Public Cryptocurrency vs Private Cryptocurrency
தற்போது ஆண்ட்ராய்டு 9 பை (android 9 pie) இயங்குதளத்தை பயன்படுத்தி வருகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது கூகுள் தனது அடுத்த இயங்குதளமான Android Q OS இன் பீட்டா வெர்சனை சோதனை முயற்சியாக வெளியிட்டுள்ளது. புதிய OS பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது
இந்திய அரசாங்கம் Private Cryptocurrency களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என்றவுடன் Public Cryptocurrency க்கும் Private Cryptocurrency க்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒருவேளை நீங்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருந்தால் அந்த கரன்சி Public கிரிப்டோகரன்சியா அல்லது Private கிரிப்டோகரன்சியா என்பதை இந்தப்பதிவின் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.
கிரிப்டோகரன்சியின் மிக முக்கிய தொழில்நுட்பமே blockchain தொழில்நுட்பம் தான். அதீத பாதுகாப்பு காரணமாக தற்போது பிளாக்செயின் தொழில்நுட்பம் பெரிய அளவில் விரும்பத்தகுந்த ஒன்றாக உள்ளது. நீங்கள் பிளாக்செயின் தொழில்நுட்பம் குறித்து தெரிந்துகொள்ள விரும்பினால் எங்களது வீடீயோவை பாருங்கள்.
Blockchain என்றால் என்ன?
Blockchain என்பதற்கு ஆங்கிலத்தில் இவ்வாறாக விளக்கம்கொடுக்கப்படுகிறது “blockchain is a distributed, decentralized, public ledger”. அதாவது பிளாக்செயின் என்பது பல்வேறு இடங்களில் பராமரிக்கப்படுகின்ற பரிவர்த்தனை கணக்குப்புத்தகம் என பொருள். உதாரணத்திற்கு நாம் வங்கிகளில் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனை குறித்த தகவல்கள் அனைத்தும் வங்கியின் சர்வரில் (ஒரே இடம்) சேமிக்கப்பட்டு இருக்கும். ஆனால் blockchain தொழில்நுட்பத்தில் பல்வேறு இடங்களில் ஒரேவிதமான தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும்.
ஒரு பரிவர்த்தனை நடக்கும் போது அது குறித்த விவரம் “block” ஆக அனுப்பப்படும். அந்த block இல் இருக்கும் தகவல்களை என்கிரிப்ட் செய்து ஒவ்வொரு பெட்டிக்கும் “hash” என்ற ஒரு அடையான எண்ணை கொடுப்பார்கள். ஒவ்வொரு பெட்டியும் தனித்துவமான hash ஐ கொண்டிருக்கும். இரண்டாவது block இல் முதல் block இன் hash பதிவிடப்பட்டு இருக்கும். இப்படித்தான் ஒவ்வொரு பெட்டிக்கும் இருக்கும். இப்படி பல block ஒன்றோடு ஒன்று செயின் போல இணைந்து இருப்பதனால் தான் இதனை Blockchain என அழைக்கிறோம்.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இரண்டு முக்கியமான பிரிவுகள் உண்டு. அவைதான் public மற்றும் private பிளாக்செயின். கிரிப்டோகரன்சியில் இவற்றில் எந்த பிரிவு பயன்படுத்தப்படுகிறதோ அதனைப்பொறுத்து அந்த கிரிப்டோகரன்சியை public அல்லது private என பிரிக்கலாம்.
Public Blockchain
Public Blockchain என்பது முற்றிலும் வெளிப்படையான Blockchain அமைப்பு. அதிலே யார் வேண்டுமானாலும் சேரலாம், அந்த தகவல்களை பார்க்கலாம், படிக்கலாம், அதில் பங்களிப்பும் செய்யலாம். இவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாத காரணத்தால் தான் இதனை Public Blockchain என அழைக்கிறோம். தற்போது பிட்காயினில் இந்த Public Blockchain தொழில்நுட்பம் தான்பயன்படுத்தப்படுகிறது .
இது போன்று மக்களால் நிர்வகிக்கப்பட்டு மக்களால் சரிபார்க்கப்படும் Blockchain அமைப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ள கிரிப்டோகரன்சிகள் அனைத்தும் Public Cryptocurrency என அழைக்கப்படும்.
எப்படி ஒருவர் தானாகவே இதில் பங்கேற்று பங்களிப்பு செய்வார்? அவருக்கு ஏதாவது கிடைத்தால் தானே செய்வார்? அதற்காகத்தான் பிட்காயின் உள்ளிட்ட Public Cryptocurrency கள் அனைத்திலும் இன்சென்டிவ்ஸ் வழங்கும் முறை இருக்கிறது. இதனைத்தான் நாம் மைனிங் என அழைக்கிறோம். இதனால் தான் பலரும் இதிலே தானாகவே இணைகிறார்கள்.
யாரும் கட்டுப்படுத்தவில்லை, மக்கள் தான் இதை கட்டுப்படுத்துகிறார்கள் என்ற நன்மையும் அதிக பாதுகாப்பானது என்ற உறுதியும் கிடைத்தாலும் கூட இந்தவகையிலான Public Cryptocurrency கள் அனைத்தும் உருவாவதற்கு அதிக அளவிலான சக்தியை செலவு செய்திட வேண்டி இருக்கிறது. மைனிங் வேலையில் ஈடுபடுகிறவர்கள் அதிக அளவிலான மின்சாரத்தை செலவு செய்வதாக குற்றச்சாட்டும் உள்ளது.
Private Blockchain
இந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட அமைப்பு அல்லது நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட நபர்களால் மட்டுமே பங்களிப்பு செய்திட முடியும், பரிவர்த்தனை தகவல்களை பெற முடியும். Invitation இல்லாதவர்களால் இதிலே இணைய முடியாது. இதிலே பங்கேற்கும் அனுமதிக்கப்பட்ட நபர்களிடம் மட்டுமே பரிவர்த்தனை தகவல்கள் அனைத்தும் இருக்கும் [Shared Ledger]. சில Private கிரிப்டோகரன்சிகளிலும் மைனிங் என்பது இருக்கிறது. ஆனால் எவ்வளவு ரிவார்ட்ஸ் என்பதையெல்லாம் குறிப்பிட்ட ஒரு அமைப்பு தான் தீர்மானிக்கும்.
இதுதவிர Permissioned Blockchain என்ற ஒரு பிரிவும் உள்ளது. Public Blockchain மற்றும் Private Blockchain இந்த இரண்டிலும் இருக்கக்கூடிய சில வசதிகளை கலந்து இதனை உருவாக்கி இருப்பார்கள்.