Higher Study Options After 12th Bio Math In Tamil – என்ன படிக்கலாம்

12 ஆம் வகுப்பில் Bio Math பிரிவை எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் தாண்டி பல்வேறு கல்வி வாய்ப்புகள் இருக்கின்றன. அவை குறித்து தான் இந்தப்பிரிவில் விரிவாக பார்க்க இருக்கிறோம். இந்தப்பதிவை தேவைப்படும் மாணவர்களுக்கு பகிருங்கள்.

10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றுவிட்டால் நமது பெற்றோர்கள், உறவினர்கள் அல்லது ஆசிரியர்கள்  நம்மை Biology – Mathematics பிரிவில் சேர்த்துவிடுவார்கள். ஒருவேளை நாம் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றாலும் மருத்துவர் படிப்பில் சேர நீட் தேர்வு எழுத வேண்டும். பொறியியல் படிப்பு படிக்கச் செல்லலாம் என்றால் அரசு கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தால் சரி இல்லையேல், தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க பொருளாதார வசதி இருக்க வேண்டும்.

ஆனால், இந்த இரண்டு படிப்புகளையும் தாண்டி பல்வேறு படிப்புகள் Bio Math பிரிவை எடுத்து படித்தவர்களுக்கு இருக்கின்றன. ஆனால், அவை குறித்து பல மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றன. இதனால் தான் அனைவருமே, பொறியியல் பிரிவில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படிக்கத் துவங்கி விடுகிறார்கள். ஆனால் இரண்டையும் தாண்டி பல்வேறு மேற்படிப்பு வாய்ப்புகள் இருக்கின்றன. 

நீங்கள் தேர்வு செய்யப்போகும் மேற்படிப்பு தான் உங்கள் வாழ்க்கையையே தீர்மானிக்கும் என்பதனால் மிகவும் சிந்தித்து நீங்கள் மேற்படிப்பை தேர்வு செய்திட வேண்டும்.

Higher Study Options After 12th Computer Science In Tamil – என்ன படிக்கலாம்

Best Courses After 12th Bio Math Group In Medical Field

Bio Math பிரிவை எடுத்து படிக்கும் மாணவர்களின் கனவே மருத்துவ துறை சார்ந்து தான் இருக்கும் என்பதனால் முதலில் அது சார்ந்து இருக்கும் மேற்படிப்பு வாய்ப்புகளை அறிந்துகொள்வோம்.

NEET தேர்வு என்றால் என்ன? எப்படி நடைபெறுகிறது?

1. MBBS [மருத்துவ படிப்பு]

12 ஆம் வகுப்பில் Bio Math பிரிவை எடுத்து படிப்பவர்களுக்கு இருக்கக்கூடிய முதல் வாய்ப்பு MBBS [Bachelor of Medicine and Bachelor of Surgery]. நீட் தேர்வு அறிமுகம் ஆவதற்கு முன்பாக 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் நீட் தேர்வு எழுத வேண்டும். அதில் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும். இந்தியாவில் ஒருவர் மருத்துவர் ஆவது எப்படி என்பது குறித்து விரிவாக இங்கே எழுதி இருக்கிறேன். நீங்கள் படிக்கலாம். 

கால அளவு : 5 ½ years (4.5 academic course duration + 1-year internship)

கட்டணம் : அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரைக்கும் தான் கட்டணம் இருக்கும். தனியார் கல்லூரிகளில் படிக்க அதிக பட்சமாக 25 லட்சம் வரைக்கும் கூட ஆண்டுக்கு செலவாகும். 

2. BAMS [இளங்கலை ஆயுர்வேத மருத்துவம்]

BAMS [Bachelor of Ayurvedic Medicine] படிக்கும் வாய்ப்பு 12 ஆம் வகுப்பில் Bio Math பிரிவை எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு இருக்கிறது. இந்தப் படிப்பை பயில்வதற்கும் மாணவர்கள் NEET தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். தற்போது இந்தியாவில் அதிகப்படியான மாணவர்களால் விரும்பி படிக்கப்படும் மேற்படிப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றன. 

கால அளவு : 5.5 Years (Including 1 Year Internship)

கட்டணம் : அரசுக் கல்லூரியில் ஆண்டுக்கு 10000 வரைக்கும் செலவாகும். தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு 4 லட்சம் முதல் பல லட்சங்கள் வரைக்கும் செலவாகும். நீங்கள் தேர்வு செய்யும் கல்லூரி, இருக்கும் இடம், போட்டி இவற்றை பொறுத்து கட்டணம் மாறுபடும்.

3. BDS [பல் மருத்துவம்]

BDS [Bachelor of Dental Surgery] என்ற படிப்பை படிக்க உங்களுக்கு தகுதி உள்ளது. ஆனால், 2024 ஆம் ஆண்டு முதல் BDS படிக்கவும் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டியது அவசியம். 

கால அளவு : 5 year (4 years academic education + 1 year mandatory internship)

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை. தனியார் கல்லூரிகளில் 1 லட்சம் முதல் 6 லட்சம் வரை. சில சிறந்த கல்லூரிகளில் ஆண்டுக்கு 10 லட்சம் வரைக்கும் செலவாகும்.

4. BHMS [இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை]

Bachelor of Homoeopathic Medicine and Surgery (B.H.M.S) இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான ஹோமியோபதி மருத்துவத்தை கற்றுக்கொள்ளும் ஓர் இளங்கலை படிப்பு தான் BHMS. BHMS படிப்பில் சேருவதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். 

கால அளவு : 5 year (4 years academic education + 1 year mandatory internship)

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை. தனியார் கல்லூரிகளில் 1 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை. சில சிறந்த கல்லூரிகளில் அதிகமாக செலவாகும்.

5. BSc Nursing

BSc Nursing என்பது நான்கு வருட இளங்கலைப் படிப்பாகும். தொழில்முறை செவிலியர்கள் ஆவதற்கு தேவையான கல்வி அறிவு மற்றும் பயிற்சிகளை இந்த நான்கு வருடங்களில் பெற முடியும். படிப்போதே பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதன் மூலமாக திறமை வாய்ந்த செவிலியராக ஆக முடியும். 

வேலைவாய்ப்பு : Staff Nurse, Clinical Nurse Specialist, Nurse Educator, Public Health Nurse, Research Nurse என பல்வேறு பணிகளில் சேர முடியும். 

கால அளவு : 4 ஆண்டுகள் 

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் 8,000 முதல் 30,000 வரைக்கும் ஆண்டுக்கு செலவாகும். தனியார் கல்லூரிகளில் 1 லட்சம் முதல் 2.5 லட்சம் வரைக்கும் ஆண்டுக்கு செலவாகலாம். 

BSc Nursing படிப்பிற்கு நீட் தேர்வு அவசியம் இல்லை. ஆனால் சில கல்லூரிகள் அவர்களுக்கென சில தேர்வு முறைகளை வைத்திருக்கவும் வாய்ப்பு உண்டு.

6. B.Pharm

B.Pharm (Bachelor of Pharmacy) என்பது நான்கு வருட இளங்கலைப் படிப்பாகும், இதில் மருந்துகள் துறையில் உள்ள விசயங்கள் பற்றி படிப்பீர்கள். குறிப்பாக, மருந்துகள் தயாரிப்பு, மருந்து உடலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது, மருந்துகள் ஆராய்ச்சி என பல்வேறு விசயங்களை கற்றுக்கொள்ள முடியும். 

வேலை வாய்ப்பு : Community Pharmacist, Hospital Pharmacist, Research Scientist, Drug Inspector, Medical Sales Representative என பல்வேறு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. 

கால அளவு : 4 ஆண்டுகள் 

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் 40,000 முதல் 1 லட்சம் வரைக்கும் ஆண்டுக்கு செலவாகும். தனியார் கல்லூரிகளில் 1 லட்சம் முதல் 4 லட்சம் வரைக்கும் ஆண்டுக்கு செலவாகலாம்.

Best Courses After 12th Bio Math Group In Engineering Field

இந்தப்பகுதியில் Bio Math Group எடுத்து படித்தவர்களுக்கு பொறியியல் மேற்படிப்பில் இருக்கக்கூடிய வாய்ப்புகளை பார்க்கலாம்.

Higher Study Options After 12th Bio Math In Tamil (1)
Higher Study Options After 12th Bio Math In Tamil (1)

பொறியியல் மேற்படிப்பில் பிரிவுகளை தேர்வு செய்திடும் போது அதிகபட்சமாக ECE, CIVIL இவற்றையே கண்களை மூடிக்கொண்டு பலரும் தேர்வு செய்கிறார்கள். ஆனால், Bio Math Group எடுத்து படித்த மாணவர்களுக்கு அதனையும் தாண்டி சில பொறியியல் மேற்படிப்பு வாய்ப்புகள் இருக்கின்றன. அவைக்கு இங்கே முன்னுரிமை அளித்து விளக்கி இருக்கிறேன். தனித்துவமான பிரிவுகளை எடுத்து படிக்கும் போது வேலை வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிடுகின்றன.

1. Biomedical Engineering

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் என்பது உயிரியல் மற்றும் மருத்துவ துறையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க பொறியியல் யுக்திகள் மூலமாகவும், கருவிகள் வடிவமைப்பு உள்ளிட்ட உதவிகள் மூலமாகவும் பங்காற்றுவது. மொத்தத்தில் ஒரு நோயாளியின் நோயை குணப்படுத்துவதற்கு மருத்துவ துறையும் பொறியியல் துறையும் இணைந்து பணியாற்றும் ஒரு வாய்ப்பினை இந்தக் கல்வி வழங்குகிறது.

Designing medical devices, Developing biomaterials, Creating medical software, Tissue engineering என பல்வேறு விசயங்களை இங்கே மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். 

வேலைவாய்ப்பு : Biomedical Engineer, Prosthetist/Orthotist, Clinical Engineer, Biomaterials Scientist, Medical Research Scientist என பல்வேறு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. 

கால அளவு : 4 ஆண்டுகள்

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கு 50,000 முதல் 2 லட்சம் வரைக்கும் செலவாகும். தனியார் கல்லூரிகளில் சில லட்சங்கள் துவங்கி 5 லட்சம் வரைக்கும் ஆண்டுக்கு செலவாகலாம்.

2. Biochemical Engineering

பயோ கெமிக்கல் என்ஜினியரிங் என்பது வேதியியல் துறைக்கும் மருத்துவ துறைக்கும் இடையில் உள்ள தூரத்தை குறைத்து இரண்டையும் இணைக்கும் ஓர் பாடப்பிரிவு ஆகும். மருத்துவ துறைகளுக்கு தேவையான விசயங்களை உற்பத்தி செய்து தருவது இதன் முக்கிய பணியாகும்.

Bioprocessing, Fermentation Technology, Enzyme Technology, Bioremediation என பல்வேறு விசயங்களை இங்கே மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

வேலைவாய்ப்பு : Biochemical Engineer, Research Scientist, Food Engineer, Environmental Engineer, Pharmaceutical Engineer என பல்வேறு வேலைவாய்ப்புகளில் சேரலாம். 

கால அளவு : 4 ஆண்டுகள்

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கு 50,000 முதல் 2 லட்சம் வரைக்கும் செலவாகும். தனியார் கல்லூரிகளில் சில லட்சங்கள் துவங்கி 5 லட்சம் வரைக்கும் ஆண்டுக்கு செலவாகலாம்.

3. Environmental Engineering

Biochemical Engineering என்பது சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு தேவையான விசயங்களை செய்திடும் ஓர் பொறியியல் துறையாகும். சுற்றுச்சூழல் மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் வளம் குறைதல் போன்ற சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய விசயங்களை செய்வதே இந்தத் துறையின் முக்கிய நோக்கமாகும்.

Water & Wastewater Treatment, Air Pollution Control, Solid Waste Management, Environmental Impact Assessment, Remediation of Contaminated Sites, Sustainability Engineering என பல்வேறு விசயங்களை நீங்கள் இங்கே படிப்பீர்கள். 

வேலைவாய்ப்பு : Environmental Engineer, Environmental Consultant, Waste Management Specialist, Environmental Health & Safety Officer, Water Resource Engineer என பல்வேறு வேலைவாய்ப்புகளில் சேரலாம். 

கால அளவு : 4 ஆண்டுகள்

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கு 15,000 முதல் 1 லட்சம் வரைக்கும் செலவாகும். தனியார் கல்லூரிகளில் சில லட்சங்கள் துவங்கி 4 லட்சம் வரைக்கும் ஆண்டுக்கு செலவாகலாம்.

4. Agricultural Engineering

Agricultural Engineering என்பது வேளாண்மை துறைக்கு தேவையான பங்களிப்பை செய்திட பொறியியல் யுக்திகளை பயன்படுத்தும் ஓர் படிப்பாகும். வேளாண்மைத்துறையை லாபம் நிறைந்த ஒன்றாக மாற்றுவது, தேவையான உபகரணங்களை செய்வது என பல்வேறு விசயங்கள் இதில் அடங்கும். 

Designing farm machinery, Precision agriculture, Renewable energy in agriculture, Food processing and storage, Soil and water management என பல்வேறு விசயங்களை இங்கே படிப்பீர்கள். 

வேலைவாய்ப்பு : Agricultural Engineer, Precision Agriculture Specialist, Water Management Engineer, Food Processing Engineer, Research Scientist என பல்வேறு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

கால அளவு : 4 ஆண்டுகள்

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கு 15,000 முதல் 1 லட்சம் வரைக்கும் செலவாகும். தனியார் கல்லூரிகளில் சில லட்சங்கள் துவங்கி 4 லட்சம் வரைக்கும் ஆண்டுக்கு செலவாகலாம்.

Best Courses After 12th Bio Math Group In Degree Field

Bio Math Group எடுத்து படித்தவர்கள் மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளை படிக்க நீட் தேர்வு எழுத வேண்டி இருக்கும். அதேபோல, பொறியியல் துறை சார்ந்த படிப்புகளை படிக்க நினைத்தாலும் தனியார் கல்லூரிகளில் படிக்க அதிக செலவாகும். ஆகவே, பல மாணவர்கள் இந்த இரண்டையும் தாண்டி இருக்கும் வேறு வாய்ப்புகளை பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்களுக்காக, இங்கே சிறந்த வாய்ப்புகளை பார்க்கலாம்.

1. BSc Biotechnology

பிஎஸ்சி பயோடெக்னாலஜி என்பது மூன்று வருட இளங்கலைப் படிப்பாகும், இது உயிரியல் துறையையும் தொழில்நுட்பத் துறையையும் இணைக்கிறது. சிறந்த பொருள்களையும் தீர்வுகளையும் உருவாக்குவதற்கு தேவையான விசயங்களை செய்வதற்கு தேவையான திறன்களை உங்களுக்கு வழங்குகிறது. 

வேலைவாய்ப்புகள் : Research Scientist, Biotech Analyst, Quality Control Specialist, Food Technologist, Environmental Scientist என பல்வேறு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. 

கால அளவு : 3 ஆண்டுகள்

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கு 11,000 முதல் 85 ஆயிரம் வரைக்கும் செலவாகும். தனியார் கல்லூரிகளில் சில லட்சங்கள் துவங்கி 2 லட்சம் வரைக்கும் ஆண்டுக்கு செலவாகலாம்.

2. B.Sc. Microbiology

B.Sc. Microbiology என்பது பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் புரோட்டோசோவா போன்ற பல நுண்ணுயிர்கள் பற்றி படிக்கும் மூன்று ஆண்டுகள் கொண்ட பாதிப்பாகும். இவற்றின் பண்புகள், வளர்ச்சி, பயன்கள், மனிதர்களின் ஆரோக்கியத்தில் இவை ஏற்படுத்தும் தாக்கம் என பல்வேறு விசயங்கள் பற்றி இங்கே படிப்பீர்கள்.

Microbial Physiology and Biochemistry, Microbiology Techniques, Immunology, Microbial pathogenesis, Industrial Microbiology என பல்வேறு விஷயங்கள் குறித்து இங்கே படிப்பீர்கள். 

வேலைவாய்ப்புகள் : Research Scientist, Microbiologist, Medical Laboratory Technologist, Quality Control Microbiologist, Environmental Microbiologist என பல்வேறு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. 

கால அளவு : 3 ஆண்டுகள்

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கு 11,000 முதல் 50 ஆயிரம் வரைக்கும் செலவாகும். தனியார் கல்லூரிகளில் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரைக்கும் ஆண்டுக்கு செலவாகலாம்.

3. BSc Nutrition and Dietetics

BSc Nutrition and Dietetics என்பது தற்போதைய சூழலில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் ஓர் படிப்பாகும். இது ஒரு நபரின் ஊட்டச்சத்து தேவைகளை மதிப்பிடுவதற்கும் அவர்களுக்கு ஏற்ற உணவுத் திட்டங்களை உருவாக்குவதற்கும் தேவையான பயிற்சியை வழங்குகிறது. உணவு மூலமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்தக் கல்வி பயிற்றுவிக்கிறது. 

Nutrition science, Biochemistry, Food science, Dietetics, Clinical nutrition என பல்வேறு விசயங்களை நீங்கள் இங்கே கற்றுக்கொள்வீர்கள். 

வேலைவாய்ப்புகள் : Registered Dietitian, Clinical Nutritionist, Public Health Nutritionist, Nutrition Educator, Food Service Management என பல்வேறு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. 

கால அளவு : 3 ஆண்டுகள்

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கு 11,000 முதல் 50 ஆயிரம் வரைக்கும் செலவாகும். தனியார் கல்லூரிகளில் 1 லட்சம் முதல் 2.5 லட்சம் வரைக்கும் ஆண்டுக்கு செலவாகலாம்.

4. B.Sc. Physiotherapy

பி.எஸ்சி. பிசியோதெரபி என்பது மூன்று வருட இளங்கலைப் படிப்பாகும், இது காயம், நோய் அல்லது முடக்குவாதத்திற்குப் பிறகு இயக்கம் மற்றும் செயல்பாட்டை மனிதர்கள் மீட்டெடுக்க உதவும் அறிவு மற்றும் திறன்களை உங்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ஓர் பாடப்பிரிவு.

வேலைவாய்ப்புகள் : Physiotherapist, Sports Physiotherapist, Pediatric Physiotherapist, Geriatric Physiotherapist, Cardiac Physiotherapist என பல்வேறு வேலைவாய்ப்புகள் இதில் இருக்கின்றன.

கால அளவு : 3 ஆண்டுகள்

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கு 30,000 முதல் 50 ஆயிரம் வரைக்கும் செலவாகும். தனியார் கல்லூரிகளில் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரைக்கும் ஆண்டுக்கு செலவாகலாம்.

5. BSc Cardiac Care Technology

இது மூன்று வருட இளங்கலைப் படிப்பாகும். இது இருதய பராமரிப்புக் குழுவின் முக்கிய அங்கமாக நீங்கள் பணியாற்றுவதற்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை உங்களுக்கு வழங்குகிறது.

வேலைவாய்ப்புகள் : Cardiac Technologist/Technician, Echocardiographer, Cath Lab Technician, Cardiovascular Research Assistant என பல்வேறு வேலை வாய்ப்புகள் இதில் இருக்கின்றன. 

கால அளவு : 3 ஆண்டுகள் 

கட்டணம் : அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கு 10,000 முதல் 50 ஆயிரம் வரைக்கும் செலவாகும். தனியார் கல்லூரிகளில் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரைக்கும் ஆண்டுக்கு செலவாகலாம்.

Conclusion

12 ஆம் வகுப்பிற்கு பிறகு நாம் என்ன மேற்படிப்பை தேர்வு செய்கிறோமோ அது தான் நமது வாழ்க்கையையே தீர்மானிக்கப்போகிறது. ஆகவே, நேரம் எடுத்து நமக்கு ஏற்ற, வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள ஓர் படிப்பை தேர்வு செய்வது தான் புத்திசாலித்தனமான விசயம். அடுத்தவர்களின் ஆலோசனைகளை நாம் கேட்பது மிகவும் நல்லது. ஆனால், அவர்கள் படிக்கச் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு படிப்பது மிகவும் தவறான ஒன்று. 

நாம் படுக்கப்போகும் மேற்படிப்பில் நமக்கு ஆர்வம் இருப்பதும் அவசியம். இல்லையேல், பிடிக்காத ஒன்றை படித்து, பிடிக்காத ஓர் வேலையை நாம் காலம் முழுவதும் செய்திட வேண்டிய நிலை உண்டாகும். ஆகவே, கவனமாக மேற்படிப்பை தேர்வு செய்திடுங்கள். 

இந்தப்பதிவில், Bio Math பிரிவை எடுத்து படித்திருக்கும் மாணவர்களுக்கு இருக்கும் கல்வி வாய்ப்புகள் அனைத்தையும் பட்டியலிட்டு உள்ளேன். இவை உங்களுக்கு தேவையான ஓர் அறிமுகத்தை நிச்சயமாக கொடுக்கும். இதில் இருந்து உங்களுக்கு ஏற்ற படிப்பை நீங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள். 

Higher Study Options After 12th Computer Science In Tamil – என்ன படிக்கலாம்

இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை தவறாமல் வாட்ஸ்ஆப்பில் பெற விரும்பினால் இங்கே கிளிக் செய்து எங்களது சேனலில் இணைந்துகொள்ளுங்கள்.