Site icon Tech Tamilan

Dropshipping Business துவங்குவது எப்படி? முழு தகவல்

how to start dropshipping business in india (1)

how to start dropshipping business in india (1)

உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். சிலருக்கு அது இருக்காது. ஒருவேளை முதலீடு தான் உங்களுக்கான தடையாக இருக்கிறது எனில் இங்கே சூப்பரான தீர்வு Dropshipping Business தான். 

கடந்த சில ஆண்டுகளாகவே, Dropshipping Business ஐ பலரும் செய்து வருகிறார்கள். இதற்கு இந்த பிசினஸ் மிகவும் சுலபமானதாகவும் சவால்கள் குறைவானதாகவும் இருக்கிறது என்பதனால் தான்.

Naturals Franchise துவங்குவது எப்படி? எவ்வளவு செலவாகும்?

Dropshipping Business என்றால் என்ன?

டிராப்ஷிப்பிங் பிசினஸ் என்பது பொருட்களை சேமித்து வைக்காமல் ஒரு கடையை வைத்திருப்பது போன்றது. நீங்கள் ஒரு டிராப் ஷிப்பராக, பொருள்களை உற்பத்தி செய்திடும் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்ற வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு வாடிக்கையாளர் நீங்கள் நிர்வகிக்கும் இணையதளம் அல்லது  ஆன்லைன் ஸ்டோரிலிருந்து எதையாவது ஆர்டர் செய்தால், நீங்கள் ஒரு சப்ளையரிடமிருந்து குறிப்பிட்ட பொருளை வாங்க வேண்டும். நீங்கள் ஆர்டர் செய்தவரின் விவரங்களையும் பணத்தையும் நிறுவனத்திடம் கொடுத்தால் அவர்கள் பொருளை யார் ஆர்டர் செய்தார்களோ அவர்களுக்கே நேரடியாக அனுப்பி வைப்பார்கள்.

டிராப்ஷிப்பிங் பிசினஸ் இன் நன்மைகள் என்ன?

டிராப்ஷிப்பிங் பிசினஸ் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு கடை வைக்க வேண்டும் என நினைத்தால் பொருள்கள் வாங்கி ஸ்டோர் செய்திட முதலீடு செய்திட வேண்டி இருக்கும். இதற்கு நிச்சயமாக பெரும் முதலீடு என்பது தேவைப்படும். ஆனால், டிராப்ஷிப்பிங் பிசினஸ் இல் அப்படி எதுவும் தேவைப்படாது. ஏனெனில் நீங்கள் பொருள்களை வாங்க வேண்டிய தேவையே இங்கு இருக்காது. 

அதேபோல, நீங்கள் பார்சல் செய்து பொருள்களை அனுப்பும் வேலையைக்கூட செய்திட வேண்டிய அவசியம் இருக்காது. அதனையும் பொருள்களை உற்பத்தி செய்பவர்களே செய்வார்கள். 

வாடிக்கையாளருக்கும் பொருள்களை உற்பத்தி செய்பவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக மட்டுமே நீங்கள் இருப்பீர்கள் என்பதனால் இதனை செய்வது எளிதாக இருக்கும்.

KFC Franchise வாங்குவது எப்படி? எவ்வளவு முதலீடு தேவை?

டிராப்ஷிப்பிங் பிசினஸ் இன் சவால்கள் என்ன?

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல டிராப்ஷிப்பிங் பிசினஸிற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இது செய்வதற்கு மிகவும் எளிதான ஒன்றாக இருப்பது போலவே சில சவால்கள் கொண்டதாகவும் இருக்கும். 

நீங்கள் இதில் ஒரு இடைத்தரகர் போல மட்டுமே இருப்பீர்கள். ஆர்டர் அனுப்புவது, பொருளின் தரம் என அனைத்தும் மூன்றாம் நபரை சேர்ந்ததாகவே இருக்கும். ஆகவே, நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். 

துவக்க காலங்களில் உங்களுக்கு ஆர்டர்கள் குறைவாக இருக்கும். போகப்போகத்தான் உங்களுக்கு ஆர்டர்கள் அதிகமாக வரத்துவங்கும். உங்களுக்கு ஆர்டர் அதிகமாக வரவேண்டும் எனில் நீங்கள் அனுப்பும் பொருள்கள் அனைத்தும் தரம் மிக்கதாக இருப்பது அவசியம். இதனை நீங்கள் பார்த்துக்கொள்வது சிரமமாக இருக்கலாம். 

உங்களுக்கு ஆர்டர்கள் கிடைப்பதற்கு ஒரு சிறந்த விளம்பர யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டியது அவசியம். இது துவக்க காலங்களில் உங்களுக்கு சிரமமாக இருக்கலாம்.

Chai Kings Franchise துவங்குவது எப்படி? முழு விளக்கம்

Dropshipping Business ஐ இலவசமாக ஆரம்பிப்பது எப்படி?

பெரிய முதலீடு இல்லாமல் உங்களால் Dropshipping Business ஐ ஆரம்பிக்க முடியும் என்றாலும் கூட நீங்கள் சில வேலைகளை முறைப்படி செய்துதான் ஆக வேண்டும். இங்கே உங்களுக்கு Dropshipping Business ஐ இலவசமாக எப்படி துவங்குவது என பார்க்கலாம். 

Niche : முதலில் எந்த மாதிரியான பொருள்களை நீங்கள் விற்பனை செய்யப்போகிறீர்கள் என்பதை தேர்வு செய்திடுங்கள். பேஷன் பொருள்கள் துவங்கி டெக்னாலஜி பொருள்கள் வரைக்கும் எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்யலாம். 

Set Up Your Online Store : நீங்கள் தேர்வு செய்த பொருளை விற்பனை செய்வதற்கான Online Store ஐ நீங்கள் தயார் செய்திட வேண்டியது அவசியம். Shopify, WooCommerce என பல்வேறு பிளாட்பார்ம்கள் இருக்கின்றன, அதேபோல, Wix போன்ற தளங்களை பயன்படுத்தியும் நீங்கள் ஆன்லைன் ஸ்டோர் ஐ உருவாக்கலாம். 

Suppliers : இப்போது உங்களுக்கான Suppliers ஐ தேர்வு செய்திடுங்கள். அப்படி நீங்கள் Suppliers ஐ தேர்வு செய்திடும் போது அவர்கள் நேரடியாக பொருளை அனுப்பும் வசதியை கொண்டுள்ளார்களா என பார்த்துக்கொள்ளுங்கள். 

Market Your Products : உங்களது Online Store ஐ நீங்கள் விளம்பரப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதற்காக நீங்கள் சமூக வலைத்தளங்கள், content marketing என எதனை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அனைத்துமே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும். 

Import – Export Business இந்தியாவில் துவங்குவது எப்படி?

Best dropshipping sites in India

நீங்கள் இந்தியாவில் டிராப்ஷிப்பிங் பிசினஸ் செய்வதற்கு பல்வேறு தளங்கள் இருக்கின்றன. இவற்றை நீங்கள் பயன்படுத்தினால் எளிதாக suppliers உடன் தொடர்புகொள்ள முடியும். அதேபோல, ஆர்டர்களை கையாளும் வசதியும் இங்கே இருக்கின்றன. 

IndiaMART : IndiaMART என்பது நன்கு அறியப்பட்ட ஆன்லைன் சந்தையாகும், இங்கே நீங்கள் பல்வேறு பொருள்களை தயாரிக்கும் சப்ளையர்களைக் காணலாம். உங்களால் உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுடன் இங்கிருந்து தொடர்புகளை மேற்கொள்ள முடியும். 

Shopify : Shopify மிகவும் எளிதாக ஆன்லைன் சந்தையை உருவாக்க உதவும் ஒரு சிறந்த தளம். உங்களால் உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுடன் இங்கிருந்து தொடர்புகளை மேற்கொள்ள முடியும். 

TradeIndia : இந்தியாவில் டிராப்ஷிப்பிங் பிசினஸ் செய்வதற்கு இதுவும் ஒரு சிறந்த தளமாகும். இதில் இருக்கும் பல்வேறு வசதிகள் உங்களுக்கு எளிதாக பிசினஸ் செய்வதற்கு உதவிகரமாக இருக்கும். 

Meesho : அனைவரும் அறிந்த இந்த Meesho தளமும் டிராப்ஷிப்பிங் பிசினஸ் செய்வதற்கு சிறந்த தளமாகும். உங்களுடைய reselling business ஐ எந்தவித முதலீடும் இல்லாமல் செய்வதற்கு ஓர் சிறந்த தளமாகும்.  இங்கே பேஷன் துவங்கி, பல்வேறு பொருள்கள் இருக்கின்றன. 

ExportersIndia : ExportersIndia என்பது இந்திய ஏற்றுமதியாளர்களை உலகளவில் வாங்குபவர்களுடன் இணைக்கிறது. டிராப்ஷிப்பிங் பிசினஸ் செய்பவர்களை உற்பத்தியாளர்களுடன் இணைக்க இது உதவுகிறது. 

இப்படி நீங்கள் டிராப்ஷிப்பிங் பிசினஸ் செய்வதற்கு இந்தியாவில் இன்னும் பல தளங்கள் இருக்கின்றன. 

Jim Trade

WholesaleBox

Webdealindia

Baapstore

Hothaat

நீங்கள் பெரிய அளவில் டிராப்ஷிப்பிங் பிசினஸ் செய்வதற்கு இந்தத் தளங்கள் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

Dropshipping Business  செய்திட சில ஆலோசனைகள்

இந்தியாவில் Dropshipping Business செய்திடுவது மிகவும் எளிமையான விசயம் தான். இங்கே உங்களுக்கு சில யோசனைகளை சொல்கிறேன். இவை உங்களுக்கு பயன்படலாம். 

1. ஆடைகள் 

இந்தியாவில் ஆடை விற்பனை என்பது எப்போதும் சளைக்காத ஒரு வியாபாரம். இப்போது ஆன்லைன் விற்பனை அதிகரித்துவிட்ட சூழலில் நெடுந்தொலைவில் உள்ளவர்கள் கூட தங்களுக்கு விருப்பமான ஆடைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். தரமான, சூப்பரான டிசைனில் ஆடை தயாரிக்கும் விற்பனையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு நீங்கள் விற்பனையை துவங்கலாம். 

2. எலக்ட்ரானிக் பொருள்கள்

ஹெட்போன் துவங்கி ஸ்மார்ட்வாட்ச் என பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்க பலரும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இந்த சாதனங்கள் மலிவு விலைக்கு பல்வேறு உற்பத்தியாளர்களிடம் இருந்து கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உங்களது ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யலாம். 

3. Fitness Equipment 

உடல் ஆரோக்கியம் பற்றிய அக்கறை மக்களிடத்தில் அதிகரிப்பதன் மூலமாக Fitness Equipment விற்பனை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. Fitness Equipment விற்பனைக்கு ஏற்றதொரு பொருள். 

4. கார் உதிரிபாகங்கள் 

ஒவ்வொருவரும் காரை மிகவும் நேசித்து பார்த்துக்கொள்கிறார்கள். அதற்காக, பல்வேறு உதிரி பாகங்களை அவர்கள் தொடர்ச்சியாக வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். கார் கவர் துவங்கி வாசனை திரவியம் என பல்வேறு பொருள்களை விற்கலாம். 

5. செல்லப் பிராணிகளுக்கான பொருள்கள் 

நாம் ஒவ்வொருவரும் செல்லப்பிராணிகளை மிகவும் அக்கறையாக பார்த்துக்கொள்கிறோம். அதற்காக, உணவு மற்றும் பெல்ட் என பல்வேறு பொருள்களை விற்கலாம். 

இது தவிர, அழகு சாதன பொருள்கள், பாதுகாப்பு கேமரா பொருள்கள், ஸ்மார்ட் போன் Accessories, கவரிங் நகைகள், உணவு தயாரிப்பு பொருள்கள் என பல பொருள்களும் விற்பனைக்கு உகந்தவை தான்.

முடிவு

இந்திய இளைஞர்கள் பலர் இப்போது தொழில் துவங்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். செய்வதற்கு பல தொழில்கள் இருக்கின்றன என்றாலும் கூட Dropshipping Business எந்தவித முதலீடும் இல்லாமல் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தொழில்களில் ஒன்றாக இருக்கின்றது. முதலீடு இல்லை, வெகு சுலபமாக செய்யலாம், லாபம் அதிகம், விளம்பரம் செய்திட சிறிய அளவிலான யுக்தி போன்றவை தான் தேவை என்பதனால் இது செய்வதற்கு மிகவும் ஏற்ற தொழிலாக இருக்கும்.

Exit mobile version