Friday, November 22, 2024
HomeTech Articles8K TV வந்தாச்சு! சாம்சங் மற்றும் எல்ஜி யின் 8K TV யை பாருங்க

8K TV வந்தாச்சு! சாம்சங் மற்றும் எல்ஜி யின் 8K TV யை பாருங்க

சாம்சங் நிறுவனம் வெளியிட்ட 8K டிவி

8K TV Generation

இன்னும் பல வீடுகளில் 4K தொலைக்காட்சிகளே சென்று சேரவில்லை. அதற்குள் சாம்சங் [Q950TS] மற்றும் எல்ஜி [OLED 8K TV] இரண்டு நிறுவனங்களும் 8K TV க்களை CES 2020 இல் களமிறக்கியுள்ளன. ஆனால் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த இரண்டு தொலைக்காட்சிகளுமே கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.

CES – The Global Stage for Innovation – CES 2020

சாம்சங் நிறுவனம் வெளியிட்ட 8K டிவி

தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான மேடை தான்  CES – The Global Stage for Innovation. இந்த ஆண்டிற்க்கான CES 2020 அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் [The World Trade Center Las Vegas] இல் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புத்தம் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு தங்களது திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் 8K TV யும் அறிமுகப்படுத்தப்பட்டது.

8K TV

சாம்சங் நிறுவனம் வெளியிட்ட 8K டிவி

இன்னும் 4K டிவி பல வீடுகளுக்கு சென்று சேரவில்லை. இதற்கு முக்கியக்காரணம், அதிக விலை. அதற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள் அப்படியே நின்றுவிடுவதில்லை. அடுத்தகட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களை செய்துகொண்டு தான் இருப்பார்கள். அந்தவகையில் தான் 8K TV தயாரிப்புகளில் முன்னனி நிறுவனங்கள் ஈடுபடத்துவங்கிவிட்டன.

CES 2020 இல் சாம்சங் நிறுவனம் Q950TS எனும் 8K QLED TV யை அறிமுகப்படுத்தியது. 85 இன்ச் அளவிலான திரையினைக் கொண்ட இந்த டிவியின் விளிம்புகள் மிகவும் நுண்ணிய வகையில் இருப்பதனால் தற்போதைய தொலைக்காட்சிகளில் சுற்றி இருக்கும் கறுப்பு நிற சுற்றை உங்களால் பார்க்க முடியாது. ஆகவே மொத்த டிவியுமே திரையாக இருக்கும்.  அதேபோல தடிமன் வெறும் 15 மில்லி மீட்டர் தான். LG நிறுவனம் OLED 8K TV மற்றும் NanoCell TV யை அறிமுகப்படுத்தியது. OLED 8K TV 77 இன்ச்சும் NanoCell TV 65 இன்ச்சும் இருக்கும்.

8K TV யை பொறுத்தவரைக்கும் தற்போது இருக்கக்கூடிய முதன்மையான பிரச்சனை 8K வீடியோக்கள் பற்றாக்குறை தான். அதனை நிவர்த்தி செய்திடும் விதமான தொழில்நுட்பங்களை இரண்டு தொலைக்காட்சிகளும் கொண்டிருக்கின்றன. அதன்படி இந்த தொலைக்காட்சிகளில் இருக்கும் ஆர்டிபிசியல் தொழில்நுட்பம் FHD மற்றும் 4K வீடியோக்களை 8K வீடியோக்களாக மாற்றும். அதுபோல இரண்டு தொலைக்காட்சிகளிலுமே தேவையில்லாத சத்தங்களை நீக்கும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.

சாம்சங் டிவியில் இருக்கும் சிறப்பம்சம், திரையில் பேசுகிறவர்கள் நகர்ந்தால் அந்த திசையில் சத்தமும் நகரும் விதமாக தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. எல்ஜி டிவியில் முகம் , எழுத்துக்கள் போன்றவற்றை தனித்து காட்டுவதற்கான தொழில்நுட்பங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களின் 8K டிவியிலுமே Google Assistant, Amazon Alexa போன்ற வசதிகள் இருப்பதனால் உங்களால் வாய்ஸ் கண்ட்ரோல் செய்துகொள்ள முடியும். சாம்சங் நிறுவனம் கூடுதலாக அந்த நிறுவனத்தின் Bixby assistant யை வைத்துள்ளது.

8K TV க்கான வரவேற்பு எப்படி இருக்கும்?

எவ்வளவு விலை இருந்தாலும் வாங்குகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். 8K TV யை பொறுத்தவரைக்கும் 8K  வீடியோக்களுக்கான பற்றாக்குறை தான் பெரிய பிரச்சனையாக இருக்கும். என்னதான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மாற்றினால் கூட ஒருவித குறைபாடு இருக்கவே செய்யும். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 8K TV அதிகம்பேரால் விரும்பப்படும் டிவியாக மாறும். போட்டி அதிகரிக்கும் போது விலை குறையவும் வாய்ப்பு இருக்கிறது.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular