Thursday, November 21, 2024
HomeGadgetsGoogle’s Stadia Pros and Cons in Tamil | கூகுள் ஸ்டேடியா

Google’s Stadia Pros and Cons in Tamil | கூகுள் ஸ்டேடியா

Google Stadia Pros and Cons in tamil கூகுள் ஸ்டேடியா

கூகுள் ஸ்டேடியா

கேம் உலகில் மிகப்பெரிய மாற்றமாக கூகுள் ஸ்டேடியா இருக்கும் என கூகுள் அறிவித்து இருக்கிறது.

2019 ஆம் ஆண்டிற்க்கான கேம் வடிவமைப்பாளர்களுக்கான மாநாடு (2019 Game Developers Conference) சான் பிரான்சிஸ்க்கோவில் நடைபெற்றது. அதில் தான் கூகுள் நிறுவனம் தங்களுடைய புதிய உருவாக்கமான கூகுள் ஸ்டேடியா (Google’s Stadia) பற்றிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியன் நாடுகளில் கூகுள் ஸ்டேடியா பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது கூகுள்.

How Google’s Stadia gaming platform works?

நீங்கள் ஒரு கேமை விளையாட வேண்டும் என நினைக்கிறீர்கள், என்ன செய்வீர்கள்? அந்த கேமை டவுன்லோடு செய்து பிறகு அதனை மொபைல் அல்லது கணினியில் இன்ஸ்டால் செய்து விளையாடுவீர்கள். அதிக கிராபிக்ஸ் கொண்ட பெரிய கேமை விளையாட வேண்டும் எனில் அதிக திறன் கொண்ட கம்ப்யூட்டரை பயன்படுத்தி மட்டுமே விளையாட முடியும். கூகுளின் Google’s Stadia இந்த இடத்தில் தான் மாற்றத்தை கொண்டுவரப்போகிறது. நீங்கள் உங்களது கணினி அல்லது மொபைலில் கேமை இன்ஸ்டால் செய்ய வேண்டியது இல்லை.

நீங்கள் youtube இல் ஒரு கேம் உடைய ட்ரைலர் ஐ பார்க்கிறீர்கள். அந்த ட்ரைலரின் முடிவில் “Play Now” என்ற ஆப்சன் வரும். அதனை கிளிக் செய்தால் போதும். கூகுளின் டேட்டா சென்டரில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கின்ற கேமுடன் உங்களது கணினி அல்லது மொபைல் இணைந்து விடும். உங்களது கம்ப்யூட்டரின் செயல்திறனை பொருத்து கேம் hang ஆவது போன்ற எந்த தொந்தரவும் ஏற்படாது. உங்களது கருவியில் இருந்து கொடுக்கப்படும் input ஐ மட்டும் பெற்றுக்கொண்டு டேட்டா சென்டரில் இருந்து வீடியோ ஸ்ட்ரீம் செய்யப்படும். அது உங்களது திரையில் தெரியும். [ஏற்கனவே நாம் பல ஆன்லைன் கேம்களை இப்படித்தான் விளையாடி வருகிறோம்]


Google’s Stadia Pros

Google Stadia Pros and Cons in tamil கூகுள் ஸ்டேடியா

>> மிகப்பெரிய கேம்களை கூட சராசரி கணினி மற்றும் மொபைல் கொண்டு விளையாட முடியும். இன்ஸ்டால் செய்வது போன்றவற்றால் மெமரி பிரச்சனை ஏற்படுவது தவிர்க்கப்படும்.

>> தற்போது ஸ்மார்ட் டிவி வந்துவிட்டது, இனி டிவி யிலேயே கேம்களை விளையாட முடியும். தனியாக அதிவேக கணினி அல்லது playstation போன்றவற்றை வாங்க தேவை இருக்காது.

 

>> மொபைல், கணினி, டிவி ஆகியவற்றில் விளையாட முடியும்.

>> விளையாடும் போது அதனை youtube இல் பகிரும் வசதியும் இருக்கிறது.

Google’s Stadia Con’s

Google Stadia Pros and Cons in tamil கூகுள் ஸ்டேடியா

Latency : மிகப்பெரிய கேம்களை கூட நீங்கள் இன்ஸ்டால் செய்யாமல் விளையாடலாம் என கூகுள் கூறினாலும் நிச்சயமாக latency பிரச்சனை இருந்தே தீரும் என்கிறார்கள் நிபுணர்கள். உங்களது கணினியில் இருந்து input ஐ பெற்று அதனை கூகுள் டேட்டா சென்டர் எக்சிகியூட் செய்து மீண்டும் நீங்கள் அதனை வீடியோவாக பார்ப்பதற்கு காலதாமதம் ஏற்படவே செய்யும். நிச்சயமாக மிகப்பெரிய பின்னடைவை இது தரும்.

Internet Data Cost : இந்த கேம்களை 4K 60 frames per second வீடீயோ தரத்தில் பார்த்து ரசிக்கலாம் என கூகுள் கூறுகிறது. இந்த அளவிலான வீடியோவை பார்க்க வேண்டும் எனில் ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 200 MB டேட்டா உங்களுக்கு தேவைப்படும். மிக அதிவேக இன்டர்நெட் இணைப்பும் தேவைப்படும். இந்தியாவில் தற்போதைய சூழலில் இவ்வளவு வேகத்தோடு அதிக அளவிலான டேட்டாவை பயன்படுத்துவோர் குறைவு என்றே எண்ணுகிறேன். இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.


கூகுள் நிறுவனம் நிச்சயமாக இந்த பிரச்சனைகளை கவனித்து இருப்பார்கள். இந்த ஆண்டில் Google’s Stadia சில நாடுகளில் மட்டும் வெளியிடப்படும் என கூகுள் அறிவித்துள்ளது, அதன்பிறகு இதன் உண்மையான சாதக பாதகங்கள் தெளிவாக தெரிந்துவிடும்.

கூடுதல் தகவலாக தற்போது வரை Google’s Stadia, குரோம் (Chrome),குரோம் கேஸ்ட் (Chromecast) ஆண்ட்ராய்டு ( Android) கருவிகளில் மட்டும் செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்ட்டுள்ளது. வரும்காலங்களில் இது விரிவாக்கப்படலாம்.

Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular