கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் இந்திய அரசு ஆரோக்யா சேது [Aarogya Setu] என்ற மொபைல் ஆப்பை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டு சில நாட்கள் ஆகியுள்ள நிலையில் அதிகம் பேரால் டவுன்லோட் செய்யப்படும் ஆப்களில் ஒன்றாக இந்த Aarogya Setu ஆப் இருக்கிறது. இந்த ஆப்பை எப்படி பயன்படுத்துவது? இந்த ஆப் எந்தவகையில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டு பயனாளர்கள் இங்கே கிளிக் செய்து ஆரோக்யா சேது ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
ஆப்பிள் மொபைல் பயனாளர்கள் இங்கே கிளிக் செய்து ஆரோக்யா சேது ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
ஆரோக்யா சேது ஆப் மூன்று விதங்களில் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
1. நீங்கள் உங்களுக்கே COVID-19 அல்லது கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள இந்த ஆப் வழிநடத்தும்
2. உங்களுக்கு பரிசோதனை தேவைப்படுகிறது என நீங்கள் கருதினால் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய அவசரகால மருத்துவ உதவி மையத்தின் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்
3. நீங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் COVID-19 அல்லது கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இருந்தால் உங்களுக்கு இந்த ஆப் எச்சரிக்கை விடுக்கும்.
ஆரோக்யா சேது ஆப்பை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி?
இங்கே டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்,
Android Users : Download Here
iOS Users : Download Here
>> மொழியை தேர்ந்தெடுங்கள் : ஆரோக்யா சேது ஆப் ஆனது ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 11 இந்திய மொழிகளில் சேவையினை வழங்கும். உங்களுடைய மொழியை தேர்ந்தெடுங்கள்
>> உங்களது மொழியை தெரிவு செய்தவுடன் சில தகவல்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
>> பின்னர் “பதிவு செய்யவும்” என்கிற பகுதிக்கு வந்தவுடன் நீங்கள் அதை அழுத்திட வேண்டும்.
>> பின்னர் உங்களுக்கு சேவை விதிமுறைகள் காட்டப்படும். அதற்கு “நான் ஒப்புக்கொள்கிறேன்” என்ற பட்டனை அழுத்துங்கள்.
>> உங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்திடுங்கள். நீங்கள் “சமர்ப்பிக்கவும்” பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு OTP வரும். அதை பதிவு செய்யுங்கள்.
>> தற்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களைப்பற்றிய தகவல்களை பதிவு செய்திடுங்கள்.
சொந்த விவரங்கள், வெளிநாட்டு பயணம், உங்களுடைய பணி, உங்களுக்கு ஏதேனும் இருக்கும் நோய் அறிகுறி போன்றவை குறித்த கேள்விகள் கேட்கப்படும். அவற்றிற்கு தகுந்த பதிலை நீங்கள் தெரிவு செய்திடுங்கள்
>> அனைத்தையும் பதிவு செய்த பிறகு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கருதினால் அந்த ஆப்பானது உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். உங்களுக்கு அறிகுறி எதுவும் இல்லை என உங்களுடைய பதிலில் இருந்து தெரிந்துகொண்டால் “தங்களுக்கு நோய்த்தொற்றின் ஆபத்து குறைவானது” என தகவல் தெரிவிக்கும்.
ஆரோக்யா சேது ஆப் எப்படி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தெரிவிக்கும்?
ஆரோக்யா சேது ஆப்பின் முக்கிய பயன்பாடாக இருப்பதே நீங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர் வந்தால் அல்லது இருந்தால் உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் என்பதுதான். சரி எப்படி இந்த ஆப் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்டறியும்? இந்த கேள்வி உங்களுக்கு எழலாம்.
இந்த வசதியை நீங்கள் பெறுவதற்கு உங்களுடைய மொபைலில் புளுடூத்தை ஆன் செய்திருக்க வேண்டும் மற்றும் location sharing ஐ “Always” இல் வைத்திருக்க வேண்டும். இப்போது உங்களது மொபைலில் இருக்கும் ஆரோக்யா சேது ஆப் ஆனது உங்களுக்கு அருகில் குறிப்பிட்ட எல்லை வரை டிடெக்ட் ஆகும் ஆரோக்யா சேது ஆப்பை.கண்டறியும். அவர்கள் கொரோனா வைரஸ் பாதித்தவர்களாக இருப்பின் நீங்கள் அவர்களுக்கு நெருக்கமான தொலைவில் இருந்தால் உங்களுக்கு அலர்ட் செய்தி அனுப்பப்படும். கொரோனா வைரஸ் பாதித்த நபர் உங்களுடைய எல்லைக்குள் [Bluetooth / GPS proximity of your phone] வரும்போதெல்லாம் உங்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.