Thursday, November 21, 2024
HomeTech Articlesவேலைவாய்ப்பில் கூகுள் அதிரடி : Google Launches Career Certificates Program

வேலைவாய்ப்பில் கூகுள் அதிரடி : Google Launches Career Certificates Program

4 ஆண்டு கல்லூரி பட்டம் தேவையில்லை எங்களின் 6 மாத பயிற்சி வகுப்பு போதும் – கூகுள்

Google Career Certificates

கூகுள் நிறுவனம் தற்போது Google Career Certificates என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பினை துவங்க முடிவு செய்துள்ளது. அந்தந்த துறையில் பணியாற்றுகிறவர்களைக் கொண்டு கொடுக்கப்படும் பயிற்சியினை பெறுவதன் மூலமாக கல்லூரி படிப்பை முடிக்காதவர்கள் கூட சிறந்த சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை பெற முடியும் என கூறுகிறது கூகுள்.

அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க உதவும் டிஜிட்டல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான திட்டம் என்ற தலைப்பில் தான் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது கூகுள் நிறுவனம். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து துறைகளிலும் ஆன்லைன் தொழில்நுட்பம் அவசியமாகிவிட்டது. பல்வேறு வேலைகளுக்கு சிறந்த, நடுத்தர நிலையில் தொழில்நுட்பம் பற்றி அறிந்தவர்களுக்கான தேவை இருக்கிறது. ஆனால் அத்தகைய தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதில் சிக்கல் நிலவுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை உருவாக்க அமெரிக்கர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு என்பது அவசியமாக இருக்கிறது. இதுபோன்ற காரணங்களுக்காக தான் கூகுள் நிறுவனம் தற்போது “Google Career Certificates” ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Google Career Certificates எப்படி இருக்கும்?

google logo

கல்லூரி படிப்பு என்பது பல அமெரிக்கர்களுக்கு எட்டாத விசயமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் நல்ல வேலையை பெற டிப்ளமோ உள்ளிட்ட குறுகிய பட்டபடிப்புகளை கற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் அது தற்போது தேவையில்லை. அதற்கு சிறந்த மாற்றாக Google Career Certificates இருக்கும் என கூறுகிறது கூகுள். வெறும் 6 மாதத்தில் முடிக்கக்கூடிய இந்த பயிற்சி வகுப்பிற்கு கட்டணமாக $49 கட்டி இணையலாம்.

கூகுளின் இத்தகைய முயற்சி மூலமாக குறிப்பிட்ட துறையில் சிறந்த நிபுணத்துவம் பெறவும் அவர்களது பிசினஸை பெரிதுபடுத்திக்கொள்ளவும் இது உதவும். கூகுள் தற்போது அறிமுகம் செய்துள்ள Google Career Certificates மூலமாக நல்ல வேலைக்கு ஒருவரால் செல்ல முடியும். இதில் கற்றுக்கொள்கிறவர்களுக்கு கல்லூரி சான்றிதழ் கூட தேவையில்லை. இதில் இணைந்து பயிற்சி பெறுகிறவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை உருவாக்கிட பல்வேறு நிறுவனங்களுடனும் கூகுள் நிறுவனம் தொடர்பை ஏற்படுத்திவருகிறது.

>> A pathway to jobs : சிறந்த கம்பெனிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் எளிதில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்

>> Become job-ready for in-demand, high-paying roles:  சராசரியாக ஆண்டுக்கு $50,000 ஊதியமாக கிடைக்கப்பெறுகிற வேலைவாய்ப்பு கிடைக்கும்

>> Earn a certificate that helps you stand out:  பெறக்கூடிய இந்த சான்றிதழை LinkedIn  இல் பகிரலாம், தனியாக பிரிண்ட் செய்தும் பயன்படுத்திக்கொள்ளலாம்

>> Gain access to career resources : படிப்போடு நில்லாமல் வேலைவாய்ப்பை பெறக்கூடிய பல்வேறு பயிற்சிகளையும் பெற முடியும்

New Google Career Certificates

தற்போது மூன்று முக்கிய பணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Analyst >> Data Analyst பணி என்பது தரவுகளை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கக்கூடிய பணி. இதில் வழங்கப்படும் பயிற்சியானது தரவுகளை எப்படி ஆராய்வது, தற்சமயம் பயன்பாட்டில் இருக்கக்கூடிய டூல்களைக்கொண்டு எப்படி ஆராய்வது என்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.

சராசரியாக $66,000 ஆண்டு சம்பளமாக இந்தப்பணிக்கு வழங்கப்படுகிறது.

UX Designer >> User experience (UX) ஒரு தொழில்நுட்பத்தை பயனாளர்கள் எளிதில் பயன்படுத்தும்படியாக மாற்றி அமைக்கும் பணி. சராசரியாக $75,000 ஆண்டு சம்பளமாக இந்தப்பணிக்கு வழங்கப்படுகிறது.

IT Support Specialist : அனைத்துவிதமான தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் இந்த பணிக்கான பயிற்சி இதில் வழங்கப்படும். சராசரியாக $54,760 ஆண்டு சம்பளமாக இந்தப்பணிக்கு வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெறுவதற்கு எந்தவித கல்லூரி படிப்பையும் நிறைவு செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

முழுவதும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிற்சி வழங்கப்படும் என்பதனால் ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த பயிற்சியை பெற முடியும்.

6 மாதத்தில் ஒரு பயிற்சி வகுப்பை முடிக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



Get updates via whatsapp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular