Saturday, November 23, 2024
HomeAppsGoogle for India 2019 - கூகுள் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் என்ன? | Tamil

Google for India 2019 – கூகுள் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் என்ன? | Tamil

Google for India 2019 tamil

Google for India 2019

இந்திய தொழில்நுட்ப துறைக்கும் இந்திய மக்களுக்கும் உதவிடும் விதமான பல அறிவிப்புகள் Google for India 2019 நிகழ்வில் வெளியிடப்பட்டு இருக்கிறது



Click Here! Get Updates On WhatsApp

Google for India 2019 இன்று புது டெல்லியில் துவங்கியது. இதில் பல்வேறு அறிவிப்புகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக இந்தியாவுடன் தனது தொழில்நுட்ப ரீதியிலான உறவினை மேம்படுத்தும் விதமான பல அறிவிப்புகள் இதில் இடம்பெற்றன. கேசர் சென்குப்தா, கூகுள் நிறுவனத்தின் துணை தலைவர் [Payment’s and NBU] “இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துகொண்டு வருவதையும் குறிப்பிட்டு பேசினார். இந்நிகழ்வினை துவங்கி வைத்து பேசிய அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத், இந்தியாவின் 1 ட்ரில்லியன் டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியாக இதனை குறிப்பிட்டுள்ளார்.

Bengalore AI Team will support india

பெங்களூருவில் அமைக்கபட்டிருக்கும் ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் குழு மூலமாக இந்தியாவின் மிக முக்கிய பிரச்சனைகளான மருத்துவசேவை , விவசாயம் , கல்வி போன்றவற்றை   கணிணி தொழில்நுட்பம் மற்றும் AI ஆகியவற்றைக்கொண்டு தீர்க்க முயலும்

New Jobs feature in Google Pay

பணம் மட்டுமே செலுத்த பயன்பட்டுவந்த கூகுள் பே ஆப்பில் இனி பயனாளர்கள் வேலையையும் தேடிக்கொள்ளலாம். தற்போது டில்லியில் இருப்பவர்களுக்கும் நாளடைவில் இந்தியா முழுமைக்கும் இவ்வசதி கிடைக்கும் . இதற்காக ஸ்விகி , ஸோமட்டோ போன்ற பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

Spot feature in Google Pay

எப்படி redbus , Make my trip போன்றவை Google Pay ஐ பயன்படுத்தி பிசினஸ் செய்கின்றனவோ அதனைப்போலவே சிறிய கடைகள் வைத்திருப்பவர்கள் கூட மிகப்பெரிய நிறுவனங்களைப்போல google pay ஆப்பில் தங்களது விர்ச்சுவல் விற்பனையகத்தை துவங்க முடியும் . குறிப்பிட்ட பொருளையோ அல்லது கடையையோ தேடுவோருக்கு உங்களது கடை காட்டப்படும் ,அங்கேயே பணம் செலுத்திக்கொள்ள முடியும் .

Tokenized cards coming to Pay

கிட்டத்தட்ட 67 மில்லியன் மாதாந்திர பயனாளர்களை கொண்டிருக்கிற Google Pay இல் 110 பில்லியன் டாலர் பண பரிமாற்றம் நடைபெறுகிறது. இதனை அடுத்து ஆப்பிள் கார்டு போல Tokenized card என்பதை Google Pay அறிமுகப்படுத்த இருக்கிறது.

Vodafone – Idea – Google Assistant

Google Assistant ஐ இன்டர்நெட் பயன்படுத்தாதவர்களிடத்திலும் கொண்டு சேர்க்க இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலமாக 000-800-9191-000 என்ற எண்ணுக்கு அழைத்து தங்களுக்கு வேண்டிய தகவலை இலவசமாக பெற முடியும். இந்தியாவில் 1.3 பில்லியன் மக்களை இன்டர்நெட் சேவை சென்று சேராத நிலையில் இந்த திட்டம் பயன்தரும் என நம்பப்படுகிறது. தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் இருந்தாலும் விரைவில் பல்வேறு மொழிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

Bolo app

கூகுள் ஏற்கனவே நடத்திவரும் Bolo app ஐ பல்வேறு மொழிகளுக்கும் விரிவுபடுத்தி இருக்கிறது. Bolo app என்பது குழந்தைகளுக்கு குரல் வடிவில் வழிகாட்டுவதற்கான ஆப். தற்போது தமிழ் மொழியின் இணைக்கப்பட்டிருக்கிறது. 

Google Lens 

 

Google Lens ஆப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தி போன்ற மொழிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. Google Lens என்பது மொபைல் போன் கேமரா மூலமாக ஒரு பொருள் அல்லது இடம் அல்லது பேப்பரில் இருக்கும் எழுத்துக்கள் போன்றவற்றை சர்ச் செய்துகொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு கட்டிடத்தை உங்களது கேமராவில் காட்டினால் அந்த கட்டிடம் பற்றி இணையத்தில் இருக்கும் தகவல்கள் உங்களுக்கு காட்டப்படும்.


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular