We can use GPay
Google Pay மூலமாக பணம் அனுப்பாதீர்கள், அப்படி அனுப்பி பிரச்சனை ஏற்பட்டால் உங்களது பணத்திற்கு முறையீடு செய்யமுடியாது என்ற ரீதியில் பதிவிட்டோம். ஆனால் RBI இன் தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதனால் அப்படி கூறப்பட்டுவிட்டது. உண்மையில் Google Pay ஐ பயன்படுத்தலாம்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் அபிஜித் மிஸ்ரா என்பவர் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார். அதில், Google Pay மொபைல் ஆப் “Payment System” போல செயல்படுகிறது. இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் “payment and settlement act 2007” என்ற சட்டத்தின்படி RBI அனுமதியை அது பெற்றிருக்க வேண்டும். அதேபோல NPCI [national payments corporation of india] வெளியிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் Google Pay இந்த பட்டியலிலும் இடம்பெறவில்லை. ஆகவே இது குற்றம் என்பது அவரது வாதம்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு தகவலை கொடுத்தது. அதில், Google Pay என்பது ஒரு ஆப் [third party app] மட்டுமே, அதுவொரு “Payment System” இல்லை எனவும் தெரிவித்து இருந்தது. கூடுதலாக, அங்கீகரிக்கப்பட்ட பண பரிமாற்றம் செய்வதற்கான ஆப்ரேட்டர்களின் பட்டியலில் Google Pay/GPay இல்லை என்பதனால் “payment and settlement act 2007” என்ற சட்டத்திற்கு கீழும் Google Pay/GPay வின் நடவெடிக்கைகள் அடங்காது எனவும் விளக்கம் அளித்து இருந்தது.
“அங்கீரகரிக்கப்பட்ட ஆப்ரேட்டர் இல்லை” என்ற தகவல் பலரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இதற்கு முந்தைய பதிவில் நானும் “Google Pay/GPay மூலமாக பணம் அனுப்புவது ஆபத்தானது” என்று பதிவிட அந்த தவறான புரிதலே காரணமாக அமைந்துவிட்டது. இதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுவெளியில் இப்படி தவறான தகவல் பரப்பப்படுவதை உணர்ந்த கூகுள் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், Google Pay/GPay மூலமாக மேற்கொள்ளப்படும் அனைத்து பண பரிமாற்றங்களும் RBI இன் வழிமுறைப்படியே நடைபெறுகிறது. மேலும் கூறுகையில், Google Pay/GPay என்பது RBI சொன்னது போல “Payment System” இல்லை. ஆனால் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி பண பரிமாற்றம் செய்வதற்கான ஒரு ஆப். வங்கிகளுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள தொடர்பின் மூலமாக UPI கொண்டு பயனாளர்கள் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். இந்த வசதியை வழங்குவதற்கு NPCI வெளியிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆப்ரேட்டர்களின் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
RBI மற்றும் NPCI வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படியே அனைத்து பண பரிமாற்றங்களும் நடைபெறுகிறது. அனைத்து பண பரிமாற்றத்தையும் பாதுகாப்பாகவே வைத்திருக்கிறது கூகுள். ஒருவேளை பிரச்சனை எழுந்தால் 24/7 உதவி எண்ணுக்கு அழைக்கலாம்” என தெரிவித்து இருக்கிறது கூகுள் நிர்வாகம்.
தற்போதைய தகவல்களின் அடிப்படையில் Google Pay/GPay ஆப்பை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்வதனால் எந்த ஆபத்தும் இல்லை என்பதனை புரிந்துகொள்ள முடிகிறது.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.