Higher Study Options After 12th Computer Science In Tamil

12 ஆம் வகுப்பில் computer science எடுத்து படித்த மாணவர்களுக்கு இருக்கும் மேற்படிப்பு வாய்ப்புகளை இங்கே காணலாம்.

“12 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து மகிழ்ச்சியோடு இருக்கும் மாணவ மாணவியருக்கு எழக்கூடிய மிக முக்கியமான கேள்வி “அடுத்து நான் என்ன படிப்பது?” என்பது தான். நீங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவினை எடுத்து படித்து இருந்தால் நீங்கள் படிக்க இருக்கும் வாய்ப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.”

12 ஆம் வகுப்பிற்கு பிறகு நாம் தேர்வு செய்யப்போகும் மேற்படிப்பு [Courses After 12th] தான் நம்முடைய எதிர்காலத்தையே தீர்மானிக்கும். ஆகவே, இருக்கக்கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் தெரிந்துகொண்டு அதிலே நமக்கு விருப்பமானதும் வேலை வாய்ப்புகள் அதிகம் கொண்டதுமான மேற்படிப்பை தேர்வு செய்தால் தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். 12 ஆம் வகுப்பில் பல பிரிவுகள் இருக்கின்றன. அதிலே கணினி அறிவியல் [Computer Science] பிரிவை தேர்வு செய்து படித்த மாணவர்களுக்கு இருக்கக்கூடிய மேற்படிப்பு வாய்ப்புகளை இங்கே பார்க்கலாம். [Higher Study Ideas]

Higher Study Options After 12th Bio Math In Tamil – என்ன படிக்கலாம்

1. B.Tech Computer Science

12 ஆம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படித்து இருக்கும் மாணவர்கள் பொறியியல் படிப்பை படிக்க நினைத்தால் B.Tech Computer Science இல் சேர்ந்து படிக்கலாம்.பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகளில் B.Tech Computer Science பாடப்பிரிவு இருக்கும் என்பதனால் எளிதாக இடம் கிடைத்துவிடும். இதில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியலின் அடிப்படை விசயங்கள் அனைத்தும் கற்றுக்கொடுக்கப்படும். அதேபோல, computer programming, concepts,computer software, algorithms, program design, programming languages, computer hardware, computation என பல விசயங்கள் கற்றுக்கொடுக்கப்படும். 

நீங்கள் இதிலே சேர்ந்து படித்தால் பின்வரும் துறைகளில் வேலைக்கு சேரலாம். 

Data Science

Artificial Intelligence

Game Designing

Software

Security and Intelligence

2. B.Tech Information Technology

12 ஆம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படித்திருக்கும் மாணவர்களுக்கு இருக்கும் இன்னொரு பொறியியல் பிரிவு B.Tech Information Technology. B.Tech Computer Science இல் இருப்பது போலவே கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் குறித்து பல அடிப்படை விசயங்கள் இதிலே கற்றுக்கொடுக்கப்படும். கூடுதலாக, தகவல் தொழில்நுட்பம், நெட்வொர்க்கிங் குறித்தும் கற்றுத்தரப்படும். 

படித்து முடித்த பிறகு தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைக்கு செல்ல விரும்பினால் இந்தப்பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்.

3. BCA (Bachelor of Computer Application)

பொறியியல் தவிர்த்து பல கம்ப்யூட்டர் சார்ந்த பல பட்டப்படிப்புகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான படிப்பு BCA. இது பெரும்பான்மையான கல்லூரிகளில் இருக்கும். ஆனால், நல்லதொரு கல்லூரியில் சேர்ந்து படித்தால் தான் இந்தப்படிப்பு உங்களுக்கு பலன் தரும் விதத்தில் அமையும். நீங்கள் இதை தேர்வு செய்து படித்தால் Software Development, Database Management System, Theoretical Computer Science, Artificial Intelligence, Computer Networks என பல கம்ப்யூட்டர் சார்ந்த விசயங்களை கற்றுக்கொள்ள முடியும். 

நீங்கள் BCA படித்தால் பின்வரும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

Java Developer

Technology Specialist

Web Analyst

Computer Scientist

Software Analyst

Computer Programmer

4. B.Sc. Computer Science

பல நல்ல கல்லூரிகளில் B.Sc. Computer Science இருக்கிறது. இதில் கம்ப்யூட்டர் சார்ந்த விசயங்கள் உங்களுக்கு பயிற்றுவிக்கப்படும். இதிலே நீங்கள் சேர்ந்து படித்தால் பின்வரும் வேலைவாய்ப்புகளை பெறலாம்.

Systems Analyst

Network Programmer

Computer Graphics

IT Consultant

Backend Developer

Web Designer

5. இதர B.Sc. படிப்புகள்

12 ஆம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படித்தால் மேற்படிப்பிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்பை தான் தேர்வு செய்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் விரும்பினால் பிற துறைகளிலும் சேர்ந்து படிக்கலாம். உதாரணத்திற்கு, நீங்கள் 12 ஆம் வகுப்பில் இயற்பியல் படித்து இருந்தால்  B.Sc. Physics படிக்கலாம். அதுபோல, ஏராளமான டிகிரி வாய்ப்புகள் இருக்கின்றன. பின்வரும் இதர BSc படிப்புகள் தற்போது பல கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன. 

BSc Agriculture.

BSc Biotechnology.

BSc Zoology.

BSc Clinical Research & Healthcare Management.

BSc Forestry.

BSc Microbiology.

BSc Nursing.

B.Sc. Physiotherapy.

B.Sc. Radiology

B.Sc. Bioinformatics

B.Sc. Physics

B.Sc. Chemistry

B.Sc. Botany

Career Options After 12th Computer Science [வேலை வாய்ப்புகள்]

ஆண்டுக்கு குறைந்தது சில லட்சம் பொறியியல் பட்டதாரிகள் இந்தியாவில் உருவாகிறார்கள். ஆகவே, பொறியியல் படித்தால் வேலை கிடைப்பது கடினம் என்ற பொதுவான கருத்து இங்கே உலாவி வருகிறது. ஆனால், அதிலே உண்மை இல்லை. நீங்கள் உங்களது திறமையை வளர்த்துக்கொண்டால் நிச்சயமாக உங்களுக்கான வேலை கிடைத்தே தீரும். நீங்கள் 12 ஆம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படித்து இருந்தால் மேற்சொன்ன படிப்புகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்து இருந்தால் பின்வரும் வேலைகளில் சேரலாம்.

1. Software Engineer

எப்போதும் மதிப்பு குறையாத ஒரு பணி இது. காரணம், உங்களுக்கு இருக்கும் திறமைக்கு ஏற்றவாறு லட்சங்களில் உங்களால் சம்பாதிக்க முடியும். மென்பொருள் உருவாக்கத் துறையில் மிகப்பெரிய வரவேற்பு எப்போதும் உண்டு. நீங்கள் படிக்கும் காலத்திலேயே உங்களை திறமை உடையவர்களாக மாற்றிக்கொண்டால் நீங்கள் நல்ல நிறுவனத்தில் துவக்கத்தில் இருந்தே வேலைக்கு சேர்ந்து உயரலாம். 

பொறியியல் படிக்கும் மாணவர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு அவர்கள் வெறுமனே டிகிரியை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு எந்தவித கூடுதல் விசயங்களையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது தான். இப்போது நிறுவனங்கள் பட்டப்படிப்பு தவிர கூடுதலாக உங்களுக்கு என்ன தெரியும் என்பதில் கவனம் செலுத்துகின்றன. ஆகவே, Java, Networking போன்ற கோர்ஸ்களை கூடுதலாக படியுங்கள். 

2. Data Scientist

தகவல் தான் இன்றைய உலகின் முக்கியமான ஓர் விசயமாக இருக்கிறது. அதனை நிர்வகிப்பது, பாதுகாப்பது , அதில் இருந்து முடிவுகளை பெறுவது போன்ற வேலைகளுக்கு Data Scientist என்ற பணியை மிகப்பெரிய நிறுவனங்கள் ஏற்படுத்தி வைத்துள்ளன. இந்தப் பணிகளில் வேலை பார்ப்போருக்கு அதிக அளவில் சம்பளமும் வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு, பின்வரும் பணி வாய்ப்புகள் இருக்கின்றன.

Data Administartor

Data Architect

Data Business Intelligence Developer

Data Analyst

Statistician

Big Data Engineer

3. Technical Engineer / Networking Engineer

ஒவ்வொரு நிறுவனத்திலும் சில நூறு கணினிகளாவது இருக்கும். அவற்றை நிர்வகிக்கவும், தகவல் பாதுகாப்பிற்காகவும் பொறியாளர்களை நிறுவனம் பணியமர்த்துகிறது. டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளை படித்துவிட்டு சில கோர்ஸ்களை செய்தாலே இதில் பெரிய அளவில் வேலை வாய்ப்பை பெற முடியும்.

Higher Study Options After 12th Bio Math In Tamil – என்ன படிக்கலாம்

FAQ:

1. B.Tech Computer Science மற்றும் B.Tech Information Technology படித்து முடித்த உடனேயே லட்சங்களில் சம்பளம் வாங்க முடியுமா? 

முடியும். சிலர் கோடிகளில் கூட வாங்கவே செய்கிறார்கள். ஆனால், அவ்வளவு திறமை உங்களுக்கு இருந்தால் நீங்கள் வாங்கலாம். பொதுவாக, தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும், நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் 25 ஆயிரம் வரைக்கும் ஆரம்ப சம்பளமாக பெறலாம். ஆனால், நீங்கள் வெகு விரைவிலேயே லட்சங்களில் சம்பளம் பெரும் அளவிற்கு உயர முடியும். 

2. பொறியியல் படிப்பு இனி வேஸ்ட் என்கிறார்களே? 

இதுவொரு பொதுவான கருத்து. ஆனால், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. நிறுவனங்கள் திறமையாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கின்றன. நீங்கள் மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதலாக திறமையை வளர்த்துக்கொண்டால் வேலை நிச்சயமாக கிடைத்துவிடும். பயப்பட தேவை இல்லை. 

3. பொறியியல் படிக்கலாமா அல்லது BSc படிப்பில் சேரலாமா? 

அது உங்கள் விருப்பம். அரசுக்கல்லூரிகளில் இடம் கிடைக்கும் அளவிற்கு நீங்கள் மதிப்பெண் பெற்று இருந்தால் நிச்சயமாக பொறியியல் படிக்கலாம். அல்லாமல், பொருளாதார வசதி மற்றும் படிக்கும் ஆர்வம் இருந்தால் பொறியியல் படிக்கலாம். மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்கள் பொறியியல் படித்தவர்களுக்கு தான் வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்குகின்றன.  நீங்கள் BSc படிப்பிலும் சேரலாம். ஆனால், அதோடு நின்றுவிடாமல் கூடுதலாக சில கோர்ஸ் படித்துக்கொண்டால் எளிதில் வேலை கிடைக்கும். 

4. கல்லூரி தேர்வு முக்கியமானதா அல்லது எங்கு வேண்டுமானாலும் படிக்கலாமா? 

நீங்கள் எந்தக்கல்லூரியில் படிக்கிறீர்கள் என்பது மிக மிக முக்கியமான விசயம். பல கல்லூரிகளில் படிப்பு முறையாக சொல்லித்தரப்படுவது இல்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. அதேபோல, வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகவே, கல்லூரித்தேர்வு என்பது மிக மிக முக்கியம்.

மற்றொமொரு நல்ல பதிவில் உங்களை சந்திக்கிறேன்!