Thursday, July 4, 2024
HomeTech ArticlesLink shortening மூலமாக சம்பாதிப்பது எப்படி? முழு விளக்கம்

Link shortening மூலமாக சம்பாதிப்பது எப்படி? முழு விளக்கம்

ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க ஏராளமான வழிகள் இருக்கின்றன. அதிலே பலரும், எளிமையான வழி என்று சொல்லக்கூடிய ஒரு வழி தான் Link shortening. Link shortening ஐ நீங்கள் URL shortening எனவும் கூறலாம். நீங்கள் ஏதேனும் ஒரு URL shortner இணையதளத்தில் இணைந்து ஒரு Shortlink ஐ உருவாக்க வேண்டும். அதனை யாரேனும் கிளிக் செய்தால் அதன் மூலமாக நீங்கள் பணம் ஈட்ட முடியும். இந்தப்பதிவில் நீங்கள் URL shortening மூலமாக பணம் ஈட்டுவது எப்படி என்பதை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

எந்தவொரு விசயத்திற்கு உள்ளேயும் இறங்கும் போது அதுபற்றி முழுவதுமாக அறிந்துகொண்டு இறங்குவது சிறந்தது. அதற்காகவே, இந்த முழு கட்டுரையும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

Topics 

Link Shortener என்றால் என்ன? Link Shortener ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்? 

Paid Link Shortener என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?

Paid Link shortening இல் இணைந்து பணம் சம்பாதிப்பது எப்படி? 

Best Paid Shorteners ஐ தேர்வு செய்வது எப்படி?

URL shortening மூலமாக எவ்வளவு சம்பாதிக்கலாம்?

Link Shortener என்றால் என்ன? அதனை ஏன் பயன்படுத்த வேண்டும்?

Link Shortener அல்லது URL Shortener என்பது நீண்ட இணையதள லிங்கை சிறியதாக மாற்றிக்கொடுக்கும் ஒரு இணையதளம் அல்லது ஆப் எனலாம்.

உதாரணத்திற்கு, பின்வரும் நீண்ட URL ஐ சிறியதாக மாற்றுவதற்கு URL Shortener ஐ பயன்படுத்தலாம். 

https://techtamilan.in/google-my-business-profile-suspended-in-tamil/

நீங்கள் அதற்கு ஏதேனும் ஒரு URL Shortener இணைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கே மேற்கூறிய இணையதளத்தை பதிவிட்டால் நீங்கள் சுருக்கப்பட்ட லிங்கை பெறலாம். அது இப்படித்தான் இருக்கும், shorturl.at/GMOS2 . நீங்கள் இந்த லிங்கை கிளிக் செய்தால் மேற்கூறிய இணைத்ததளத்திற்கு அது redirect ஆகி செல்வதை பார்க்கலாம்.


Link Shortener ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்?

1. நீங்கள் Link Shortener ஐ பயன்படுத்தினால் சிறிய அளவிலான லிங்கை பெற முடியும். உதாரணத்திற்கு, ட்விட்டர் போன்ற தளங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எழுத்துக்களை மட்டும் தான் பயன்படுத்த முடியும். இது போன்ற சூழலில் நீண்ட லிங்கை பகிர்வது முடியாது. அப்போது Link Shortener ஐ பயன்படுத்தலாம். 

2. சில Link Shortener களை பயன்படுத்தும்போது எத்தனை பேர் லிங்கை கிளிக் செய்துள்ளார்கள் என்பதை கூட அறிய முடியும்.

3. சில Link Shortener களை பயன்படுத்தி பணம் ஈட்ட முடியும். அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.


Paid Shortener என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?

இரண்டு விதமான Link Shortener இருக்கின்றன. சாதாரண Link Shortener களை பயன்படுத்தும் போது உங்களுக்கு கிடைக்கும் சிறிய URL ஐ யாரேனும் கிளிக் செய்தால் நேரடியாக உங்களது இணையதளத்திற்கு செல்வார்கள். ஆனால், Paid Shortener இல் உருவாக்கப்படும் சிறிய URL ஐ யாரேனும் கிளிக் செய்தால் அவர்கள் முதலில் விளம்பரங்களை பார்ப்பார்கள். பின்னர் அங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்கை கிளிக் செய்தால் தான் உங்களது இணையதளத்திற்கு செல்ல முடியும். அந்த சிறிய URL க்கும் உங்களது இணையத்தளத்திற்கும் இடையே advertising layer என்ற ஒன்று இருக்கும்.

அங்கே காட்டப்படும் விளம்பரங்களின் மூலமாக URL Shortener நிறுவனங்கள் சம்பாதிப்பார்கள். 1000 முறைக்கு இவ்வளவு என்கிற முறையில் உங்களுக்கு பணம் வழங்கப்படும். CPM $10 என்றால் 1000 முறை கிளிக் செய்திருந்தால் $10 வழங்கப்படும். 

உதாரணத்திற்கு, https://indiurl.in.net/ என்பது ஓர் பணம் ஈட்டும் வசதி உள்ள URL Shortener. இங்கே URL Shorten செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்தால் முதலில் விளம்பரம் அல்லது ப்ரோமோஷனல் இணையதளத்தை பார்க்க வேண்டும். பிறகு தான் உண்மையான இணையதளத்தை பார்க்க முடியும். 

Link Shortener Screenshot

Paid URL shortening இல் இணைந்து பணம் சம்பாதிப்பது எப்படி?

பணம் சம்பாதிக்கும் வகையிலான பல URL shortening இணையதளங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, பின்வரும் URL shortening இணையதளங்களை கூறலாம். 

https://adf.ly/

https://shorte.st/

https://indiurl.in.net/

இதில் ஏதேனும் ஒரு இணையதளத்திற்கு சென்று உங்களுக்கான கணக்கை உருவாக்கிக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, https://indiurl.in.net/ என்ற இணையதளத்தில் ஓர் கணக்கு உருவாக்கி இருக்கிறேன். இப்போது New Shorten Link என்பதை கிளிக் செய்திட வேண்டும். 

Your URL here என்ற இடத்தில் நீங்கள் Shorten செய்ய விரும்பும் URL ஐ பதிவிட வேண்டும். பின்னர் Shorten என்பதை கிளிக் செய்திட வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு ஓர் புதிய URL கிடைக்கும்.

நீங்கள் அந்த URL ஐ பகிர வேண்டும். அதனை யாரேனும் கிளிக் செய்தால் உடனடியாக அது விளம்பரம் உள்ள வேறொரு Advertising பக்கத்திற்கு செல்லும். அங்கிருக்கும் லிங்கை கிளிக் செய்தால் தான் நீங்கள் பகிர்ந்த இணையதளத்தை அவர்களால் பார்க்க முடியும். Advertising பக்கத்தில் விளம்பரங்கள் காட்டப்படும் போது குறிப்பிட்ட நிறுவனம் பணம் ஈட்டும். உங்களுக்கும் அதிலே சிறிய தொகை வழங்கப்படும். 

பொதுவாக, உங்களுக்கு பணம் என்பது CPM முறையில் தான் வழங்கப்படும். ஒவ்வொரு நாட்டிற்கும் இந்த CPM 

 தொகை மாறுபடும். உதாரணத்திற்கு, CPM $12 எனில்,  நீங்கள் பகிர்ந்த Short Link ஐ கிளிக் செய்து 1000 பேர் பார்த்து இருந்தால் உங்களுக்கு $12 கொடுக்கப்படும்.

இப்போது உங்களுக்கு ஓர் கேள்வி எழலாம். என்னுடைய இணையதள லிங்கை மட்டும் வைத்துதான் Shortlink உருவாக்க முடியுமா? இதுவொரு நல்ல கேள்வி. நீங்கள் எந்த இணையதளத்தை வைத்து வேண்டுமானாலும் Shortlink உருவாக்கலாம். உதாரணத்திற்கு, அதிகம்பேர் டவுன்லோட் செய்யக்கூடிய திரைப்படம், புத்தகம் போன்றவற்றின் டவுன்லோட் லிங்கை வைத்துகூட நீங்கள் Shortlink உருவாக்கலாம். அதனை நீங்கள் telegram, whatsapp போன்றவற்றில் பகிர்ந்து அதனை பலர் கிளிக் செய்தால் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

Best Paid Shorteners ஐ தேர்வு செய்வது எப்படி?

பல Paid Shorteners இங்கே இருக்கிறார்கள். நீங்கள் அவற்றில் இருந்து சிறந்த ஒரு Paid Shortener ஐ தேர்வு செய்திடுவது அவசியம். இல்லையேல், உங்களால் நீங்கள் எதிர்பார்த்தபடி பணம் ஈட்ட இயலாது. உங்களது வேலையை மட்டும் எடுத்துக்கொண்டு உங்களை ஏமாற்றும் பல Paid Shorteners இங்கே மார்க்கெட்டில் இருக்கிறார்கள். நீங்கள் சிறந்த Paid Shorteners ஐ தேர்வு செய்திட எங்களது சில பரிந்துரைகள் பயன்படலாம். 

1. உங்கள் நம்பகத்தன்மையை பெற்ற யாரேனும் ஒருவர் ஏற்கனவே Paid Shorteners இல் இணைந்து பணம் ஈட்டி இருந்தால் அதனை நீங்கள் நம்பலாம். அதிலே நீங்களும் இணைந்து பணம் ஈட்டலாம். 

2. Paid Shorteners இல் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு இருப்பார்கள். Paid Shorteners இன் Review க்களை படித்து அதன் பிறகு தேர்வு செய்திடுங்கள். பின்வரும் Paid Shorteners அதிகம் பேரால் பரிந்துரை செய்யப்பட்ட Paid Shorteners.

https://adf.ly/

https://shorte.st/

https://indiurl.in.net/

3. Minimum Payout – இது எவ்வளவு என பாருங்கள். $10 போன்று குறைந்த அளவில் இருந்தால் பரவாயில்லை. அதிகமாக இருந்தால் நீங்கள் அந்த அளவை எட்டுவதற்கே பல நாட்கள் போராட வேண்டி இருக்கும். 

4. Payment Transfer Method – உங்களது பணம் அனுப்பும் வசதி என்னவெல்லாம் இருக்கிறது என பாருங்கள். UPI, நேரடியாக வங்கிக்கணக்கு போன்றவை இருந்தால் நல்லது. 

5. CPM Price – இது மிகவும் முக்கியம். எந்த நாட்டில் இருந்து அதிகம் பேர் உங்களுடைய short link ஐ அதிகம் பார்ப்பார்களோ அந்த நாட்டிற்கு எவ்வளவு CPM என்பதை பாருங்கள். அதிகமாக இருந்தால் உங்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கும். 

6. Conditions – மேலும் என்னென்ன விதிமுறைகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள் என பார்த்துக்கொள்ளுங்கள். சிலர், கடுமையான விதிமுறைகளை வைத்து இருப்பார்கள். Javascript enable ஆகி இருக்க வேண்டும் என்பது போன்ற பல விசயங்கள் அதிலே இருக்கும். 

Link shortening மூலமாக எவ்வளவு சம்பாதிக்கலாம்?

இது முக்கியமான கேள்வி. ஆன்லைன் மூலமாக பல லட்சங்களை ஈட்ட வேண்டும் என நினைப்பவருக்கு இந்த Link shortening முறை மட்டுமே போதுமானது இல்லை. அப்படி நீங்கள் பல லட்சங்களை ஈட்ட வேண்டும் எனில் நீங்கள் பல வழிகளில் வருமானம் வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, Youtube மூலமாக, Affiliate Program மூலமாக, URL shortening மூலமாக, Blogging மூலமாக என இருக்க வேண்டும். 

URL shortening மூலமாக கணிசமாக பலர் சம்பாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களைப்போல உடனடியாக நீங்களும் சம்பாதித்துவிட முடியாது. சில URL shortening இணையதளங்கள் Payment Proof ஐ வெளிப்படையாக தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு, https://urltamil.in/ என்ற இணையதளம் வெளிப்படையாக தனது Payment Proof ஐ வெளியிட்டு உள்ளது. இப்படி உள்ள தகவல்களை தேடிப்பார்த்தால் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது நீங்கள் எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறீர்கள், எவ்வளவு அதிகமாக உங்களது லிங்கை பலர் கிளிக் செய்கிறார்கள் என்பதை பொறுத்தது. டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் படங்களை டவுன்லோட் செய்யலாம் என்று கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்க்குகளை நாம் கிளிக் செய்தால் அது எங்கேயோ செல்லும் அல்லவா. அது எல்லாமே URL shortening முறையில் பணம் ஈட்ட உருவாக்கப்பட்ட லிங்க்குகள் தான். இப்படி நீங்களும் பல நல்ல ஐடியாவை பயன்படுத்தி பணம் ஈட்டலாம். 

முடிவுரை

நீங்கள் ஆன்லைனில் பணம் ஈட்டுவது மிகவும் சுலபமானது என நினைக்கக்கூடாது. அப்படி சுலபமாக இருந்தால் அனைவருமே அப்படி செய்துவிட முடியும் தானே. ஆன்லைனில் பணம் ஈட்ட ஆயிரம் வழிகள் உள்ளன. அதிலே ஒன்று தான் URL shortening. இதிலே நீங்கள் எப்படி வித்தியாசமான யோசனைகளை பயன்படுத்தி அதிகம் பேரை உங்களது லிங்கை கிளிக் செய்திட வைக்கப்போகிறீர்கள் என்பது தான் முக்கியமான விசயம். புதிய முறைகளை தேடுங்கள், புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்களாலும் பணம் ஈட்ட முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular