Language Translator
அதீத வளர்ச்சியால் ஒரு மொழியில் பேசுவதனை இன்னொரு மொழியில் மொழிபெயர்த்து வழங்குகிற தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இதனால் ஒருவர் தனக்கு தெரியாத மொழிகளை வேலையின் பொருட்டு கூட கற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை, குறிப்பிட்ட அந்த கருவிகளை வாங்கிக்கொண்டாலே போதுமானது.
ஆங்கிலம், பிரெஞ்சு , ஜாப்பனீஸ், சீனம் போன்ற பல மொழிகளை கற்றுக்கொண்டால் வேலைவாய்ப்பினை பெறுவதோடு அறிவையும் விசாலமாக்கிக்கொள்ள முடியும் என்ற நிலை நிலவுகிறது. இதற்காக பள்ளியில் படிக்கும் போதே பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள் மாணவர்கள். பிற மொழிகளை கற்பதனால் தாய்மொழி பேசுவது என்பது குறைந்துபோகிறது என்பது பெரும்பாலானவர்களின் குற்றசாட்டு. அதனையும் தாண்டி தாய்மொழி தவிர்த்து இன்னொரு மொழியினை கற்பதற்கு வேலைப்பளு, நேர விரயம் மற்றும் செலவும் செய்திட வேண்டி இருக்கிறது. இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி நாம் ஒரு மொழியினை கற்பதற்கு காரணம் என்ன “நம்முடைய கருத்துக்களை பிறருக்கு கூறுவதற்கும் பிறருடைய கருத்துக்களை நாம் புரிந்துகொள்வதற்கும் தானே”. ஒருவேளை ஒரு தொழில்நுட்பம் வந்து நாம் கூறுவதை இன்னொருவர் மொழியிலும் அவர் கூறுவதனை நம் மொழியிலும் மொழிபெயர்த்து தரும்மொழிபெயர்ப்பாளர் வேலையை செய்தால் எப்படி இருக்கும்? ஆர்டிபிசியல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் அப்படியொரு தொழில்நுட்பம் நமக்கு மிக அருகில் வந்துவிட்டது நண்பர்களே.
ட்ரான்ஸ்லேட்டர் தொழில்நுட்பம்
நம்மில் பலர் ஏற்கனவே Google நிறுவனத்தின் “Google Translate” ஆப்பினை பயன்படுத்தி இருப்போம். நீங்கள் ஏதேனும் வேறு மொழியிலான இணையப்பக்கங்களை திறக்கும் போது பிரவுசரின் வலது மேற்புறத்தில் “Translate” ஆப்சன் வருவதையும் பார்த்திருக்கலாம். இவை இரண்டுமே ஒரு மொழியில் இருக்கும் வார்த்தைகளை நீங்கள் விரும்பும் மொழிக்கு மொழிபெயர்த்து தரக்கூடியவை. இவை இரண்டும் ஓர் உதாரணம் தான். எண்ணற்ற பல நிறுவனங்கள் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தினை வடிவமைப்பதில் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கின்றன. வெறுமனே எழுத்துக்களை மட்டும் அல்ல, நாம் ஒருவர் பேசிடுவதை கேட்டு அப்போதே மொழிபெயர்த்து தரும் தொழில்நுட்பம் தற்போது கிடைக்கிறது, அவை தற்போது துல்லியமாக மொழிபெயர்ப்பு வேலையை செய்திடவில்லை என்றாலும் அதற்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றன.
ட்ரான்ஸ்லேட்டர் தொழில்நுட்பம்
ஒருவர் பேசுவதனை உடனடியாக மொழிபெயர்ப்பது என்பது text ஐ மொழிபெயர்ப்பதை போல எளிமையானது அல்ல. என்னதான் இயந்திரம் மனிதர்களை விட வேகமாக சில வேலைகளை செய்தாலும் மனிதர்களுக்கு ஈடாக மொழிபெயர்ப்பு, புரிந்துகொள்ளுதல் போன்றவற்றை செய்திட முடிவதில்லை. பொதுவாக ஒரு மொழியினை இன்னொரு மொழியாக மொழிபெயர்க்க முதலில் சத்தத்தை வார்த்தைகளாக மாற்றிடும் பின்னர் வார்த்தைகளை ஏற்கனவே இருக்கும் குரலில் மொழிமாற்றம் செய்து கொடுக்கும். Google தற்போது இதில் புதியதொரு முயற்சியை செய்திட நினைக்கிறது. “Translatotron” எனப்படும் இம்முறைப்படி பேசுகிறவரின் குரலிலேயே மொழிபெயர்ப்பும் கிடைக்கும். மிகச்சரியாக இது வேலை செய்யாது என்றாலும் Translation தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக இது இருக்கும்.
ட்ரான்ஸ்லேட்டர் தொழில்நுட்பம்
ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்தில் சொல்வதற்கும் அதனையே தமிழில் சொல்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கும். இருக்கின்ற சொற்களை அப்படியே மொழிபெயர்ப்பு செய்தோமேயானால் அதனை படித்தாலும் புரியாது கேட்டாலும் புரியாது. ஆனால் தொடர்ச்சியான Machine Learning மூலமாக இன்று ஓரளவிற்கேனும் படிக்கின்ற விதமாக Translation செய்யப்படுகிறது. இருந்தாலும் இவற்றில் பல சவால்கள் செய்கின்றன.
>> மிகச்சரியாக மொழிபெயர்ப்பு செய்வதில் இன்னும் சவால்கள் இருக்கவே செய்கின்றன
>> ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொருவிதமாக ஒரே மொழியினை பேசுவதனால் அதனை இன்னொரு மொழிக்கு மொழிபெயர்பதில் சிக்கல் நிலவுகின்றன
>> ஒருவர் பேசுவதை அப்படியே மொழிபெயர்ப்பு செய்து தருவதில் உச்சரிப்பினை புரிந்துகொள்வது, இரைச்சல் உள்ள இடங்களில் பேசுபரின் குரலை பிரித்தெடுப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன
ஒருகாலத்தில் ஒருவர் பேசுவதை தொலைவில் இருந்து கேட்க முடியுமா என்பதிலேயே நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தோம். பின்னர் அதனை அலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் முடியும் என காட்டின. ஆகவே எதுவும் தொழில்நுட்ப உலகில் சாத்தியமே, சாத்தியப்படுவதற்கான காலதாமதம் ஏற்படலாமே அன்றி முடியவே முடியாது என்பதல்ல. ஆகவே வெகு விரைவில் பிறர் பேசுவதனை உங்களுக்கு புரிகின்ற மொழியில் மொழிபெயர்த்து தரக்கூடிய சாதனைகளை பயன்படுத்திடுவீர்கள் என நம்பலாம்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.