உலகின் மிகப்பெரிய பணக்காரரும் X தளம், ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவரும் ஆன எலன் மஸ்க் “நியூராலிங்க்” என்கிற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
நியூராலிங்க் என்றால் என்ன?
நியூராலிங்க் என்பது எலன் மஸ்கின் துணை நிறுவனங்களில் ஒன்று. இது மனித மூளையை கணினி உள்ளிட்ட இயந்திரங்களோடு இணைக்கும் (brain machine interface) ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இப்படி இணைப்பது சாத்தியபட்டால் மனிதர்களால் இயந்திரங்களை சிந்தனையின் மூலமாகவே இயக்கிட முடியும். அடுத்தகட்டமாக, பக்கவாதம், மூளை செயலிழப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களால் கூட மொபைல், கணினி உள்ளிட்ட சாதனங்களை இயக்கிட முடியும். இந்த நியூராலிங்க் நிறுவனம் பற்றி மேலும் விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
வெற்றிகரமாக முதல் மனிதனுக்கு பொருத்தப்பட்ட நியூராலிங்க்
அண்மையில் மனிதர்களில் சோதனை நடத்த கிடைத்த அனுமதியை அடுத்து முதல் மனிதருக்கு நியூராலிங்க் நிறுவனம் சிப் பொருத்தும் வேளையில் இறங்கியது.ரோபோ ஒன்றின் உதவியின் மூலமாக செயல்களை கட்டுப்படுத்தும் மனித மூளையின் ஒரு பகுதியில் சிப் பொருத்தப்பட்டு இணைப்பு உருவாக்கப்பட்டது. எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி குறிப்பிட்ட அந்த நபர் இருப்பதாகவும், அவரால் நினைத்தபடியே கணினியின் மவுசை நகர்த்த முடிகிறது எனவும் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இன்னும் அவரால் இதுபோன்று அதிகப்படியான மவுஸ் கிளிக்குகளை செய்ய முடிகிறதா என்பதை சோதித்து வருகிறார்கள். இந்த ஆராய்ச்சியில் முதல் கட்டத்தில் நியூராலிங்க் நிறுவனம் வெற்றி அடைந்துள்ளது என்றே கூறலாம். இதனால் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு தனது ஆய்வை இந்த நிறுவனம் கொண்டு செல்லும்பட்சதில் மிக விரைவிலேயே மனிதர்கள் தனது நினைவின் மூலமாகவே இயந்திரங்களை கட்டுப்படுத்தும் நிலைக்கு வரலாம்.