Site icon Tech Tamilan

Naturals Franchise துவங்குவது எப்படி? எவ்வளவு செலவாகும்?

இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இதனால் தான், ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு கடைகள் இதற்காக இருக்கின்றன. உதாரணத்திற்கு, Green Trends Saloon , Naturals Salon என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 

அதிகமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ள துறையாகவும், இளையவர்கள் எளிதில் வெற்றிபெறக்கூடிய ஒரு துறையாகவும் இது இருப்பதனால் பலரும் இவை போன்றதொரு சலூன்களை திறக்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆர்வம் உடையவர்கள், அவர்களது பெயரில் ஒரு கடையை திறப்பதை விடவும் ஏற்கனவே இந்தியா முழுமைக்கும் அறியப்பட்ட ஒரு பிராண்டு பெயரில் துவங்கும்போது எளிதில் மக்களை வரவைக்க முடியும். 

ஆர்வமும் திறமையும் உள்ள இளையோருக்கு Franchise துவங்கும் வாய்ப்பை Naturals Salon வழங்குகிறது. Naturals Salon Franchise வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும், இதற்கான தகுதிகள் என்ன என்பவை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.

Chai Kings Franchise துவங்குவது எப்படி? முழு விளக்கம்

Naturals Salon Franchise Advantages

how to get naturals salon franchise in tamil

இந்தியாவின் 20 மாநிலங்களில் 700 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது Naturals Salon. இதிலும் குறிப்பாக, 400 க்கும் மேற்பட்ட கிளைகளை பெண்கள் தான் நடத்துகிறார்கள். இந்த நிறுவனம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதால் மக்களிடம் நல்ல நம்பிக்கையை பெற்றுள்ளது. இதனால் தான், இந்த பிராண்டின் கிளையை நீங்கள் துவங்கும் போது வெற்றி என்பது எளிதில் கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Naturals Salon Franchise முதலீடு மற்றும் தேவைகள்

ஒருவர் Naturals Salon இன் Franchise ஐ பெறுவதற்கு 15 லட்சம் முதல் 30 லட்சம் வரைக்கும் செலவாகும். இது உங்களுடைய திட்டம் எவ்வளவு பெரியது என்பதை பொறுத்தது. அதேபோல, ஆர்வம் மற்றும் தகுதி உடையவர்களுக்கு இவர்களே SBI வங்கியில் இருந்து 30 லட்சம் ரூபாயை லோனாக பெற்றுத்தருவார்கள். 

இதுதவிர, Naturals Hair and Beauty Salon, Signature, Naturals Ayur என இதர Franchise ஆப்சன்களும் இருக்கின்றன. இதற்கு முதலீடு மற்றும் இட வசதி இதெல்லாம் மாறுபடும். 

Naturals Hair and Beauty Salon : முதலீடு : 50 – 55 லட்சம்; இடம்: 1000 – 1500 sq ft; Royalty: மாத வருவாயில் 15%

Signature : முதலீடு : 60 – 70 லட்சம்; இடம்: 1200 – 1800 sq ft; Royalty: மாத வருவாயில் 15%

Naturals Ayur : முதலீடு : 55 – 65 லட்சம்; இடம்: 1200 – 1800 sq ft; Royalty: மாத வருவாயில் 15%

Naturals Salon Franchise விண்ணப்பம் செய்வது எப்படி?

உங்களுக்கு Naturals Salon Franchise வாங்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் நேரடியாக அவர்களது இணையதளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்திட முடியும். [https://naturals.in/franchise-opportunities/]

உங்களுடைய பெயர் மற்றும் தொடர்பு கொள்வதற்கு மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் போதும் அவர்களே உங்களை தொடர்பு கொள்ளுவார்கள். 

KFC Franchise வாங்குவது எப்படி? எவ்வளவு முதலீடு தேவை?

Exit mobile version