21st Birthday
தற்போது உலகம் முழுமைக்கும் 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் ட்ரில்லியன் கணக்கான கேள்விகளுக்கு ஆண்டுதோறும் பதில் கொடுத்துக்கொண்டு இருக்கிறது கூகுள்.
Click Here! Get Updates On WhatsApp
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் சக மனிதர்களிடம் கேள்வி கேட்கிறோமோ இல்லையோ கூகுளிடம் ஏதேனும் ஒரு கேள்வியாவது கேட்டுவிடுகிறோம். இந்த இடம் எங்கிருக்கிறது? அந்த மனிதர் யார்? உலகம் ஏன் உருண்டையாக இருக்கிறது? முடி கொட்டுவதை தடுப்பது எப்படி? இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் என்ன? என பல கேள்விகளை Google Search இல் தேடி வருகிறோம். இன்று (September 27, 2019) கூகுள் சர்ச் இன் 21 வது பிறந்தநாள். இதனை கொண்டாடுவதற்காக சிறப்பான டூடுள் ஒன்றினை கூகுள் வெளியிட்டுள்ளது.
கூகுள் இந்த தினத்தில் பின்வரும் செய்தியை பகிர்ந்துள்ளது. அதாவது “21 வருடங்களுக்கு முன்பாக ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற இரண்டு ஆராய்ச்சி (Ph.d) பட்டதாரிகள் செர்கெய் பிரின் [Sergey Brin] மற்றும் லாரென்ஸ் பேஜ் [ Lawrence (Larry) Page] இருவரும் ஒரு மிகப்பெரிய தேடுபொறியை வடிவமைப்பதற்க்காக ஆராய்ச்சிக்கட்டுரையை சமர்ப்பித்தனர். இதோடு தாங்கள் ஏன் கூகுள் என்ற பெயரை தெரிவு செய்தோம் என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அதன்படி googol number தான் மிகப்பெரிய நம்பர் , 10¹⁰⁰. மிகப்பெரிய அளவிலான சர்ச் என்ஜினை வடிவமைக்கவேண்டும் என எண்ணியதால் மிகப்பெரிய எண்ணைக்குறிக்கின்ற வகையில் கூகுள் [google] என பெயரிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது உலகம் முழுமைக்கும் 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் ட்ரில்லியன் கணக்கான கேள்விகளுக்கு ஆண்டுதோறும் பதில் கொடுத்துக்கொண்டு இருக்கிறது கூகுள். குறிப்பாக சில நாட்களுக்கு முன்னர் தான் இந்திய தொழில்நுட்ப துறைக்கும் இந்திய மக்களுக்கும் உதவிடும் விதமான பல அறிவிப்புகள் Google for India 2019 நிகழ்வில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூகுள் !
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.