Site icon Tech Tamilan

கோவில்களில் காம சிலைகள் இதனால் தான் வைக்கப்பட்டுள்ளனவா?

கடந்த சில தலைமுறைகள் கடவுளையும் காமத்தையும் எதிரெதிர் விசயங்களாக பாவித்து வந்ததன் விளைவு தான் “கோவில்களில் காம சிலைகள் ஏன் வைக்கப்பட்டுள்ளன?” என்ற கேள்வி எழுவதற்கு காரணம் என இதற்கான காரணங்களை அறிந்த பிறகு உணர்கிறேன். இப்போது அதனை உங்களோடும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நம்மை சுற்றி இருக்கும் பல விசயங்கள், பழக்கவழக்கங்களை நாம் பழையது என புறந்தள்ளிவிட முடியாது. அவை சாதாரணமான விசயமாக இருந்தாலும் கூட அவற்றிற்கு பின்னால் ஏதோ ஒரு காரணம் மறைந்து இருப்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட எளிய கேள்விகளுக்கான பதில்களை தேடும் முயற்சி தான் இது.

 

ஒருமுறை பெங்களூர் தாண்டி இருக்கும் சிக்மங்களூர் என்ற ஊருக்கு நண்பர்களோடு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே சுற்றுலா தளங்களோடு சில கோவில்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே, ஒரு கோவிலுக்கு செல்லும் போது எங்களோடு வந்த ஓட்டுநர் ஒருசில தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதிலே ஏன் வெற்றிலையின் பின்பக்கத்தில் சுண்ணாம்பு தடவுகிறோம் என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான கதையை கூறினார். அதனை பிறகு பார்க்கலாம். அதோடு சேர்த்து ஒரு விசயத்தையும் கூறினார். அதுதான் இந்த கட்டுரைக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கும். திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் குறிப்பிட்ட அந்தக்கோவிலுக்கு வந்து சென்றால் பிள்ளைப்பேறு இருக்கும் என்றார்.

நமது மூளை அமைதியாக இருக்குமா? இதென்ன நம்பிக்கை, கோவிலுக்கு வந்து சென்றால் எப்படி குழந்தை பேறு உண்டாகும். ஏதோ கதை விடுகிறாரே என நினைக்கும் போது அது எப்படி நடக்கும் என்பதற்கான விசயத்தையும் கூறினார் ஓட்டுநர். அந்தக்கோவில் சிற்பங்களில் உடலுறவு வைத்துக்கொள்வதற்கான பல்வேறு நிலைகள் சிற்பமாக செதுக்கப்பட்டு இருக்கும். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் அந்த சிற்பங்களில் இருப்பது மாதிரியான நிலைகளில் உடலுறவு வைத்துக்கொண்டால் பிள்ளைப்பேறு உண்டாகும் என்று அவர் கூறினார்.

அந்த சிற்பங்களை பார்க்காமல் வெறுமனே கடவுளை மட்டும் தரிசித்துவிட்டு சென்றால் அதிலே பலன் இல்லை.

நமது முன்னோர்கள் பல விசயங்களை நமது அன்றாட நிகழ்வுகளோடு பிணைந்து வைத்துள்ளார்கள். அதனை புரிந்துகொள்ள முடியாத நிலையில் நாம் இருப்பது தான் இங்கே கேள்விகள் எழுவதற்கு காரணம்.

காம சிலைகள் மட்டுமே இருப்பது இல்லை

கோவில்களில் எண்ணற்ற சிலைகள் இருக்கும். ஆனால், நாம் கவனிப்பது கேள்விக்கு உட்படுத்துவது காம சிலைகளை மட்டும் தான். மற்ற சிலைகளை பற்றி கேள்வி கேட்காத நாம் காமம் சார்ந்த சிலைகளை கண்டால் மட்டும் கேள்வி எழுப்புவோம். மற்ற விசயங்களை போலவே காமமும் வாழ்க்கையின் ஒரு பகுதி, அதனை வித்தியாசமாக பார்க்க வேண்டியது இல்லை என்பதை நமது தலையில் ஏற்றவே அனைவரும் வந்துபோகும் கோவில்களில் அத்தகைய சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பமில்லா உலகத்தில்……

இப்போது மொபைல் போன் அனைவரிடத்திலும் இருக்கிறது. காமம் சார்ந்த விசயங்கள் உட்பட அனைத்தையுமே நாம் இருந்த இடங்களிலேயே தெரிந்துகொள்ள முடியும். ஆனால், தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டங்களில் புதிய தலைமுறை இவற்றை கற்றுக்கொள்ள முடியாது. பெரியவர்கள் சொல்லிக்கொடுக்கும் விசயமாகவும் இது இருக்காது. ஆகவே, தான் அனைவரும் வந்துபோகும் கோவில்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. அவை நாம் முகம் சுளிப்பதற்க்காக வைக்கப்பட்டவை அல்ல, நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டவை. 

அடுத்தமுறை நீங்கள் கோவில் சிற்பங்களில் காமம் சார்ந்த சிற்பங்களை கண்டால் அவற்றைக்கண்டு முகம் சுழிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். இந்தப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கும் பகிருங்கள்.

வங்கி லாக்கரில் உள்ள பொருள் தொலைந்தால் யார் பொறுப்பு? வங்கி லாக்கர் நடைமுறை என்ன?

Exit mobile version