Monday, November 25, 2024
HomeTech Articlesஎன்ன மார்க் சக்கர்பெர்க் சம்பளம் இவ்வளவுதானா? | Mark Zuckerberg's Salary

என்ன மார்க் சக்கர்பெர்க் சம்பளம் இவ்வளவுதானா? | Mark Zuckerberg’s Salary

facebook mark zukerberg

Mark Zuckerberg Salary

புகழ்பெற்ற மற்றும் அதிக லாபம் ஈட்டக்கூடிய facebook இல் வேலை செய்வதற்கு வெறும் $1 ஐ மட்டுமே சம்பளமாக பெறுகிறார் மார்க்


அண்மைய காலங்களில் தகவல் பாதுகாப்பு தொடர்பாக பல பிரச்சனைகளை facebook சந்தித்து வந்திருந்தாலும் அதனை  பயப்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நிகர லாபமும் குறைந்த பாடில்லை. 2017 இல் 40.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்த facebook நிறுவனம் 2018 ஆம் ஆண்டு 55.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது. இந்த ஆண்டு இது இன்னும் அதிகரிக்கலாம். இவ்வளவு லாபம் கொழிக்கின்ற நிறுவனத்தை உருவாக்கியவரும் தற்போது நிர்வகிப்பவருமான மார்க் சக்கர்பெர்க் facebook நிறுவனத்திலிருந்து எவ்வளவு சம்பளம் பெறுவார் என நினைக்கிறீர்கள்?

Read this also :

Facebook இன் 2018 ஆம் ஆண்டு லாபம் எவ்வளவு தெரியுமா?

Click Here 

10YearChallenge நம்மை கண்காணிப்பதற்காகவா?

Click Here 

கிளவுட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன?

Click Here

RAM என்றால் என்ன?

Click Here

நீங்கள் மில்லியன்களில் சம்பளம் பெறுவார் என நினைத்திருந்தால் அது தவறு. ஆண்டுக்கு வெறும் $1 மட்டும் தான் facebook நிறுவனத்தில் இருந்து சம்பளமாக பெறுகிறார் மார்க் சக்கர்பெர்க். கடந்த மூன்று ஆண்டுகளாகவே அவர் $1 மட்டுமே சம்பளமாக பெறுகிறார். இந்திய மதிப்பில் ரூ 70 இருக்கும்.

 

ஆனால் ஆச்சர்யமான விசயம் என்னவென்றால், மார்க் பாதுகாப்பிற்க்காக பல மில்லியன் டாலர் மதிப்பிலான தொகை செலவழிக்கப்படுகிறது என்பது தான். 2017 இல் மார்க் மற்றும் அவரது குடும்ப பாதுகாப்பிற்க்காக 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டன. 2018 இல் அந்த தொகை இன்னும் அதிகரித்து இருக்கிறது. கிட்டத்தட்ட $22.6 மில்லியன் செலவழிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

facebook நிறுவனர் மார்க் மட்டுமல்ல பல முன்னனி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் $1 தான் சம்பளமாக பெறுகிறார்கள். Alphabet இன் லாரி பேஜ், ஆரக்கிள் இன் லாரி எலிசன், HP இன் மெக் விட்மேன் என பலர் இந்த வரிசையில் இருக்கிறார்கள்.

நீங்கள் மார்க் இடத்தில் இருந்தால் எவ்வளவு சம்பளம் கேட்டிருப்பீர்கள்?

Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular