நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் சம்பாதிக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்ற தேடலோடு நீங்கள் இந்தப்பதிவை வாசிக்கும் வாய்ப்பு பெற்று இருந்தால் நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள். உங்களை பொய்களைக்கூறிய பொய்யான நம்பிக்கையை விதைக்கும் எந்தவித வழிகளும் இங்கே சொல்லப்பட்டிருக்காது. இங்கே நான் பரிந்துரை செய்துள்ள வழிகளை பயன்படுத்தினால் உங்களால் தினசரி கணிசமாக சம்பாதிக்க முடியும். அது தினசரி 1000 ஆகவும் இருக்கலாம் அல்லது அதைவிட அதிகமாகவும் இருக்கலாம்.
1. உங்களுக்கு என்ன தெரியும்?
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும். அப்படிப்பட்ட, தனித்திறமை உங்களுக்கு இருந்தால் உங்களுடைய திறமையை பணம் சம்பாதிப்பதற்காக ஒரு மூலதனமாக பயன்படுத்தலாம். அதேபோல உங்களுக்கு ஏதாவது தெரிந்து இருந்தாலும் கூட அதையும் பணம் ஈட்டுவதற்கான ஒரு மூலதனமாக பயன்படுத்தலாம்.
உதாரணத்திற்கு,
உங்களுக்கு நன்றாக டைப் செய்திட வரும், நீங்கள் இதற்காக பயிற்சி வகுப்புகள் எல்லாம் சென்று சான்றிதழ்கள் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்தத்திறமையை வைத்துக்கொண்டு நீங்கள் சரியாக திட்டமிட்டால் நன்றாக சம்பாதிக்கலாம்.
வழி 1 : தற்போது Data Entry வேலைக்கு அதிகப்படியான தேவை எழுந்துள்ளது. நீங்கள் எவ்வளவு வேகமாக, எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறீர்களோ அதற்கு ஏற்றது மாதிரியான சம்பளத்தை பெற முடியும்.
வழி 2 : நீங்கள் கற்றுக்கொண்டதை பிறருக்கு கற்றுக்கொடுப்பதன் மூலமாக சம்பாதிக்க முடியும். Tutoring என்பது இப்போது பலர் பணம் ஈட்ட பயன்படுத்தும் ஒரு வழியாக மாறி வருகிறது. Type Writing ஐ கற்றுக்கொள்ள எப்போதுமே மாணவர்களிடத்தில் ஆர்வம் உண்டு. நீங்கள் ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் சொல்லிக்கொடுத்தாலே சம்பாதிக்க முடியும்.
வழி 3 : நீங்கள் நேரடியாக சொல்லிக்கொடுப்பதை ஆன்லைன் மூலமாக செய்தும் சம்பாதிக்க முடியும். அதேபோல நீங்கள் சொல்லிக்கொடுப்பதை வீடியோவாக யூடியூப் போன்ற தளங்களில் பதிவேற்றம் செய்தும் சம்பாதிக்கலாம்.
பலர் சாதாரணமாக நினைத்துக்கொண்டு இருக்கும் Type Writing தெரிந்தாலே எளிதாக சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. இப்படியான வாய்ப்புகள் உங்களுக்கும் இருக்கும் நன்றாக யோசியுங்கள்.
முதலீடு இல்லாமல் ஆன்லைன் மூலமாக சம்பாதிப்பது எப்படி?
2. Freelancing
வேலை செய்திட விருப்பம் உள்ளவர்களையும் வேலை செய்திட ஆட்கள் தேடுகிறவர்களையும் இணைக்கும் வேலையை சில Freelancing நிறுவனங்கள் செய்து வருகின்றன. உதாரணமாக பின்வரும் இணையத்தளங்களைக் கூறலாம். இங்கே நீங்கள் உங்களுக்கான கணக்கை துவங்கிக்கொள்ள வேண்டும். பிறகு உங்களுக்கு ஏதுவான வேலை ஏதேனும் இருக்கிறதா என பார்க்க வேண்டும். பின்னர் குறிப்பிட்ட நபரை தொடர்பு கொண்டு அவர்களுக்கான வேலையை நீங்கள் முடித்துக்கொடுத்தால் உங்களுக்கு அவர் சம்பளம் வழங்குவார்.
Upwork
Fiverr
Elance
Freelancer
Guru
Craigslist
99designs
Peopleperhour
3. Content Writing
நன்றாக எழுதக்கூடிய திறன் மட்டும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் மற்றவர்களை விடவும் மிக எளிமையாக சம்பாதிக்க முடியும். பல இணையதளங்கள், பேஸ்புக் குரூப்களில் கட்டுரைகள் எழுதுவதற்கான ஆட்கள் அதிகமாக தேவைப்படுகிறார்கள். நீங்கள் மேற்கூறிய இணையதளங்களில் சேர்ந்தும் கூட எழுதக்கூடிய வாய்ப்பை பெற முடியும். ஆனால், ஒன்றை நினைவிலே வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சேர்ந்த முதல் நாளிலேயே உங்களுக்கு 1000 ரூபாய் கிடைக்கும் என சொல்ல முடியாது. அது உங்களுடைய வேலையைப்பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் சிறப்பாக எழுதும் பட்சத்தில் ஒரு article எழுதினாலே 1000 சம்பளம் பெறலாம்.
Paid Surveys மூலமாக வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி?
4. Online tutoring
இன்னும் நம்மில் பலர் பயன்படுத்திக்கொள்ளாத ஒரு வாய்ப்பாக “Online tutoring” இருக்கிறது. எனக்குத்தெரிந்த பல நண்பர்கள்/ஆசிரியர்கள் முக்கியமான தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி தருகிறார்கள். ஒரு நாளைக்கு இவர்கள் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரைக்கும் வகுப்புகள் எடுக்கிறார்கள். இதற்காக அவர்கள் ஒரு மாதத்திற்கு 2000 முதல் 3000 வரைக்கும் மாதாந்திர கட்டணமாக வசூல் செய்கிறார்கள். சுமார் 60 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி வழங்குவதன் மூலமாக இவர்கள் ரூ 1 லட்சம் வரைக்கும் மாதந்தோறும் பணம் சம்பாதிக்கிறார்கள். இது அவர்கள் 8 மணி நேரம் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை விட அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
பல திறமையான ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணம் ஈட்ட முடியும். நேரடியாக சொல்லிக்கொடுக்கும் பலவற்றை ஆன்லைன் வாயிலாக சொல்லிக்கொடுக்க முடியும். மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கற்றுக்கொள்ள தயாராக இருக்கும் சூழலை பயன்படுத்தி பணம் ஈட்டலாம்.
5. Selling products online
உங்கள் பகுதியில் குறைவான விலைக்கு ஏதேனும் ஒரு பொருள் உருவாக்கப்படுகிறது அல்லது விளைவிக்கப்படுகிறது. அந்த பொருளுக்கு வேறு இடங்களில் உள்ள மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது எனில் நீங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்திட துவங்கலாம்.
உதாரணத்திற்கு, உங்கள் பகுதியில் மூங்கில் அதிகமாக விளைகிறது. அது சார்ந்த பொருள்கள் ஜன்னல் திரை, அலங்கார பூஜை கூடை போன்றவை குறைந்த விலைக்கே கிடைக்கும் என வைத்துக்கொள்வோம். நீங்கள் உற்பத்தியாளர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிக்கொண்டு அந்த பொருள்களை அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் லிஸ்ட் செய்து விற்பனைக்கு வைக்கலாம். வெறுமனே 20% அதிக விலைக்கு வைத்தாலே உங்களுக்கு ஏகப்பட்ட லாபம் கிடைக்கும். பலர் இந்த வழிகளை பயன்படுத்தி பல ஆயிரம் ரூபாயை எளிதாக சம்பாத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவு வேண்டுமென்ற அவசியம் எல்லாம் இல்லை. கணினியை இயக்கத்தெரிந்தாலே போதுமானது.
6. Delivery services
திருடுவது, ஏமாற்றுவது போன்ற தவறான வழிகளில் பணம் ஈட்டுவது தான் தவறு. மற்றபடி, அனைத்து வேலைகளும் ஒன்று தான். இன்றைய இளையோருக்கு சில வேலைகள் உயர்வாகவும் சில வேலைகள் தாழ்வாகவும் இருக்கின்றன. அப்படி பலர் விரும்பாத வேலையாக பார்க்கக்கூடிய ஒரு வேலை தான் Delivery services வேலை. உங்களுக்கு மேலே சொன்ன வழிகள் சரிவராது எனில் நீங்கள் சேர்ந்த முதல் நாளில் இருந்து கணிசமாக சம்பாதிக்க வேண்டும் என நினைத்தால் உங்களுக்கு ஏற்ற வேலை Delivery services. நீங்கள் இந்த வேலையை பார்த்துக்கொண்டே ஏதாவது பெரிய சம்பளத்திற்கு செல்ல Course களில் சேர்ந்து படிக்கலாம். படித்து முடித்துவிட்டால் நீங்கள் நல்ல வேலைக்கும் செல்லலாம்.
உங்களுக்குத்தெரியுமா? Swiggy or Zomato, Amazon or Flipkart போன்ற நிறுவனங்களின் Delivery services வேலைகளில் இருப்போர் பலர் படித்துக்கொண்டு இருப்பவர்கள் தான். அதேபோல, நல்ல வேலையை தேடிக்கொண்டு இருப்பவர்கள் தான். வேலை இல்லாமல் இருப்பதற்கு ஏதாவது ஒரு வேலையை செய்வது நல்ல பழக்கம்.
7. Driving services
கார் வைத்திருக்கும் பலருக்கு வெளியூர் செல்லும் போதோ அல்லது சுற்றுலா செல்லும்போதோ ஓட்டுனர்கள் தேவைப்படுகிறார்கள். உங்களுக்கு கார் ஓட்ட தெரிந்து இருந்தால் நீங்கள் முழு நேரமாக இல்லாவிட்டாலும் கூட பகுதி நேர ஓட்டுநராக பணிபுரியலாம். பலர் இப்படி பகுதி நேர ஓட்டுநர் வேலை மூலமாக கணிசமாக பணம் ஈட்டி வருகிறார்கள்.
எடுத்த உடனேயே அதிகமாக சம்பாதிக்க நினைப்பது தவறான அணுகுமுறை. நாம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமெனில் நாம் அதிகமாக தயாராக வேண்டும். உங்களது தேவை எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்களால் சம்பாதிக்க முடியும். உங்களுக்கு எதுவும் தெரியவில்லை எனில் நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள முயற்சி செய்திடுங்கள். உங்களுக்குத் தெரிந்த யாரேனும் சம்பாதிக்கிறார்கள் எனில் அவர்களிடம் சென்று அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என கற்றுக்கொள்ளுங்கள். பிறகு நீங்களும் முயற்சி செய்திடுங்கள்.