்களிலிருந்து என்னை ஈர்க்கவும், என் ஆவியை சங்கிலிகளில் வைக்கவும், நல்லொழுக்க சேவையில் ஒரு சுதந்திர மனிதனிடமிருந்து என்னை ஒரு மோசமான மற்றும் முட்டாள்தனமான வஞ்சக அமைப்பின் அடிமையாக்க முயற்சித்தேன்.
உண்மையைத்தேடிய ஜியார்டானோ புருனோ
புரூனோ எதனையும் வெளிப்படையாகப் பேசுபவர். கத்தோலிக்க கற்பித்தலில் உள்ள அறிவின் ஆதாரம் அறியும் முறை, நடைமுறையற்ற பழக்கவழக்கங்கள் பற்றியும் ஆராய்ந்தார், இதன் காரணமாக மதத்துரோகம் மற்றும் கிறித்தவ திருச்சபையை எதிர்க்கிறார் என குற்றமும், பட்டமும் சூட்டப்பட்டார். 1576ல் கிறித்தவ துறவி வாழ்க்கையை முடிக்கவேண்டியதாகி விட்டது. அறிவைப் பற்றிய காதலும், அறியாமைபற்றிய வெறுப்பும் புரூனோவை ஒரு புரட்சியாளனாக மாற்றியது. பாரம்பரிய அதிகாரத்தை ஒத்துக்கொள்ள மறுத்தார். இதனால் தனிமைப்படுத்தப்ட்டார். இதன் விளைவாக நாடோடியாக பல நாடுகளில் அலைய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனாலும் உண்மைகளை வெளியிடுவதில் தயக்கம் காண்பிக்க வில்லை. அதில் ஒன்றுதான் சூரியனை மையமாகக் கொண்டு, பூமி சுற்றுகிறது என்பதும்.!
நாம் ஏற்கனவே கூறியது போல அண்டவியல் குறித்து புருனோ எந்தவித அறிவியல் கண்டுபிடிப்பையும் நிகழ்த்திடவில்லை. ஆனால் இதற்கு முன்பு அண்டவியல் பற்றி ஆராய்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸின் முடிவுகளை ஆராய முற்பட்டார். புருனோவின் அண்டவியல் பற்றிய கருத்துக்கள் பிற்காலத்தில் வானவியல் துறையில் ஆராய்ச்சி செய்ய முற்பட்ட பல அறிவியலார்களுக்கு உந்து சக்தியாக இருந்தது.
பிரபஞ்சம் – கடவுள் : புருனோவின் புதிய கருத்து
கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார். அவரே இந்த பிரபஞ்சத்தை படைத்தார். அவரே இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறார். இவை மிகவும் முரட்டுத்தனமாக நம்பப்பட்டு வந்த காலம் அது. இப்போதும் கூட இதை நம்புகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் புருனோவின் காலத்தில் இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக பேசினால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
ஆனால் புருனோ பழமையான மதவாத கருத்துக்களைக்கூட தீவிரமாக ஆராய்ந்தார். அதுகுறித்த தன் கருத்துக்களை வெளிப்படையாக எழுதினார். இதனாலேயே அவர் பல்வேறு நாடுகளில் அகதி போல அலையவேண்டியதாயிற்று. அப்படி அவர் குறிப்பிட்ட கருத்துக்களில் இரண்டு மிக முக்கியமானவை. ஒன்று பிரபஞ்சம் பற்றியது மற்றொன்று கடவுள் பற்றியது.
பிரபஞ்சம் எல்லையற்றது முடிவற்றது பிரபஞ்சத்தின் ஒரு பகுதிகள் சூரிய குடும்பம். அதுமட்டுமல்ல பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. அதனாலேயே இரவுபகல் உண்டாகிறது. சூரியன் என்பது இரவு வானத்தில் தெரியும் விண்மின்போல ஒன்றுதான். சூரியன்தான் பூமி போன்ற கோள்களின் மையம். இவையனைத்தும் சேர்ந்தது சூரிய குடும்பம். வானில் தெரியம் விண்மீன்களுக்கும் இதே போன்ற கோள்கள் உண்டு. சூரிய குடும்பம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு. விண்மீன்கள் பிரபஞ்ச வெளியில் விரவிக்கிடக்கின்றன விண்மீன்கள் இயற்பியல் விதிப்படி இயங்குகின்றன. விண்மீன்களுக்கு இடையே ஈதர் என்ற காற்று உள்ளது. என பல கருத்துக்களை விதைத்தார் புரூனோ. உலகில் புவிமையக் கொள்கையை முதன் முதலில் நேரிடையாக எதிர்த்த முதல் தத்துவ அறிஞர் ஜியார்டானோ புரூனோ தான்.
கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார். அவரே நம் அனைவரையும் படைத்தார் என போதிக்கப்பட்ட காலத்தில் புனோவின் கடவுள் பற்றிய தத்துவம் வித்தியாசாமானது. கடவுள் விண்மீன்களின் எல்லை தாண்டி சொர்க்கத்தில் இல்லை. உயிரில் உள்ள அனைத்து பொருட்களிலும் இயல்பாகவே நீக்கமற நிறைந்திருக்கிறார். கடவுளை அனைவராலும் உணரமுடியம். உலகம் நீர், பூமி, காற்று, நெருப்பு என்ற 4 பொருட்களால் ஆனது. இதே பொருட்கள் தான் ஒரேமாதிரியாய் பிரபஞ்சம் முழுவதும் பரந்துபட்டு விரிந்து கிடக்கிறது. எல்லையற்ற இறைவன் எல்லையற்ற பிரபஞ்சத்தைப் படைத்துள்ளார் என்று தெரிவித்தார் புரூனோ. ஆனால் அண்டம் என்பது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. கடவுளுக்கும் சொர்க்கத்துக்கும் எந்த உறவும் கிடையாது என்றார்.
எரிக்கப்பட்ட புருனோ
புரூனோ கிறித்தவ திருத்ச்சபையை எதிர்த்து பிரச்சாரம் செய்தமைக்காகவும், மதத்துவேஷ கருத்துக்களுக்காகவும் 1592ம் ஆண்டு மே 22ம் நாள் கைது செய்ய்ப்பட்டார். புரூனோவின் எரிப்பு தண்டனை பிப்ரவரி 17, 1600 அன்று நிறைவேற்றப்பட்டது. தண்டனையில் குறிப்பிட்டுள்ளபடி, அவரது நாக்கும், தாடையுடன் சேர்த்து ஆணியடிக்கப்பட்டது. புரூனோ பேசாமல் இருப்பதற்காக. ஏசு நிலுவையில் அறையும் போது செய்யப்பட்டது போலவே ஒரு நீண்ட குச்சியில் கட்டையில் அறையப்பட்டார். புரூனோ முகத்தில் இரும்புக் கவசம் மாட்டப்பட்டது. இவரைச் சுற்றி குச்சிகள் போடப்பட்டன. இவையனைத்தும் “கம்ப்போ டே ப்யோரி” என்ற ரோமனின் புகழ்பெற்ற சதுக்கத்தில் அனைவரும் பார்க்கும்படியே நடைபெற்றது. ஜியார்டானோ புரூனோ உயிருடன் எரித்து கொலைசெய்யப்பட்டார் கிறித்தவ திருச்சபையில் அவரது உயிர் போயிற்று. ஆனால் அவரின் புகழ் மறையவில்லை.
புருனோ எரித்துக்கொலைசெய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு 1603 ஆம் ஆண்டு இரண்டாம் ஜான்பால் போப்பாக பதவியேற்றார். புருனோ கொலைசெய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். புரூனோ உலகைவிட்டுப் போன 7 ஆண்டுகளுக்குப்பின் அவருக்கான சிலை நோலாவில் வைக்கப்பட்டது.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.