Saturday, November 23, 2024
HomeUncategorizedLIC Agent ஆவது இவ்வளவு ஈஸியா? LIC Agent ஆவது எப்படி?

LIC Agent ஆவது இவ்வளவு ஈஸியா? LIC Agent ஆவது எப்படி?

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக LIC இருக்கிறது. LIC நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு தனியார் ஏஜெண்டுகளை பயன்படுத்துகிறது. அவர்கள் பாலிசிகளை விற்றுத்தரும் போது அவர்களுக்கான கமிஷன் வழங்கப்படுகிறது. படித்துக்கொண்டு இருப்பவர்கள், வேலையில் இருப்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என அனைவரும் ஏஜெண்டுகளாக இருக்க முடியும். அதன் மூலமாக கணிசமாக கமிஷன் தொகையை பெற முடியும். இந்தப்பதிவில், ஒருவர் எப்படி  LIC Agent ஆவது எப்படி என்பதை பார்க்கலாம்.

Topics :

LIC Agent ஆவதற்கு கல்வித்தகுதி என்ன?

LIC Agent ஆவதற்கு என்ன ஆவணங்கள் அவசியம்?

LIC ஏஜென்ட் ஆவதற்கு தேர்வு முறை எப்படி இருக்கும்?

LIC Agent பணியில் எவ்வளவு சம்பாதிக்கலாம்?

LIC Agent ஆக பணியாற்றுவதால் என்ன நன்மைகளை பெறலாம்?

LIC Agent ஆவதற்கு கல்வித்தகுதி என்ன?

LIC Agent ஆவதற்கு நீங்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது. அதேபோல, 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். நீங்கள் LIC Agent ஆக விரும்பும் நேரத்தில் என்ன கல்வித்தகுதி என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

LIC Agent ஆவதற்கு என்ன ஆவணங்கள் அவசியம்?

நீங்கள் LIC Agent ஆவதற்கு பின்வரும் ஆவணங்கள் வேண்டும், 

6 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் 

10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 

இருப்பிடச்சான்று சான்றிதழ் [ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை]

LIC ஏஜென்ட் ஆவதற்கு தேர்வு முறை எப்படி இருக்கும்?

மேற்குறிப்பிட்டுள்ள தகுதி மற்றும் சான்றிதழ்கள் இருந்தால் நீங்களும் LIC ஏஜென்ட் ஆகலாம். 

நீங்கள் முதலில், அருகே உள்ள LIC அலுவலகத்தின் கிளைக்கு சென்று அங்கே உள்ள டெவலப்மென்ட் ஆபிசரை பார்க்க வேண்டும். அவரிடம் LIC ஏஜென்ட் க்கு விண்ணப்பிக்க வேண்டும் என கூறி விண்ணப்பம் செய்யலாம். ஆன்லைனில் LIC ஏஜென்ட் க்கு விண்ணப்பிக்க முடியும். நீங்கள் பின்வரும் லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். 

https://licindia.in/agent/index.html

நீங்கள் விண்ணப்பம் செய்தவுடன் இன்டெர்வியூக்காக குறிப்பிட்ட கிளையின் மேலாளர் அழைப்பார். அவர் தேர்வு செய்தால் நீங்கள் அடுத்தகட்டத்திற்கு செல்லலாம். அதிலே, Complete the Insurance Regulatory and Development Authority of India (IRDAI) குறிப்பிட்டுள்ளபடி உங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இது 25 மணி நேர பயிற்சி வகுப்பாக இருக்கும். அதன் பிறகு ஒரு தேர்வு வைக்கப்படும். அதிலே நீங்கள் குறைந்தது 35% மதிப்பெண் பிற வேண்டும். இல்லையேல், 50 கேள்விகளில் 18 கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க வேண்டும். 

அதற்குப் பிறகு உங்களுக்கு LIC ஏஜென்ட் ஆனதற்கான லைசென்ஸ் கொடுக்கப்படும். அதனை வைத்துக்கொண்டு LIC ஏஜென்ட் ஆக செயல்படலாம். உங்களது மாதாந்திர செயல்பாடு மற்றும் குறைகள் அனைத்தையும் டெவலப்மென்ட் அலுவலரிடம் கூறலாம்.

LIC Agent பணியில் எவ்வளவு சம்பாதிக்கலாம்?

LIC Agent பணியில் இவ்வளவு தான் சம்பாதிக்க முடியும் என்கிற வரையறை எதுவும் இல்லை. நீங்கள் எவ்வளவு அதிகமான பாலிசிகளை LIC க்கு பெற்றுத்தருகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களால் சம்பாதிக்க முடியும். பலர் LIC Agent பணியை முழு நேர வேலையாக செய்வது இல்லை. மாறாக, அவர்கள் இதனை பகுதி நேர வேலையாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆகவே, கணிசமாக நீங்கள் இந்தப்பணியில் சம்பாதிக்க முடியும்.

LIC Agent ஆக பணியாற்றுவதால் என்ன நன்மைகளை பெறலாம்?

கணிசமாக வருமானம் வரக்கூடிய பகுதிநேர பணியை பலரும் தற்போது விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு LIC Agent பணி என்பது அருமையான பகுதிநேர பணியாக இருக்கும். 

நீங்கள் இந்த நேரத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் LIC Agent பணியில் இல்லை. நீங்கள் விரும்பிய நேரத்தில் மக்களை சந்தித்து பாலிசி குறித்து விவரித்து அவர்களை பாலிசிதாரர்களாக மாற்றுவதன் மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும். 

அதேபோல நீங்கள் LIC முகவராக பணியாற்றும் போது பணம் குறித்தும் பொருளாதாரம் குறித்தும் உங்களது அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். பல்துறை வல்லுனர்களோடு உங்களுக்கு ஓர் அறிமுகமும் உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular