Thursday, November 21, 2024
HomeGadgetsMind Reading : நீங்க நினைப்பதை படிக்கப்போகும் கணினிகள்

Mind Reading : நீங்க நினைப்பதை படிக்கப்போகும் கணினிகள்


[easy-notify id=823]

Highlights : 
  • மைக்ரோசாப்ட் நிறுவனம் “Mind Reading” மூலமாக செயல்படக்கூடிய ஆப், பிரவுசர்  உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது
  •  

  • தொழில்நுட்ப யுகத்தில் மிகப்பெரிய புரட்சியாக இது அமையும்
  •  

  • நாம் நினைப்பதை கணினியால் படிக்க முடிந்தால் என்னவெல்லாம் நடக்கும்?

 


நீங்கள் தொலைக்காட்சி அல்லது மொபைலில் ஒரு வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என வைத்துகொள்வோம் . அந்த வீடியோ பிடிக்கவில்லை அல்லது வேறு வீடியோவை பார்க்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் எந்த பட்டனையும் அழுத்திட வேண்டியது இல்லை. நீங்கள் நினைத்தாலே போதுமானது, நினைத்தது நடக்கும். இதெல்லாம் நம்புவது மாதிரியாகவா இருக்கிறது, அள்ளிவிட கூடாது என நினைத்து விடாதீர்கள். உண்மையாலுமே அப்படிப்பட்ட கண்டுபிடிப்புக்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது.

 

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. முன்னொரு காலத்தில் தொலைவில் இருக்கும் நபர்களோடு பேசவே முடியாது என எண்ணிக்கொண்டிருந்ததை உடைத்தது “தொலைபேசி” கண்டுபிடிப்பு. பின்னர் “செல்போன்” “தொலைக்காட்சி” “இன்டர்நெட்” “ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்” என நீண்டுகொண்டே இருக்கிறது. இப்போது மிகப்பெரிய புரட்சியாக “மனிதனின் மூளையில் நினைப்பதை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படக்கூடிய அப்பிளிக்கேஷன் தயாரிப்பதில் முற்பட்டிருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

 


கடந்த ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் “CHANGING AN APPLICATION STATE USING NEUROLOGICAL DATA” என்ற தலைப்பில் US Patent and Trademark [அமெரிக்க காப்புரிமை அலுவலகம்) இல் பதிவு செய்துள்ளது.

 

Computer systems, methods, and storage media for changing the state of an application by detecting neurological user intent data associated with a particular operation of a particular application state, and changing the application state so as to enable execution of the particular operation as intended by the user. The application state is automatically changed to align with the intended operation, as determined by received neurological user intent data, so that the intended operation is performed. Some embodiment’s relate to a computer system creating or updating a state machine, through a training process, to change the state of an application according to detected neurological data.

 

அதாவது மூளையில் இருந்து பெறக்கூடிய தகவலை அடிப்படையாகக்கொண்டு அதற்கேற்றவாறு இயங்கக்கூடிய வகையிலான ஆப்களை வடிமைக்க இருக்கிறார்கள். இதன்படி அப்ளிகேஷனின் செயல்பாடு அனைத்தும் மூளையில் இருந்து பெறப்படும் நியூராலஜிக்கல் தகவலுக்கு ஏற்றவாறு மாறும்.

 

இது சாத்தியமா என நீங்கள் நினைக்கலாம் அல்லது நம்பாமலும் இருக்கலாம். ஆனால் இதற்கான வேலைகள் துவங்கிவிட்டன. விரைவில் அந்த தொழில்நுட்பத்தையும் நாம் பயன்படுத்தத்தான் போகிறோம்.

 


 

Mind Reading

 

மனித மூளைக்குள் நியூரான்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த நியூரான்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு இடையே மின்னனு வடிவில் செய்திகளை பரிமாறிக்கொள்கின்றன. அந்த மின்னனு ஆற்றலை ஒருங்கிணைத்துதான் EEG தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி “Graph” வடிவில் திரையில் பார்க்கிறோம். அதனை பதிவு செய்து வைத்து மூளையில் ஏற்படும் மாற்றங்களையும் குறைகளையும் மருத்துவர்களால் கண்டறிய முடிகிறது.

 

 


 

Mind Reading VS Technology 

 

மூளையில் நியூரான்கள் பகிர்ந்துகொள்ளும் மின்னனு வடிவிலான செய்திகளை (ஆற்றலை) பிடித்து வரைபடமாக பார்க்க முடியும் போது அதிலிருந்து தகவலை ஏன் பெற முடியாது? இதுதான் புதிய கண்டுபிடிப்பின் தொடக்கம். மனிதனால் அந்த வரைபடத்தை வைத்துக்கொண்டு தகவலாக மாற்றுவது என்பது இயலாத காரியம், ஆனால் திறன்மிக்க கணினியால் அது நிச்சயமாக முடியும்.

 

 

மைக்ரோசாப்ட் வடிவமைப்பின்படி, தலையில் “Head band” என்ற கருவியை மாட்டிக்கொள்ளவேண்டி இருக்கும். அந்த Head band உங்களது மூளையில் இருந்து வருகின்ற தகவலை சேகரித்து தகவலாக மாற்றக்கூடிய பணியினை செய்யும். அந்த கருவியோடு இணைந்திருக்கும் மொபைலில் இருக்கும் ஆப் அல்லது பிரவுசரில் வீடியோ play ஆவது scroll செய்வது போன்ற பல விசயங்களை செய்திட முடியும்.

 


 

Mind Reading ஆபத்தா?

 

இப்போது வெறுமனே ஆப் அல்லது பிரவுசரை இயக்கவே மூளையில் இருந்து பெறப்படும் தகவலை படிக்கிறார்கள் என வைத்துக்கொண்டாலும் நாளடைவில் மனிதன் என்ன நினைக்கிறான் என்பதனையும் நம்முடைய அனுமதி இல்லாமலே கூட இந்த கணினிகளால் தெரிந்து கொள்ள இயலும்.

 

நம்முடைய எண்ணத்தை ஒரு கணினி படிப்பது என்பது தொழில்நுட்பத்தின் முன்னேற்றமாக இருக்கலாம். ஆனால் ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதனை ஒரு மெஷின் மூலமாக கண்டறிந்துவிடலாம் என்றால் ரகசியங்கள் என்னாகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அந்த தகவல் யாரால் எப்படி பயன்படுத்தப்படும் என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி. தொழில்நுட்பத்தின் வருகையை நம்மால் தடுக்க இயலாது ஆனால் பயன்பாட்டில் வரையறை செய்துகொள்ளமுடியும்.

 

தகவலை இடைமறித்து படிக்கும் போது அதில் மாற்றங்களை செய்ய முடியுமா என்பது அடுத்த கேள்விக்குறி? அப்படி மாற்றங்களை செய்யமுடிந்தால் யாரை வேண்டுமானாலும் மூளை சலவை செய்து, எந்த செயலையும் செய்யவைக்க முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

 


இதுபோன்ற பதிவுகளை உங்களது WhatsApp இல் பெறுவதற்கு கிளிக் செய்து இணைந்திடுங்கள்

WhatsApp Group Link


TECH TAMILAN

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular