Tuesday, December 3, 2024
HomeTech Articlesமுதலீடு இல்லாமல் ஆன்லைன் மூலமாக சம்பாதிப்பது எப்படி?

முதலீடு இல்லாமல் ஆன்லைன் மூலமாக சம்பாதிப்பது எப்படி?

ஆன்லைன் மூலமாக சிலர் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதித்து வருகிறார்கள். இதன் காரணமாக, பலரும் ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க வழிகளை தேடி வருகிறார்கள். நீங்கள் “How to make money tamil”, “how to earn money tamil” “how to make money online tamil” “how to make money from home tamil” “how to earn online tamil” “how to earn money online tamil” “earn money online tamil” “make money tamil” “money tamil” போன்ற கேள்விகளுக்கு பதில் தேடியவராக இருந்தால் நிச்சயமாக இந்தப்பதிவு உங்களுக்கு பல தகவல்களை தரும்.

Table Of Contents :

1. இன்சூரன்ஸ் முகவர் [Work as an Insurance POSP]

2. ஃப்ரீலான்சிங் வேலை வாய்ப்பு [Look for Freelancing Work]

3. கன்டென்ட் எழுத்தாளர் [Try Content Writing Jobs]

4. இணையதளம் ஆரம்பித்தல் [Start Blogging]

5. ஆன்லைன் மூலமாக பொருள் விற்பனை [Sell Your Digital Products]

6. மொழிபெயர்ப்பு பணி [Look For Translation Jobs Online]

7. ஆன்லைன் பயிற்சி வகுப்பு [Opt for Online Tutoring]

8. ட்ராவல் ஏஜென்ட் [Work as a Travel Agent]

9. Affiliate Marketing

10. யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம் [Start Youtube Channel]

ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன. அதிலே பலரும் வெற்றிகரமாக பணத்தை சம்பாதித்து வருகிறார்கள். அவர்களைப்போல தானும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என ஆன்லைனில் தேடிவருகிறார்கள். ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க இன்சூரன்ஸ் பாலிசி விற்பது, Freelancing Work செய்வது, Content Writing Jobs செய்வது, Blog துவங்குவது, Youtube சேனல் ஆரம்பிப்பது என பல வழிகள் உள்ளன. அவற்றை விரிவாக இங்கே பார்க்கலாம்.

1. இன்சூரன்ஸ் முகவர் [Work as an Insurance POSP]

ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன. ஆனால், எளிமையாக பணம் சம்பாதிக்க அனைவருக்கும் ஏற்றதொரு வழி “இன்சூரன்ஸ் முகவர்” பணி. நீங்கள் வேறு முழு நேர பணியில் ஈடுபடுகிறவராக இருந்தாலும் கூட இன்சூரன்ஸ் முகவராக இருக்க முடியும். பல முன்னனி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அந்த நிறுவனங்களின் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்று கொடுப்போருக்கு நல்ல கமிஷன்களை வழங்குகின்றன. நீங்கள் அப்படியொரு நல்ல இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முகவராக சேர்த்துக்கொண்டால் எளிமையாக சம்பாதிக்க முடியும். 18 வயது நிரம்பி, 10 வகுப்பு படித்திருந்தால் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட பிறகு இன்சூரன்ஸ் முகவராக மாறலாம். இன்டர்நெட், கணினி இருந்தால் ஆன்லைன் மூலமாகவே இன்சூரன்ஸ் பாலிசிகளை பலருக்கும் உங்களால் விற்க முடியும். 

உதாரணத்திற்கு நீங்கள் LIC ஏஜென்ட் ஆக வேண்டுமெனில் நீங்கள் இந்த இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். [https://licindia.in/agent/]

2. ஃப்ரீலான்சிங் வேலை வாய்ப்பு [Look for Freelancing Work]

Freelance work என்பது ஆன்லைன் மூலமாக நமக்குத் தெரிந்த வேலையை செய்து அதன் மூலமாக பணம் ஈட்டும் வழிமுறை தான். உதாரணத்திற்கு, உங்களுக்கு Photoshop நன்றாக தெரியும் என வைத்துக்கொள்வோம். முதலில் நீங்கள் Freelancing Work வழங்கும் இணையதளங்களில் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். பிறகு, அங்கே Photoshop தொடர்பாக வேலை கொடுக்கப்பட்டு இருந்தால் அவர்களை தொடர்பு கொண்டு என்ன வேலை, எவ்வளவு பணம் என்பதையெல்லாம் கேட்டு தெரிந்துகொண்டு வேலையை செய்து முடிக்க வேண்டும். அவர்கள் எதிர்பார்த்தது போலவே நீங்கள் வேலையை செய்து முடித்துவிட்டால் அவர்கள் பணத்தை உங்களது கணக்கிற்கு அனுப்புவார்கள். 

 Upwork, PeoplePerHour, Kool Kanya, Fiverr, மற்றும் Truelancer என பல Freelancing வேலை வழங்கும் இணையதளங்கள் இருக்கின்றன. மிகப்பெரிய சாப்ட்வேர் தெரிந்திருந்தால் தான் இதிலே வெற்றிகரமாக சம்பாதிக்க முடியும் என்றெல்லாம் இல்லை. டைப் செய்து கொடுக்கும் வேலை கூட இதிலே இருக்கும். ஆகவே, இன்டர்நெட், கணினி இருக்கிறவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆன்லைனில் சம்பாதிக்கலாம். 

குறிப்பு : Freelancing Work இல் ஏமாற்றவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் வேலையை செய்து முடித்த பின்பு பாதி பணத்தை தருவது, பணமே தராமல் ஏமாற்றுவது என பல சம்பவங்களும் நடக்கலாம். ஆகவே, யாருக்கு வேலை செய்து தரப்போகிறோம் என்பதை சரியாக தெரிந்துகொண்டு வேலையை தொடங்குங்கள்.

3. கட்டுரைகள் எழுதுதல் [Try Content Writing Jobs]

நன்றாக கட்டுரை எழுதும் திறமை உங்களுக்கு இருந்தால் நீங்கள் எளிதாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும். நன்றாக கட்டுரை எழுதும் திறமை கொண்ட பலரை முன்னனி இணையதளங்கள் தேடிக்கொண்டு இருக்கின்றன. நீங்கள் அவர்களுக்கு ஏற்றாற்போல கட்டுரை எழுதும் திறமை கொண்டிருந்தால் அவர்களே உங்களுக்கு அதிகமாக பணம் தருவார்கள். பலர் பகுதிநேர தொழிலாக Content Writing வேலையை செய்துவருகிறார்கள். Internshala, Freelancer, Upwork, and Guru இந்த இணையதளங்களில் நீங்கள் ரிஜிஸ்டர் செய்துகொண்டு தேவைப்படுவோருக்கு கட்டுரை எழுதி கொடுக்கலாம்.

4. இணையதளம் ஆரம்பித்தல் [Start Blogging]

பல இளைஞர்கள் தற்போது ஆன்லைனில் சம்பாதிக்க blog ஐ உருவாக்கி அதன் மூலமாக சம்பாதிக்கிறார்கள். நன்றாக எழுதும் திறமை கொண்டிருந்தால் நீங்கள் அடுத்தவர்களுக்கு எழுதி கொடுக்காமல் சொந்தமாகவே இணையதளம் ஒன்றினை ஆரம்பித்து அதன் மூலமாக பணம் ஈட்டலாம். அதிகமான நபர்கள் உங்களது இணையதளத்திற்கு வந்தால் அதிக விளம்பரங்களை காட்டுவதன் மூலமாக நிறைய சம்பாதிக்கலாம். நீங்கள் சொந்தமாக தொழில் செய்துவந்தால் உங்களது இணையதளத்தில் விளம்பரம் செய்துகொள்ள முடியும். அதேபோல, Affiliate Marketing மூலமாகவும் சம்பாதிக்க முடியும். 

blogging

இணையதளம் ஆரம்பிப்பது இப்போது சுலபமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு உங்களுக்கு கோடிங் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வேர்ட்பிரஸ் போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சுலபமாக இணையதளம் ஆரம்பித்து சம்பாதிக்கலாம்.

விரிவாக படிக்க : இண்டெர்நெட் மற்றும் பிளாக்கிங் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி?

5. ஆன்லைன் மூலமாக பொருள் விற்பனை [Sell Your Digital Products]

முன்பெல்லாம் உற்பத்தி செய்த பொருள்களை விற்க வேண்டுமெனில் ஒரு கடை, புரோக்கர் என அனைத்தும் இருக்க வேண்டும். அப்போது தான் உற்பத்தி செய்த பொருள்களை விற்க முடியும். ஆனால், இன்டர்நெட் வந்த பிறகு பழைய முறைகள் அனைத்தும் மாறிவிட்டன. நீங்கள் ஒரு பொருளை இன்று கடை, புரோக்கர் என எதுவும் இல்லாமல் உலகின் எந்த மூலையில் உள்ளவருக்கும் விற்பனை செய்திட முடியும். ஆன்லைன் மூலமாக பொருள்களை விற்பனை செய்திட சில வழிமுறைகள் உள்ளன, 

உங்கள் நிறுவனத்திற்கு என தனியாக ஒரு இணையதளம் ஒன்றினை துவங்கி அதிலே நீங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்கள் அனைத்தையும் காட்சிப்படுத்த வேண்டும். தேவைப்படுவோரிடம் ஆன்லைன் மூலமாக ஆர்டர் பெற்று நீங்கள் அவர்களது முகவரிக்கு பொருள்களை அனுப்பி வைத்து விற்பனை செய்திட  முடியும்.

Online-Advertising 740x400

சமூக வலைத்தளங்களில் கணக்குகள் ஆரம்பித்து அதிலே உங்களது பொருள்களை காட்சி படுத்துங்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என பல சமூக வலைதளங்களில் இலவசமாக கணக்குகள் துவங்கி அதிலே உங்களது பொருள்கள் குறித்து தகவல்களை பதிவிட வேண்டும். உங்களது பொருள் பிடித்தவர்கள் அதிலே உங்களை தொடர்பு கொள்ளுவார்கள். அவர்களிடம் ஆர்டர் பெற்று உங்களது பொருள்களை விற்கலாம். 

Youtube தற்போது பொருள்களை விற்பனை செய்திட ஒரு சிறந்த தளமாக இருக்கிறது. தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள், பொருள்கள் அனைத்தையும் காட்சிப்படுத்தி விற்பனையை செய்திட Youtube சிறந்த தளமாக இருந்து வருகிறது. கூடவே, விளம்பரங்களின் மூலமாகவும் நீங்கள் சம்பாதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொருள்கள் மட்டுமல்லாமல் video courses, e-books, design templates, plug-ins, PDFs, printables, or UX kits என சகலத்தையும் விற்பனை செய்திட முடியும். நீங்கள் அமேசான் தளத்தில் பொருள்களை விற்பனை செய்திட இங்கே கிளிக் செய்து பதிவு செய்துகொண்டு விற்பனையை துவங்கலாம்.

6. மொழிபெயர்ப்பு பணி [Look For Translation Jobs Online]

உங்களுக்கு பல மொழிகள் தெரிந்திருப்பின் பணம் சம்பாதிக்க ஏற்றதொரு வாய்ப்பு Translation Jobs. உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரிந்துள்ளதோ அத்தனை சுலபமாகவும், அதிகமாகவும் உங்களால் சம்பாதிக்க இயலும். பலருக்கு தெரிந்திராத மொழிகள் உங்களுக்கு தெரிந்து இருப்பின் அது கூடுதல் பலம். பலர் தங்களது வீடியோக்களுக்கு subtitles போடுவதற்கும், பிற மொழிகளில் தங்களது கருத்துக்களை மொழிபெயர்க்கவும் மொழிபெயர்ப்பாளர்களை நாடுகிறார்கள். 

Freelance India, Upwork, Truelancer போன்ற தளங்களில் ரிஜிஸ்டர் செய்துகொண்டால் உங்களுக்கு மொழிபெயர்ப்பு வேலை வாய்ப்பு கிடைக்கும். French, Russian, Spanish,  Japanese போன்ற வெளிநாட்டு மொழிகள் தெரிந்து இருப்பவர்கள் இந்த பணியில் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். இந்தப் பணியில் ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்ற அளவில் தான் சம்பளம் வழங்கப்படும் என்பதனால் இதில் அதிகமாக சம்பாதிக்கலாம்.

7. ஆன்லைன் பயிற்சி வகுப்பு [Opt for Online Tutoring]

நீங்கள் ஏதேனும் ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்று இருந்தால் அதை பிறருக்கு கற்றுத்தருவதன் மூலமாக சம்பாதிக்க முடியும். பலர் நேரடியாகவே பயிற்சி வகுப்புகள் நடத்துவதன் மூலமாக குறைந்த நேரத்தில் நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறார்கள். இன்டர்நெட் தற்போது இந்த பணி வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஆன்லைன் மூலமாக உலகின் எந்தவொரு மூலையில் உள்ள ஒருவருக்கும் உங்களால் பயிற்சி வகுப்பு எடுக்க முடியும். நீங்கள் அவர்களிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்க முடியும். 

பல திறமையாளர்கள் தங்களது பயிற்சி வீடியோக்களை youtube மாதிரியான தளங்களில் வெளியிட்டு விளம்பரங்கள் மூலமாக கணிசமாக சம்பாதித்து வருகிறார்கள். உங்களது வீடியோ பிறருக்கு உதவும் விதத்தில் இருந்தால் பலர் தானாகவே உங்களது வீடியோக்களை பார்க்க ஆரம்பிப்பார்கள். இதன் மூலமாக அதிகமான வருமானத்தை நீங்கள் பெற முடியும்.

8. ட்ராவல் ஏஜென்ட் [Work as a Travel Agent]

சுற்றுலா ஏற்பாட்டாளர் வேலை என்பது பலர் விரும்பி செய்யக்கூடிய வேலையாக மாறி வருகிறது. பலர் தற்போது Travel Agent பணியினை part time வேலையாக செய்து வருகிறார்கள். நல்ல வருமானம் தரக்கூடிய வேலையாகவும் இது உள்ளது. அதேபோல, முன்னனி Travels நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் தங்களுக்கு வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும் இடைத்தரகர்களுக்கு அதிகப்படியான கமிஷன் தொகையினை வழங்குகிறார்கள். 

இந்த ஆன்லைன் உலகில் சுற்றுலா ஏற்பாட்டாளர்களை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவே தேடுகிறார்கள். ஆகவே, நீங்கள் எங்கு இருப்பினும் தேவைப்படுவோருக்கு சேவையினை ஆன்லைன் மூலமாகவே வழங்க முடியும். உதாரணத்திற்கு, ஒரு travel planner என்ற இணையதளத்தை நீங்கள் துவங்கி அதிலே நீங்கள் எந்த இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாட்டாளர், உங்களிடம் என்னென்ன பிளான்கள் உள்ளன,அதற்கான கட்டணம் எவ்வளவு, வாடிக்கையாளர்கள் அனுபவம், தொடர்பு கொள்ளும் முகவரி, அலைபேசி எண் போன்றவற்றை கொடுத்தால் போதுமானது. இன்னும் அதிகபட்சமாக நீங்கள் டிஜிட்டல் விளம்பரங்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.

9. Affiliate Marketing

ஆன்லைன் மூலமாக பலர் வெற்றிகரமாக பணம் சம்பாதித்து வருகிறார்கள். அதிலே பலர் வெற்றிகரமாக பயன்படுத்தக்கூடிய ஒரு முறை “Affiliate Marketing”. Affiliate Marketing முறையின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் பொருளை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. மாறாக, நீங்கள் பிறர் உற்பத்தி செய்திடும் பொருள்களை நீங்கள் விற்றுக் கொடுப்பதன் மூலமாக கமிஷன் பெற்று அதிக அளவில் சம்பாதிக்க முடியும். 

Affiliate Marketing இல் பொருள்களை மட்டும் தான் விற்க முடியுமா என்றால் இல்லை. உதாரணத்திற்கு, ஹோஸ்டிங் பிளான் ஒன்றினை நீங்கள் விற்பதன் மூலமாக உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். அதேபோல,  Udemy போன்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பு வழங்கும் இணையதளங்களில் உள்ள online course களை விற்பனை செய்து கொடுப்பதன் மூலமாக கமிஷன் தொகையினை பெற முடியும். 

அமேசான் தற்போது Affiliate Marketing செய்வோருக்கு முன்னனி தளமாக இருந்து வருகிறது. நீங்கள் அமேசானில் Affiliate கணக்கு துவங்க வேண்டும். பிறகு ஏதேனும் ஒரு பொருளுக்கான Affiliate link கை உருவாக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் அந்த Affiliate link ஐ இணையதளம், சமூக வலைத்தளம் மூலமாக விளம்பரப்படுத்தலாம். அதனை கிளிக் செய்து யாரேனும் பொருள்களை வாங்கினால் உங்களுக்கு அதற்கான கமிஷன் கிடைக்கும்.

விரிவாக தெரிந்துகொள்ளுங்கள் : : Affiliate Marketing என்றால் என்ன? எப்படி அதிலே சம்பாதிப்பது?

10. யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம் [Start Youtube Channel]

தற்போது பல இளைஞர்கள் யூடியூப் சேனல் ஆரம்பிப்பதை முதன்மையான பணம் ஈட்டும் வாய்ப்பாக கருதி வருகிறார்கள். யூடியூப் சேனல் மூலமாக சம்பாதிப்பது எளிதானது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு இன்னொரு உண்மையையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அது என்னவென்றால், சரியான வழிமுறையோடு யூடியூப் சேனல் ஆரம்பிக்கவில்லை என்றால் நீங்கள் யூடியூப் சேனல் ஆரம்பித்தாலும் சம்பாதிக்க முடியாது. 

யூடியூப் சேனல் ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்களுக்கு என்ன திறமை உள்ளது, நீங்கள் எதை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கப்போகிறீர்கள், எந்த விதத்தில் உங்களது வீடியோ பிறருக்கு உதவப்போகிறது, எப்படி தொடர்ச்சியாக நீங்கள் வீடியோ பதிவு செய்யப்போகிறீர்கள் என்பதையெல்லாம் முடிவு செய்துகொண்டு யூடியூப் சேனல் துவங்கினால் நிச்சயமாக வெற்றிபெற முடியும். ஆகவே, சரியான பிளான் கொண்டு யூடியூப் சேனல் ஆரம்பியுங்கள். நிச்சயமாக உங்களால் சம்பாதிக்க முடியும்.

யூடியூப் சேனல் ஆரம்பிக்க தேவையான விசயங்கள்

நீங்கள் “How to make money tamil”, “how to earn money tamil” “how to make money online tamil” “how to make money from home tamil” “how to earn online tamil” “how to earn money online tamil” “earn money online tamil” “make money tamil” “money tamil” போன்ற கேள்விகளுக்கு பதில் தேடியவராக இருந்தால் நிச்சயமாக இந்தப்பதிவு உங்களுக்கு பல தகவல்களை தந்திருக்கும். உங்களுக்கு வேறு தகவல்கள் வேண்டுமெனில் அல்லது கேள்வி இருக்கிறதெனில் கமெண்டில் அவற்றை பதிவிடுங்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular