How Stars Die?
விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் பதில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி ‘ஒரு நட்சத்திரம் எப்படி அழிகிறது?’ என்பது தான். இந்தப்பதிவு அந்தப் பதிலை நிச்சயமாக வழங்கும்.
சூடான கருப்பகுதியில் [hot cores] ஹைட்ரஜன் இணைவு நடக்கும் போது ஒரு நட்சத்திரம் தனது வாழ்க்கையை துவங்குகிறது. ஒரு நட்சத்திரம் இப்படி தன் வாழ்க்கையைத் துவங்கும் போதே அதை அழிப்பதற்கான வேலையும் துவங்கிவிடுகிறது. கருப்பகுதியில் உண்டாகும் அதிகப்படியான ஈர்ப்பு விசையானது நட்சத்திரத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளிழித்துக்கொண்டு நசுக்கும் அளவுக்கு ஈர்க்கும். ஆனால் கருப்பகுதியில் ஹைட்ரஜன் இணைவினால் வெளிப்படும் அதிகப்படியான ஆற்றலானது அனைத்துப் பகுதிகளையும் வெளிப்புறமாக தள்ளுகிறது. இந்த இரண்டு எதிர்வினைகளாலும் ஒரு சமநிலை ஏற்பட்டு நட்சத்திரம் பல கோடி ஆண்டுகள் வாழ்கின்றன.
மேற்புறத்தில் அமைதியாக இருப்பது போல தோன்றினாலும் ஒரு பிரமாண்ட போட்டியே நடந்துகொண்டிருக்கிறது ஒவ்வொரு நட்சத்திரத்திற்குள்ளும்.
பொதுவாக, சிறிய நட்சத்திரங்கள் அதிக காலம் வாழ்கின்றன என கூறப்படுகிறது. நிலைத்தன்மையை ஏற்படுத்தத் தேவையான ஆற்றலை வெளிப்படுத்த இந்த நட்சத்திரங்களுக்கு குறைந்த அளவு ஹைட்ரஜன் தேவைப்படுவதால் இவை அதிக காலம் வாழ்கின்றன. மேலும் சுற்றுப்புறத்தில் இருந்தும் தேவையான ஹைட்ரஜனை இவை கருப்பகுதிக்குள் ஈர்த்துக்கொள்கின்றன. ஆகவே அவை தொடர்ச்சியாக ஆற்றலை வெளிப்படுத்தி அதிக காலம் வாழ்கின்றன.
சரி, ஒரு நட்சத்திரம் எப்படி அழியும்?
நாம் ஏற்கனவே கூறியது போல ஈர்ப்பு விசையை சமாளிக்கத் தேவையான ஹைட்ரஜன் இணைவு நடைபெறுவதற்கு தேவையான ஹைட்ரஜன் இல்லாமல் போகும் போது ஒரு நட்சத்திரம் தனது இறுதி பயணத்தை துவங்குகிறது. கருப்பகுதிக்குள் ஹைட்ரஜன் அளவு குறைந்திடும் போது அதிகப்படியான அழுத்தம் உண்டாகும். அப்போது உருவாகும் வெப்பமானது ஹைட்ரஜன் மட்டுமல்லாது ஹீலியன், கார்பன், மெக்னீசியம், சிலிக்கான் உள்ளிட்டவற்றையும் உருக வைக்கிறது. எரிபொருள் தீர்ந்த பிறகு நடைபெறும் இந்த செயல்களால் நட்சத்திரங்களின் மேற்புறங்கள் அதிகப்படியான பிரகாசமாக தோன்றி சூப்பர்நோவா [supernova] உருவாகும். கருந்துளையை உருவாக்கும் அளவுக்கு நட்சத்திரத்தின் அளவு இல்லாவிடில் நியூட்ரான் ஸ்டாராக [neutron star] மாறிவிடும். ஒருவேளை நட்சத்திரம் மிகப்பெரியதாக இருந்தால் கருந்துளை உருவாகும்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.