Site icon Tech Tamilan

OYO Rooms ரிதேஷ் அகர்வால் சாதித்தது எப்படி?


பட்ஜெட் விலையில் ஹோட்டல் ரூம்களை புக் செய்யும் ஆப் “ஓயோ ரூம்ஸ் [OYO]” பற்றி கேள்விப்பட்டிருப்போம் . இந்தியாவில் 170 க்கும் மேற்பட்ட நகரங்களில் 65000 ஹோட்டல் ரூம்களை வைத்திருக்கிறது OYO Rooms Company . பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஓயோ ரூம்ஸ் 24 வயதேயான ஒரு இளம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்டது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . ரிதேஷ் அகர்வால் [Ritesh Agarwal] எனும் 24 வயதேயான இளம் தொழில்முனைவோர் தான் இவ்வளவு பெரிய கம்பெனியை உருவாக்கியிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய ஆச்சர்யம் . அவர் சாதித்தது எப்படி என்பதைத்தான் பார்க்க இருக்கின்றோம் .

 
புதிதாக தொழில்துவங்குவோருக்கு மிகப்பெரிய உத்வேகத்தை இக்கட்டுரை அளிக்கும்.

இளம்வயதிலேயே தொழில் துவங்க வேண்டும் எனும் ஆர்வத்தினால் டெல்லியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்ட் பைனான்ஸ் கல்லூரியில் சேர்ந்தார் .பிசினஸ் செய்யவேண்டும் எனும் ஆர்வத்தினால் பாதியிலேயே படிப்பை விட்ட அவர் தனது 17 ஆம் வயதிலேயே oravel travels ஐ துவங்கினார் . இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தபோது அளவான பணத்தில் தங்குவதற்கு ஏற்ற ஹோட்டல் அறைகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததை உணர்ந்தார் ரிதேஷ் . அந்த சிக்கலை தீர்ப்பதற்கான யோசனையாகத்தான் oravel travels ஐ துவங்கினார் . இந்த சிறிய நிறுவனம்தான் பின்நாளில் ஓயோ ரூம்ஸ் என்னும் மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கின்றது .
 

ரிதேஷ் அகர்வால்


 
ரிதேஷ் அகர்வால் அவருடைய 19 ஆம் வயதில் தெயில் பெல்லோஷிப் இல் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார் . இரண்டு ஆண்டுகள் பயிற்சி திட்டத்தினை கொண்ட தெயில் பெல்லோஷிப், பேபாலை உருவாக்கியவர்களில் ஒருவரும் facebook இல் முதலீடு செய்தவருமான பீட்டர் தெயில் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது . இதில் பங்கேற்பதன் மூலமாக பிசினஸ் துவங்குவதற்கு தேவையான பணமும் முன்னனி தொழிலதிபர்களுடன் தொடர்பும் கிடைக்கும் .
 
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர் முதலீடு ஓயோ ரூம்ஸ் ஐ ஏற்படுத்திட கிடைத்தது . முதல்தவனையாக 25 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டது . இதுதான் தெயில் பெல்லோஷிப் இல் நடந்த மிகப்பெரிய பண பரிமாற்றம் . softbank ஓயோவில் முதலீடு செய்ய முன்வந்ததன் காரணமாக தொழில்முனைவோர்களின் குட்புக்கில் இடம்பெற்றார் ரிதேஷ் அகர்வால் .


ஓயோ ரூம்ஸ் எப்படி செயல்படுகிறது?

 
நாடு முழுவதும் ஹோட்டல்கள் இருக்கின்றன . ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை . ஆகையினால் வாடிக்கையாளர் வருகையும் குறைந்துபோகிறது . இந்த குறைபாட்டை கலைவதற்கு ஏற்படுத்தப்பட்டதுதான் ஓயோ . ஓயோ நிறுவனம் ஹோட்டல்களை விலைக்கு வாங்குவது இல்லை . மாறாக ஹோட்டல் உரிமையாளருக்கு பணத்தினை கொடுத்து தரமான ரூம்களை ஏற்படுத்தவும் , பராமரிக்கவும் சொல்கிறது . ஓயோ ரூம்ஸ் ஆப் மூலமாக வாடிக்கையாளர்களை அந்த ரூம்களை புக் செய்ய வைக்கிறது .


 

 

தற்போது இந்தியாவை தாண்டியும் ஓயோ ரூம்ஸ்களை புக் செய்திட முடியும் . ஆசியாவில் மட்டும் 8000 க்கும் அதிகமான பணியாளர்கள் இருக்கிறார்கள் . 14 மில்லியன் நபர்கள் ஓயோ ஆப் ஐ டவுண்லோடு செய்திருப்பதாகவும் ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது .
 
இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் புக் செய்யப்போகும் அனைத்து அறைகளும் ஓயோ ரூம்ஸ் ஆக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .
 

இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திக்கொண்டு இருக்கின்ற ரிதேஷ் அகர்வாலின் அம்மாவின் கவலையோ “பயோடேட்டாவில் ஒரு டிகிரி கூட இல்லையென்றால் திருமணம் யார் செய்துகொள்வார்கள் “என்பதுதானாம் .

உலகில் சாதித்தவர்கள் அனைவருமே தங்களது சாதனை பயணத்தை மிக மிக இளம்வயதிலேயே துவங்கிவிட்டார்கள் . நீங்களும் சாதிக்க விரும்பினால் இன்றே அதற்கான பணியை துவங்குங்கள் .


 
இவர்களையும் படியுங்கள்,
 
பில்கேட்ஸ் பில்லியனர் ஆனது எப்படி?
 
எலன் மஸ்க் சாதித்தது எப்படி?
 
பிரனவ் மிஸ்ட்ரி சாதித்தது எப்படி?
 


இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.
 
உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள், அவையே எங்களுக்கு ஊக்கம் தரும்.
 
TECH TAMILAN

Exit mobile version