2003 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டிற்கு எதிராக நடந்த போட்டியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சோயிப் அக்தர் 161.3km/h பந்துவீச்சு தான் அதிவேக பந்துவீச்சு. கிரிக்கெட் போட்டியின் போது பந்துவீச்சாளர் பந்து வீசிய நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் திரையில் “இவ்வளவு வேகத்தில் பந்து வீசப்படுகிறது” என உடனடியாக காட்டப்படும் . அப்படி காட்டப்படும் பவுலிங் ஸ்பீட் எப்படி கணக்கிடப்படுகிறது என்று தெரியுமா ? எந்த தொழில்நுட்பம் பந்து எவ்வளவு வேகத்தில் வீசப்படுகின்றது என்பதை அறிய பயன்படுத்தப்படுகின்றது என்பதனைத்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம் .
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
கிரிக்கெட்டில் பந்து வீசப்படும் வேகம் இரண்டு வழிமுறைகளில் கணக்கிடப்படுகிறது
>> ரேடார் (Radar Gun) [Old Method]
>> ஹாக் (Hawk eye)
ரேடார் (Radar Gun)
வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் , வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்கின்றது என்பதனை கண்காணிக்க பயன்படுத்துகின்ற கருவி போன்று தான் இந்த ரேடார் கருவியும் செயல்படும் . அதன்படி இந்த ரேடார் கருவியில் ட்ரான்ஸ்மிட்டர் மற்றும் ரிஸீவர் இரண்டும் இருக்கும் . ஒரு குறிப்பிட்ட திசையில் ரேடியோ அலைகள் அனுப்பப்படும் . அப்படி அனுப்பப்படும் பாதையில் பொருள்கள் இருந்து ரேடியோ அலைகளை எதிரொலித்தால் அந்த பொருள் பயணிக்கும் வேகத்தை ரேடார் கருவியில் காண முடியும் .
கிரிக்கெட்டில் மட்டைவீச்சாளருக்கு எதிராக கறுப்பு திரை ஒன்று இருக்கும் . அதற்கு மேலாக பந்து வீசப்படும் பிட்சை நோக்கி ரேடார் கருவி வைக்கப்பட்டு இருக்கும் . பந்து வீச்சாளரின் கைகளில் இருந்து விலகி பிட்சிற்குள் செல்ல ஆரம்பித்தவுடனையே ரேடார் கருவி செயல்பட்டு பந்தின் வேகத்தை சொல்லிவிடும் .
இந்த தொழில்நுட்பம் ஜான் பாக்கர் என்பவரால் 1947 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது .
>> பந்தின் வேகம் இந்த முறையில் துல்லியமாக கணக்கிடப்படும்
>> பந்துவீச்சாளரின் கைகளில் இருந்து பந்து வீசப்பட்ட உடனேயே பந்தின் வேகம் கணக்கிடப்பட்டு விடுவதனால் உடனடியாக வேகத்தினை அறிந்துகொள்ள முடியும் .
ஹாக் ஐ (Hawk eye)
டாக்டர் பால் ஹாக்கின்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஹாக் தொழில்நுட்பம் 2001 ஆம் ஆண்டுமுதல் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது . இந்த தொழில்நுட்பம் ஆரம்பகாலங்களில் மூளை அறுவை சிகிக்சை மற்றும் ஏவுகனை போன்றவற்றை கண்காணிக்கவே உருவாக்கப்பட்டது .
கிரிக்கெட்டில் LBW விக்கெட்டா இல்லையா என்பதனை தெரிந்துகொள்ள பின்வரும் படத்தில் உள்ளபடி அனிமேஷன் போடுவார்கள் பார்த்ததுண்டா ? ஹாக் ஐ தொழில்நுட்பத்தின் மூலமாகத்தான் அதனை செய்கிறார்கள் . பந்தை கண்காணிக்க 6 கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன . பந்து செல்லும் வேகம் , திசை ஆகியவற்றினை துல்லியமாக 3D முறையில் இந்த தொழில்நுட்பம் வழங்கும் .
>> LBW முறையில் பந்து ஸ்டெம்பை தாக்குகிறதா இல்லையா என்பதனை அறிந்துகொள்ள இந்த தொழில்நுட்பம் உதவுகின்றது .
>> இதுபோன்ற தொழில்நுட்பங்கள் விளையாட்டுகளில் மிகச் சரியான முடிவுகளை எடுக்க நடுவர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றன . இதன்மூலமாக மக்களின் நம்பிக்கையையும் பெற முடிகின்றது .
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.
TECH TAMILAN
இதையும் படிங்க,