இந்தியாவில் மருத்துவம் சார்ந்த எந்தப்படிப்பை நீங்கள் படிக்க வேண்டும் என்றாலும் நிச்சயமாக நீட் [NEET] தேர்வை நிச்சயமாக எழுத வேண்டும். உதாரணத்திற்கு, MBBS, BDS, BHMS , BAMS மற்றும் பல. இந்தப்பதிவில், NEET தேர்வு என்றால் என்ன? எப்படி நடைபெறுகிறது? என்பதை விரிவாக இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Higher Study Options After NEET
Higher Study Options After 12th Bio Math In Tamil – என்ன படிக்கலாம்
NEET என்றால் என்ன?
NEET என்பதன் விரிவாக்கம் National Entrance cum Eligibility Test. இந்தியாவில் ஒரு மாணவர் மருத்துவம் சார்ந்த படிப்புகளை பார்க்க வேண்டும் என்றால் நிச்சயமாக அவர் நீட் தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்ணை பெற வேண்டியது அவசியம். நீட் தேர்வை National Testing Agency (NTA) அமைப்பு தான் நடத்துகிறது.
இந்தப் பதிவில், மருத்துவர் கனவோடு இருக்கும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இருக்கின்றன.
History of NEET
இந்தியாவில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வருவதற்கு முன்னதாக AIPMT (All India Pre Medical Test) என்ற தகுதித் தேர்வு தான் இருந்தது. மேலும் மாநிலங்கள் தங்களுக்கென தகுதித்தேர்வை வைத்திருந்தன. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் சேர்க்கை நடந்தன.
இதற்கு மாற்றாகத்தான், இந்தியா முழுமைக்கும் ஒரே தகுதித்தேர்வாக NEET கொண்டுவரப்பட்டது. 2013 ஆம் ஆண்டு முதல் நடந்துவரும் இந்தத் தேர்வை சுமார் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான மாணவர்கள் எழுதுகிறார்கள்.
NEET எழுதாமல் ,மருத்துவம் படிக்க முடியுமா?
இப்போதுள்ள சட்ட நடைமுறைகளின்படி, 100% முடியாது. ஒரு இந்திய மாணவர் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் படிக்க வேண்டும் என்றாலும் கூட நீட் தேர்வை எழுதி தகுதி பெற வேண்டியது அவசியம்.
அதேபோல, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கி படிக்கலாம் என நினைத்தாலும் நீட் தேர்வில் கலந்துகொண்டு தகுதி மதிப்பெண்ணை பெற வேண்டியது அவசியம். ஆகவே, நீட் தேர்வு இல்லாமல் ஒரு இந்திய மாணவரால் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க முடியாது.
நீட் தேர்வு எத்தனை கல்லூரிகளுக்கு நடத்தப்படுகிறது?
இப்போது இந்தியாவில் செயல்படக்கூடிய 706 மருத்துவ கல்லூரிகளுக்கும், 15 AIIMS, 2 JIPMER கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு மூலமாகவே இடங்கள் நிரப்பப்படுகின்றன.
NEET Eligibility Score
NEET தேர்வை எழுதும் மாணவர்களுக்கு தகுதி மதிப்பெண் உண்டு. உதாரணத்திற்கு, நீங்கள் அதிக மதிப்பெண் வாங்கினால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கலாம். இல்லையேல் தனியார் கல்லூரிகளில் படிக்கலாம். மொத்தமாக 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் பின்வரும் விகிதத்தில் தான் தேர்வு தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படுகிறது.
Quota | Percentage |
பொதுப்பிரிவு | 50% |
SC/ST/OBC | 40% |
General-PwD | 45% |
OBC, SC & ST-PwD | 40% |
NEET Exam Pattern
மிகவும் கடுமையான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் நீட் தேர்வில் பின்வரும் விகிதத்தில் தான் கேள்விகள் இடம்பெறும். 12 ஆம் வகுப்பில் CBSE பாட முறையில் தான் கேள்விகள் பெரிய அளவில் கேட்கப்படுகிறது என சொல்லப்படுகிறது.
மொத்தமாக 180 கேள்விகள் கேட்கப்படும். இதிலே நீங்கள் அளிக்கும் சரியான பதிலுக்கு 3 மதிப்பெண் தரப்படும். அதேபோல, தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
Subject | Count |
இயற்பியல் | 45 |
வேதியியல் | 45 |
தாவரவியல் | 45 |
விலங்கியல் | 45 |
மொத்தம் | 180 |
மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் எவ்வாறு ஒதுக்கப்படும்?
நீட் தேர்வு நடைபெற்ற பிறகு வெளியிடப்படும் Answer Key ஐ வைத்துக்கொண்டே நாம் தேர்ச்சி பெறுவோமா இல்லையா என்பதனை மாணவர்களால் அறிய முடியும். அதேபோல, தாங்கள் பெறப்போகும் மதிப்பெண்கள் அடிப்படையில் இடம் கிடைக்குமா என்பதனையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். இந்தத் தேர்வில் தகுதி மதிப்பெண்ணை பெற்றால் மட்டும் தான் எந்தக் கல்லூரியிலும் விண்ணப்பம் செய்திட முடியும்.

NEET தேர்வை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எழுதுவார்கள். சில மாநிலங்களில் மருத்துவ கல்லூரிகள் அதிகமாக இருக்கும், சில மாநிலங்களில் குறைவாக இருக்கும். ஆகவே, தகுதி வாய்ந்த மாணவர்களின் இட வாய்ப்பை உறுதி செய்திடும் விதமாக ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் உள்ள 15% இடங்கள் All India Quota விற்கு செல்லும். மீதமுள்ள 85% இடங்கள் அந்தந்த மாநில மாணவர்களுக்கு செல்லும். இதற்குள் இட ஒதுக்கீடு செயல்படும்.
உதாரணத்திற்கு, ஒரு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். அதிலே, 15 இடங்கள் All India Quota விற்கு செல்லும். இந்தியாவில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த இடங்களுக்கு போட்டி போட முடியும். மீதமுள்ள 85 இடங்கள் குறிப்பிட்ட கல்லூரி இருக்கும் மாநிலங்களுக்கு வழங்கப்படும்.
மருத்துவக் கல்லூரி கலந்தாய்வை நடத்துவது யார்?
All India Quota விற்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கான கலந்தாய்வை சுகாதார சேவைகள் இயக்குநரகம் [Directorate General of Health Services] நடத்தும். மீதமுள்ள 85% கான இட ஒதுக்கீட்டை அந்தந்த மாநிலங்கள் நடத்தும்.
மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு என்னென்ன சான்றிதழ் அவசியம்?
மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் கலந்தாய்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன. நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்ணை பெறக்கூடிய ஒவ்வொரு மாணவரும் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெறுகிறார். அப்படி ஒரு மாணவர் கலந்தாய்வில் கலந்துகொள்ள செல்லும் போது பின்வரும் சான்றிதழ்கள் அவசியமாகின்றன .
NEET admit card 2020
NEET rank letter
Class 10 or 12 certificate and mark sheet
ID Proof Domicile Proof (only for state quota seats)
இந்தியர் என்பதற்கான குடியேற்ற சான்று.
நீட் கலந்தாய்வில் இடம் கிடைக்காமல் போனால் என்ன செய்வது?
இந்தியா முழுமைக்கும் குறிப்பிட்ட அளவில் தான் மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் இருக்கின்றன. ஆகவே, நீட் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என சொல்ல முடியாது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் MBBS தான் நோக்கமாக இருக்கும். ஆனால், இடம் கிடைக்காமல் போனால் மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகள் இப்போது இருக்கின்றன. அவற்றை இங்கே பட்டியல் இட்டுள்ளேன், இவற்றில் ஏதேனும் ஒன்றை படிக்கலாம்.
இந்தியாவில் இடம் கிடைக்கவில்லை என்றால் வெளிநாட்டில் கூட சேர்ந்து படிக்கலாம்.
நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் என்னென்ன படிக்கலாம்?
நீட் தேர்வு எழுதி நீங்கள் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுவிட்டால் பின்வரும் படிப்புகளை படிப்பதற்கான தகுதி பெறுகிறார்கள்.
MBBS
BDS
BAMS
BHMS
BVSc & AH
B.Sc. Nursing
மேலும் உயர் கல்வி வாய்ப்புகள் குறித்த பதிவுகளை நீங்கள் படிக்க இங்கே கிளிக் செய்து படியுங்கள்.