How To Become A Pilot In India Tamil

ஒரு 12 ஆம் வகுப்பு மாணவருக்கு Pilot எப்படி ஆவது என்கிற கேள்வி இருந்தால் அவருக்கு சிறந்த வழிகாட்டியாக இந்தப்பதிவு இருக்கும். படியுங்கள் பகிருங்கள்.

how to become pilot in india
how to become pilot in india

தொடர்ச்சியாக விமான பயணங்கள் அதிகரிக்கும் சூழலில் பைலட் கிற்கான தேவை அதிகமாக உள்ளது. ஒரு அனுபவம் மிக்க Pilot ஒருவருக்கு 1.5 கோடி வரையில் கூட ஆண்டுக்கு சம்பளம் கிடைக்கும். ஆனால், நீங்கள் அந்த அளவிற்கு உயர பல ஆண்டுகள் அனுபவம் தேவைப்படும். 12 ஆம் வகுப்பு முடித்த பின்பு என்ன படிக்கலாம் என்ற யோசனையோடு நீங்கள் இருந்தால், உங்களுக்கு Pilot என்பதும் ஓர் சிறந்த மேற்படிப்பு வாய்ப்பாக இருக்கலாம். விமானத்தை இயக்குவது யாருக்குத்தான் பிடிக்காது. 

இந்தப்பதிவில், நீங்கள் ஒரு பைலட் ஆவதற்கு தேவையான கல்வித்தகுதி, உடற்தகுதி, தேர்வுகள், பயிற்சி முறைகள் என அனைத்தையும் விரிவாக பார்க்கலாம்.

மேற்படிப்பு குறித்து தொடர்ச்சியாக எழுதி வளர்க்கிறேன். Higher Study Ideas In Tamil இங்கே கிளிக் செய்து நீங்கள் அதனை படித்து பயன்பெறலாம்.

Table Of Contents :

Education Qualification For Pilot In Tamil

Types Of Pilots In Tamil

License Types Of Pilot

Pilot Eligibility In Tamil

Physical requirements for Pilot [Male]

Physical requirements for Pilot [Female]

Steps to Become a Pilot in India

Education Qualification 

பைலட் ஆவதற்கு ஒரு மாணவர் தனது 12ஆம் வகுப்பில் கணக்கு மற்றும் இயற்பியல் பாடங்களை கண்டிப்பாக படித்திருக்க வேண்டும். இது மிக முக்கியமானதொரு தகுதியாக பார்க்கப்படுகிறது. 

உங்களால் 12ஆம் வகுப்பு முடித்த பிறகு நேரடியாக அல்லது தகுதித்தேர்வு மூலமாகவோ Flying School களில் சேர முடியும். அதேபோல, பைலட் வேலைக்கு உகந்தது மாதிரியான aeronautical engineering மாதிரியான ஒரு இளங்கலை பட்டப்படிப்பை படித்தபிறகும் கூட Flying School களில் சேரலாம். 

பைலட் பணியில் இருக்கக்கூடிய தேர்வுகள், உடற்தகுதி என பல்வேறு விசயங்களை பார்ப்பதற்கு முன்னதாக பைலட் வேலை குறித்தும் அதன் உரிமம் குறித்தும் பல்வேறு விசயங்களை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

Types of Pilots

பல்வேறு விதமான சேவைகளை வழங்கக்கூடிய விமானங்கள் இங்கே இருக்கின்றன. அனைத்து விதமான விமானங்களையும் ஒருவரால் இயக்க முடியாது. குறிப்பிட்ட விமானத்தை இயக்க அவர் தனித்தனியே பயிற்சி பெற்று உரிமம் வாங்க வேண்டும். இந்த விவரங்கள் மூலமாக நீங்கள் எந்த மாதிரியான பைலட் ஆக வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள். 

Airline Transport Pilots: பயணிகள் பயணிக்கும் விமானங்களை இயக்கும் பைலட். பொதுவாக, விமான நிறுவனங்கள் தான் இந்த பைலட்களை வேலைக்கு அமர்த்துகின்றன. Commercial Pilot License கொண்ட விமானியால் தான் பயணிகள் விமானத்தை இயக்க முடியும். 

Private Pilots: தனியார் விமானங்களை இயக்கம் பைலட்கள். பொதுவாக, பெரும் பணக்காரர்கள் தான் இப்படிப்பட்ட விமானிகளை பணிக்கு வைத்திருப்பார்கள். Private Pilot License வைத்திருக்கும் பைலட்கள் இதற்கு தகுதி வாய்ந்தவர்கள். 

Sport Pilots: இது விளையாட்டு சம்பந்தப்பட்ட விமானங்களை இயக்கிட தேவைப்படுகிறவர்கள். குறிப்பாக, 10000 அடிக்கும் குறைவாக இந்த விமானங்கள் பறக்கும். 

Flight Instructors: புதிய விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் விமானி ஆசிரியர்கள். இவர்கள் தங்களது அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறார்கள். 

Air Force Pilots: இந்திய பாதுகாப்புத்துறையில் உள்ள விமானங்களை இயக்குவதற்கு இந்த விமானிகள் பயன்படுகிறார்கள். குறிப்பாக, போர் விமானங்கள், ரோந்து விமானங்கள், போர் தளவாடங்கள் கொண்டு செல்லும் பெரிய விமானங்கள் என பலவகைப்பட்ட விமானங்கள் இருக்கின்றன. 

இதுதவிர, Helicopter Pilots, Airline Transport Pilots, Cargo Pilots,  Test pilots, Agricultural Pilots, Seaplane pilots என பல்வேறு பைலட் பணிகள் இருக்கின்றன.

License Type Of Pilot

விமானிகளுக்கு பலவகைப்பட்ட உரிமங்கள் இருக்கின்றன. அந்த உரிமத்தை பொறுத்து தான் எந்த வகையிலான விமானங்களை இயக்கிட முடியும் என்பது மாறுபடும். 

The Student Pilot Licence (SPL): விமானியாக பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கு இந்த லைசென்ஸ் வழங்கப்படும். இது வைத்திருந்தால் தான் பயிற்சிக்காக கூட விமானத்தை இயக்கிட முடியும். குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டே விமானத்தை இயக்க வேண்டும். 

Private Pilot License (PPL): இந்த லைசென்ஸ் வைத்திருக்கும் விமானிகள் சிறிய ரக விமானிகள் மற்றும் தனியார் விமானங்களை இயக்கம் உரிமம் கொண்டவர்கள். 

Certified Flight Instructor (CFL): இந்த லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் விமானிகளுக்கு சொல்லித்தரும் பயிற்சி பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பார்கள். 

Commercial Pilot License (CPL): பயணிகள் பயணிக்கும் விமானங்களை இயக்கிட இந்த லைசென்ஸ் வைத்திருப்பது மிகவும் அவசியம். 

Airline Transport Pilot License (ATPL): இதுதான் இருப்பதிலேயே உயர்ந்த பைலட் லைசென்ஸ் ஆக பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பயணிகள் விமானத்தை இவர்கள் தான் இயக்குவார்கள்.

Eligibility to become a Pilot

விமானத்தை இயக்குவது மிகவும் சிக்கலான ஒரு பணியாக பார்க்கப்படுகிறது. ஆகவே தான் இதற்கான லைசென்ஸ் பெறுவதற்கு கடுமையான தகுதியும் பயிற்சியும் தேவைப்படுகிறது. பைலட் ஆவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம். 

Age : குறைந்தது 17 வயது இருந்தால் விமானிக்கான பயிற்சியில் கலந்துகொள்ள முடியும். Commercial Pilot Licence (CPL) வாங்குவதற்கு குறைந்த வயது 18. 

Educational Qualification: 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தை நிச்சயமாக எடுத்து படித்திருக்க வேண்டும். அதேபோல, நேரடியாக 12 ஆம் வகுப்பு முடித்த பின்னரும் விமானக்கான பயிற்சியில் கலந்துகொள்ளலாம். இல்லாவிடில், விமானத்துறை சம்பந்தப்பட்ட பின்வரும் ஒரு aviation பாடத்தை எடுத்து படித்துவிட்டு பின்னரும் விமானிக்கான பயிற்சியில் ஈடுபடலாம். 

B.Sc. (Bachelor of Science) Aviation

BBA Aviation Operations

BBA Airport Management

B.Sc. (Bachelor of Science) Aeronautical Science

BMS in Aviation Management

B.E. (Bachelor of Engineering) Aeronautical Engineering

B.E. (Bachelor of Engineering) Aerospace Engineering

B.Tech (Bachelor of Technology) Aeronautical Engineering

B.Tech (Bachelor of Technology) Avionics Engineering

Medical Fitness: Directorate General of Civil Aviation’s (DGCA) விமானிகளுக்கான உடற்தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, இந்த உடற்தகுதியை பெற்றால் மட்டும் தான் விமானிகளுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள முடியும். 

English Language Proficiency:  விமானியாக ஆக வேண்டுமெனில் ஆங்கிலத் தேர்வில் குறிப்பிட்ட தகுதியை பெற வேண்டும். DGCA ELP Test என்ற டெஸ்ட் இதற்காக இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதில் 6 நிலைகள் கொண்ட இந்தத்தேர்வில் குறைந்தது 4 நிலைகளையாவது அடைந்திருக்க வேண்டும். 

Financial Capability: இந்திய ராணுவத்தில் நீங்கள் சேர்ந்தால் அவர்களே உங்களுக்கு விமான பயிற்சி தருவார்கள். அதைத்தவிர்த்து, நீங்கள் விமான பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து பயிற்சி பெற நினைத்தால் அதற்கு பணம் தேவைப்படும். போதிய பயிற்சி பெறுவதற்கு செலவு செய்திட வேண்டி இருக்கும்.

Physical requirements for Pilot [Male]

பைலட் ஆவதற்கான ஆண்களுக்கான தகுதியை இங்கே பார்க்கலாம்.

Height: 163.5 cm

Vision: 6/6 in one eye and 6/9 in other

Leg length: 99 cms to 120 cms

Thigh length: 64 cms

Sitting height: 81.5 cm to 96 cm

Physical requirements for Pilot [Female]

பைலட் ஆவதற்கான பெண்களுக்கான தகுதியை இங்கே பார்க்கலாம்.

Height: 162.5 cm

Vision: 6/6 in one eye and 6/9 in other

Leg length: 99 cms to 120 cms

Thigh length: 64 cms

Sitting height: 81.5 cm to 96 cm

Aviation Training Institutes

இங்கே சில பிரபலமான விமான பயிற்சி பள்ளிகள் உங்களுக்காக தரப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் பல பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றன. 

Indira Gandhi Rashtriya Uran Akademi (IGRUA)

Bombay Flying Club (BFC)

Rajiv Gandhi Academy for Aviation Technology (RGAA)

Madhya Pradesh Flying Club (MPFC)

National Flying Training Institute (NFTI)

Ahmedabad Aviation & Aeronautics Ltd., Ahmedabad

Steps to Become a Pilot in India

இந்தியாவில் நீங்கள் பைலட் ஆவதற்கான சுருக்கமான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம். இவை நிச்சயமாக உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

Entrance Exams  : 

இந்தியாவில் Civilian Pilot ஆவதற்கு Pilot Common Entrance Test (PILOT CET) என்ற நுழைவுத்தேர்வு இருக்கிறது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் இந்த நுழைவுத்தேர்வை அங்கீகரிக்கின்றன. 

நீங்கள் இந்திய விமான பாதுகாப்புத்துறையில் சேர விரும்பினால் National Defence Academy (NDA) & Naval Academy Examination (NA) என்ற நுழைவுத்தேர்வை எழுதலாம். 

Flight Training Institute

மிகச்சரியான பயிற்சி கல்லூரியை தேர்வு செய்திடுவது மிகவும் அவசியம். ஆகவே, தகுதித்தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்ணை பெற்ற பிறகு இதனை மிக முக்கியமானதாக நீங்கள் செய்திட வேண்டும். 

Gain Experience:

விமானிகளின் பல்வேறு வகைகள் உண்டு, உங்களுக்கு இருக்கும் அனுபவம் மற்றும் பறந்த நேரம் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்கான லைசென்ஸ் மாறுபடும். உதாரணத்திற்கு, commercial pilot லைசென்ஸ்க்கு 250 மணி நேர Flying Hours தேவைப்படும். airline pilot க்கு 1,500 மணி நேர Flying Hours தேவைப்படும். ஆகவே, நீங்கள் உங்களது Flying Hours ஐ அதிகப்படுத்திக்கொண்டே செல்ல வேண்டும்.

Conclusion

உங்களுக்கு விமானியாகும் கனவு இருந்தால் அதனை நிறைவேற்றுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொண்டு இருப்பீர்கள். ஒரு குறிக்கோளை அடைய அதற்கான பாதையை நாம் தெரிந்துகொள்வது அவசியம். அதைத்தான் இங்கே நான் உங்களுக்காக செய்துள்ளேன். 

விமானி ஆவதற்கான வழிகளை ஆராய்ந்து அதன்படி உங்களை தயார்படுத்தினால் நிச்சயமாக உங்களால் எதிர்காலத்தில் விமானியாக முடியும்.

Higher Study Options After 12th Bio Math In Tamil – என்ன படிக்கலாம்

Higher Study Options After 12th Computer Science In Tamil

Higher Study Options After 12th Commerce In Tamil