இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பள்ளி மாணவர்களுக்கு “செயற்கைகோள் தயாரிப்பு” குறித்த பயிற்சி வகுப்பினை வருகிற கோடைகால விடுமுறை தினங்களில் நடத்திட திட்டமிட்டு இருக்கிறது. Yuva Vigyani Karyakram or Young Scientist Programme எனப்படும் இந்த பயிற்சி திட்டத்தில் நாடு முழுமைக்கும் இருந்து 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். அவர்களால் உருவாக்கப்படும் செயற்கைகோள் எதிர்பார்த்தபடி இருப்பின் விண்வெளிக்கும் அனுப்பப்படும்.
மத்திய அரசு கோரிக்கை
இந்தியாவில் இருக்கக்கூடிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்திய மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டது. அதன்படி இஸ்ரோ Young Scientist Programme எனப்படும் பயிற்சி திட்டத்தை துவங்கி இருக்கிறது.
திட்டத்தின் முக்கிய குறிப்புகள்
- இரண்டு வாரங்கள் நடக்கப்போகும் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற ஏப்ரல் மாதம் துவங்கும்
- மாணவர்கள் இஸ்ரோ வளாகத்திலேயே தங்கவைக்கப்பட்டு பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள்
- ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசத்தில் இருந்தும் CBSE , ICSE , மாநில பாடத்திட்டம் ஆகியவற்றில் படித்த மாணவர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 8 ஆம் வகுப்பு முடித்து 9 ஆம் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் இதற்க்கு தகுதியானவர்கள்.
- இஸ்ரோ ஒவ்வொரு மாநில தலைமை செயலாளருக்கும் மார்ச் இறுதிக்குள் 3 மாணவர்களை தேர்ந்தெடுக்க ஏற்கனவே கடிதம் அனுப்பி இருக்கிறது. மாணவர்களின் கடந்த கால கல்வி செயல்பாடு , மற்ற திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என கூறியுள்ளது
பயனுள்ள திட்டம்
வெளிநாட்டு மாணவர்கள் அறிவியலில் முன்னேறி நிற்பதற்கு காரணம் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிதான். தற்போது இஸ்ரோ, நமது மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கபோவதன் மூலமாக மிகப்பெரிய அனுபவத்தை நமது மாணவர்கள் பெறப்போகிறார்கள். இந்த பயிற்சி மாணவர்களிடத்தில் அறிவியலுக்கான ஆர்வத்தை தூண்டுவதோடு மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்துவதற்கு ஊன்றுகோலாகவும் இது அமையும். இஸ்ரோவை போலவே மற்ற அறிவியல் நிறுவனங்களும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்திட முன்வரவேண்டும்.
இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.
உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள், அவையே எங்களுக்கு ஊக்கம் தரும்
TECH TAMILAN
இதையும் படிங்க,
[easy-notify id=1639]