[easy-notify id=297]
மற்றவர்களை காட்டிலும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதே மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் லட்சியமாக இருக்கும் . உதாரணமாக நடனமாட கற்றுக்கொள்ளும் ஒரு சிறுவன் உலகிலே தான்தான் சிறந்த நடனம் ஆடுபவராக வர வேண்டும் என விரும்புவான் . அதேபோலத்தான் ஒவ்வொரு துறைகளில் இருப்பவர்களும் அந்த துறையில் டாப் ஆக வரவேண்டும் என எண்ணுவோம் .
ஆனால் அனைவராலும் அவ்வாறு வந்துவிட முடிவதில்லை . காரணம் பல இருக்கலாம் . ஆனால் சாதித்தவர்களை ஆராய்ந்தால் அவர்கள் அனைவருக்கும் பின்னாலும் ஒரு சில காரணங்களே இருக்கும் . முயற்ச்சி , கடின உழைப்பு என அது நீளலாம் .
வெற்றி பெற்றவர்களின் பின்னால் இருக்கக்கூடிய தகுதிகள் அனைத்தும் இருந்து சிலர் தோற்கலாம் அதற்கு முக்கிய காரணம் , ஐகியூ , அதிக கவனம் , கிரியேடிவிட்டி இவற்றில் ஏற்படும் குறைபாடுகள் தான் .
இதனை எப்படி சரி செய்வது , ஐகியூ , அதிக கவனம் , கிரியேடிவிட்டி இவற்றை எப்படி அதிகரிப்பது என்பது குறித்து 10 எளிய வழிமுறைகளை சொல்லித்தர போகிறேன் . கவனமாக கேளுங்கள் சாதனையாளராக மாறுங்கள் .
1. LEARN BY TEACHING
சொல்லித்தருவதன் மூலமாக கற்றுக்கொள்ளுங்கள்
ஒரு தொழில்நுட்பத்தையோ அல்லது ஒரு விஷயத்தையே கற்றுக்கொண்டுவிட்டிர்கள் என வைத்துக்கொள்வோம் . அப்போது அந்த தொழில்நுட்பத்தில் இருக்கும் அறிவும் நிபுணத்துவமும் நீங்கள் அதனை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்போது அதிகரிக்கின்றது . ஆம் நண்பர்களே மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்க நீங்கள் எண்ணும்போதே அதுகுறித்த அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் , கட்டாயம் ஏற்படும் .
2. LEARN BY WRITING
எழுதுவதன் மூலமாக கற்றுக்கொள்ளுங்கள்
அதிகப்படியான அறிவு மட்டுமே வெற்றிக்கு போதுமானது அல்ல . நிதானமான சிந்தனை , அதோடு கூடிய அறிவு இவைதான் வெற்றிக்கு முதல்படி . படிப்பது , பேசுவதைவிட ஒரு விசயம் குறித்து எழுதும்போது பொறுமையாக அதுகுறித்து சிந்திப்பதற்கான நேரம் உங்களுக்கு கிடைக்கும் . ஆகவே உங்களது சிந்தனைகளை எழுதி அதன் மூலமாக நிதானமாக செயல்பட கற்றுக்கொள்ளுங்கள் .
எழுதுவதற்கு நிதானம் , விசயம் குறித்த அதிக தேடல்கள் அவசியம் . அவை உங்களை முன்னேற்றிட உதவும் .
3. REGULAR EXCERSISE
தொடர் உடற்பயற்சி
இயற்கையாகவே மனிதனின் சிந்தனைக்கும் அதாவது மனதிற்கும் உடலுக்கும் தொடர்பு உண்டு . இந்த இரண்டில் எது பாதிக்கப்பட்டாலும் அது உங்களின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகளான ஐகியூ , கவனம் , கிரியேடிவிட்டி இவற்றை பாதிக்கும் .
ஆகவே ஒருநாளைக்கு குறிபிட்ட நேரம் உடற்பயற்சி செய்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள் . உடல் ஆரோக்கியமாக இருந்தால் உள்ளம் ஆரோக்கியமாக இருக்கும் . அதிக உழைப்பினை கொடுக்க உடல்பலம் அவசியம் .
4. DO SIMPLE MATHS
கணிதத்தில் ஆர்வம் செலுத்துங்கள்
ஐகியூ என்பது நீங்கள் எவ்வளவு வேகமாக சிந்திக்கிறீர்கள் என்பதுதான் . ஆகவே எளிமையான கணக்குகளை முதலில் தீர்க்க பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள் . பிறகு கடினமான கணக்குகளை எளிய முறையில் எவ்வாறு தீர்க்க முடியும் என ஆராய்ந்து அதில் பயிற்சி பெறுங்கள் .
பொதுவாக நமது மூளையானது கணக்குகளை செய்யும்பொது அதிக ஆக்டிவாக இருக்கும் . இதனால் உங்களின் சிந்திக்கும் செயல்திறன் மேம்படும் .
5. THINK DIFFERENTLY
புதிதாக சிந்தியுங்கள்
கிரியேடிவிட்டி என்பதே மாறுபட்ட சிந்தனைதான் . அனைவரும் ஒரு நிகழ்வை ஒரு விதமாக பார்க்கும்பொது நாம் அந்த நிகழ்வை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கும்போது வெற்றியாளராக பார்க்கப்படுகிறோம் .
மனிதனுடைய முதல் பெரும் கிரியேடிவிட்டி சக்கரம் தான் . அப்படிபட்ட சக்கரம் மனித வாழ்வையே புரட்டிப்போட்டது . முன்னேற்றங்களை பயன்களை அள்ளிக்கொண்டு வந்தது .
ஆகவே ஏற்கனவே இருக்கின்ற விசயமாகட்டும் புதிய விசயமாகட்டும் நீங்கள் அதில் எவ்வாறு மாறுபட்டு மக்களுக்கு பயன்படுகிற வகையில் சிந்திக்கிறீர்கள் என்பதனை பொறுத்து வெற்றியாளராக மாறிவிடுவீர்கள் .
TECH TAMILAN