Flying Suit
சூப்பர் மேன் போல பறக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? பறக்கும் சூட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் நீங்கள் பறக்கலாம்
Click Here! Get Updates On WhatsApp
சூப்பர் மேன் படத்தில் ஹீரோ பறப்பது போன்ற காட்சிகள் இருக்கும். அப்படிப்பட்ட காட்சிகளை கிராபிக்ஸ் கொண்டு வடிமைத்து இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை உண்மையாகும் விதமாக பறக்கும் சூட் (ஆடை) ஒன்றினை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ப்ரவுனிங் [Richard Browning] வடிவமைத்து இருக்கிறார். பறக்கும் சூட் ரெடி, இனி நீங்களும் சூப்பர் மேன் போல பறக்கலாம்!
Hampshire இல் இருந்து Isle of Wight எனும் பகுதிக்கு தனது சூட் மூலமாக வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளார். கிட்டத்தட்ட 1.3 கிமீ தூரத்தை வெறும் 75 நொடிகளில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி கடந்திருக்கிறார். தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்கு தூண்டுகோலாக அமைந்தவர் என கெர்ஹார்ட் சூக்கர் ஐ குறிப்பிடுகிறார். இவர் ரொக்கெட் மூலமாக கடிதத்தை அனுப்ப 1934 இல் முயற்சி செய்தவர் .
ஒவ்வொரு பக்கமும் தலா மூன்று என்ஜின்கள் விமான எரிபொருள் மூலமாக எரியூட்டப்பட்டு சக்தி பெறப்படுகிறது. இதனை அனைவராலும் முதல் முறையிலேயே கையாண்டு பறக்க முடியாது. போதிய பயிற்சிக்கு பிறகுதான் வெற்றிகரமாக பறக்க முடியும். இல்லையேல் எங்கேயாவது விழவேண்டியதுதான். பறக்கும் போது 60 கிலோமீட்டர் வேகம் வரை செல்ல முடிந்தது.
நீங்கள் ஒரு கண்டுபிடிப்பில் ஈடுபட்டு விட்டால் உங்களால் நிறுத்தவே முடியாது, அது மகிழ்ச்சிகரமானது என குறிப்பிட்டு இருக்கிறார் ரிச்சர்ட் ப்ரவுனிங். நீங்களும் கண்டுபிடிப்பில் ஈடுபடலாமே!
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.