மிகவும் பாதுகாப்பனதாக கருதப்படுகின்ற ஆப்பிள் ஐபோன்களில் TechCrunch நடத்திய ஆய்வில் , சில ஆப்கள் பயனாளர்களின் மொபைல் திரையை ரெகார்ட் செய்து அதன் சர்வர்களுக்கு அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டது . அப்படி அனுப்பப்படும் தகவல்களின் மூலமாக எப்படி ஆப்களை பயன்படுத்துகிறார்கள் என்பதனை அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் தகவல்களில் இருந்து பயனாளர்கள் பயன்படுத்துகின்ற பாஸ்போர்ட் எண் , கிரிடிட் கார்டு எண் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க முடியும் என்கிறார்கள் .
session replay technology இல் சிறந்து விளங்குகின்ற GlassBox அனலிடிக்ஸ் டூலை பெரும்பாலான ஆப்கள் பயன்படுத்துகின்றன .
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
இந்த டூலானது மற்ற கம்பெனிகள் தங்களுடைய ஆப்களில் இதனுடைய ஆப்சன்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது . இதன்மூலமாக screen ரெகார்ட் செய்யப்படுவது பின்னர் அதனை replay செய்து பயன்படுத்துவர்கள் ஆப்பினை எப்படி பயன்படுத்துகிறார்கள் , அதோடு எப்படி தொடர்புகொள்கிறார்கள் என்பதனை அறிந்துகொள்ள முடியும் .
Expedia, Hollister and Hotels.com போன்றவை இவற்றில் சில . இன்னும் பல ஆப்கள் இதுபோன்ற வசதியை பெற்றிருப்பது குறிபிடத்தக்கது . பெரும்பாலும் ஹோட்டல் , பயண முன்பதிவு , வங்கி சம்பந்தபட்ட ஆப்கள் தான் இதுபோன்ற வசதிகளை கொண்டிருக்கின்றன .
இந்த ஆப்கள் பயன்படுத்தப்படும்போது பயன்படுத்துபவர்களிடம் எந்த அனுமதியையும் கேட்பதில்லை , அதுபோலவே தங்களுடைய பிரைவசி பாலிசியில் கூட ரெகார்ட் செய்வது பற்றியோ தகவலை பார்ப்பது பற்றியோ எந்த விவரத்தையும் குறிப்பிடவில்லை .
இதுகுறித்து TechChrunch ஆப்பிள் நிறுவனத்திடம் முறையிட்டபோது அதற்கு ஆப்பிள் நிறுவன அதிகாரியொருவர் அளித்த பதில் ” பயனாளர்களின் பிரைவேசி என்பதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மையான நோக்கம் , இதுபோன்ற screen ஐ ரெகார்ட் செய்யும் முறையினை நீக்குமாறு அனைத்து ஆப் நிறுவனங்களுக்கும் கூறி இருக்கின்றோம் . அதேபோல மிகத்தெளிவாக இதுபோன்ற முக்கிய விவரங்களை பாலிசியில் இடம்பெற செய்யவேண்டும் எனவும் கூறியிருக்கிறோம் ” என்றார் .
இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.
TECH TAMILAN
இதையும் படிங்க,
correct