Friday, November 22, 2024
HomeTech Articles5G சோதனையால் பறவைகள் இறக்கவில்லை | அம்பலமான கட்டுக்கதை

5G சோதனையால் பறவைகள் இறக்கவில்லை | அம்பலமான கட்டுக்கதை

 


நவம்பர் 05, 2018 அன்று healthnutnews.com என்ற இணையதளத்தில், நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் (Hague) எனும் இடத்தில் ஹ்யுஜென்ஸ் பார்க் இல்  நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்துவிட்டன என செய்தி வெளியிடப்படுகிறது. 5 ஜி தொழில்நுட்பத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல பக்கங்களை நடத்துகின்ற John Khules எனும் நபரின் மூலமாக இந்த செய்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

 

 

ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் இயக்கியிருந்த 2.O திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் இந்த செய்தி முக்கியத்தும் பெற்றது.


healthnutnews.com என்ற இணையதளத்தில் வெளியான செய்தி இதுதான்,

 

ஹேக் (Hague) எனும் இடத்தில் இருக்கக்கூடிய பார்க்கில் பல பறவைகள் இறந்து கிடந்தன. இந்த செய்தி உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், காரணம் அது ரகசியமாக கையாளப்பட்டது. திடீரென 150 க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்தவுடன் இதனை அனைவரும் கவனிக்க துவங்கிவிட்டனர். அப்போது இறந்திருந்த பறவைகளின் எண்ணிக்கை 297.

இதற்க்கு காரணம் அறிய சுற்றும் முற்றும் பார்த்தால், அங்கே மூலையில் வைக்கப்பட்டு இருந்த 5ஜி ஆன்டெனாவை காணலாம். இதனை பயன்படுத்தி தான் அங்கே 5ஜி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பாதிப்பினால் மரங்களில் இருந்த பறவைகள் இறந்து விழுந்தன, தண்ணீரில் இருந்த பறவைகள் கதிர்வீச்சில் இருந்து தப்பிக்க நீருக்குள் மூழ்கி கொண்டன. இறந்த  பறவைகள் வைரஸ் தொற்றால் இறக்கவில்லை, எந்தவொரு விஷத்தாலும் அவை கொல்லப்படவில்லை. நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காரணமாக என்ன இருக்குமெனில் 5ஜி சோதனையின் போது வெளிப்பட்ட அதீத கதிர்வீச்சினால் தான் இவை இறந்து போயிருக்கும்.


நெதர்லாந்தில் பறவைகள் இறந்தது உண்மையா?

 

அந்த பகுதியின் முனிசிபல் அறிக்கையின்படி பறவைகள் இறந்தது உண்மை தான் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அந்த குறிப்பிட்ட பார்க் பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்து கிடப்பதனால் அங்கு நாய்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என வெளியிடப்பட்டுள்ளது.

 

 

மேலும் தற்சமயம் பறவைகள் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை எனவும் அதுகுறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.


பறவைகள் இறந்த தினத்தன்று 5ஜி சோதனை நடந்ததா?

 

உலகமே இன்று அடுத்த தலைமுறை அலைவரிசையான 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்கான சோதனைகளை செய்ய துவங்கிவிட்டன. இந்தியாவிலும் இதற்கான வேலைகள் துவங்கி இருக்கின்றன. அதனைப்போன்றே நெதர்லாந்து நாட்டிலும் சோதனைகள் நடைபெற்றுவருகின்றன. அதன்படி பறவைகள் இறந்ததாக சொல்லப்படுகின்ற பகுதியில் 5ஜி சோதனை நடைபெற்று இருக்கிறது. ஆனால் அது நடந்தது ஜூன் 28, 2018. அப்போது இதுபோன்று எந்தவொரு பறவை இறப்பு நிகழ்வும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

 


 

உண்மை தான் என்ன?

 

மேலும் 5ஜி தொழில்நுட்பத்தினை பயன்படுத்த வேண்டிய இடங்களில் அதிகப்படியான செல்போன் கோபுரங்களை நிறுவவேண்டி இருக்கும். குறைந்த அதிர்வெண் கொண்ட ரேடியோ அலையானது அதிக தூரத்திற்கு பயணிக்கும் ஆனால் அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ அலைகள் குறைந்த தூரம் மட்டுமே பயணிக்கும். ஆகையால் குறுகிய தொலைவிற்கு உள்ளாக கதிர்வீச்சினை பெற்று மீண்டும் அனுப்புவதற்கு ஏதுவாக அதிகப்படியான செல்போன் டவர்களை நிறுவ வேண்டி இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

 

மேலும் இந்த சம்பவம் குறித்து Dr. Eric van Rongen, a member of the Health Council of the Netherlands and the Chairman of the International Commission கூறும் போது , ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களில் வெளியிடப்படும் கதிர்வீச்சினை விட 5ஜி டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சானது குறைவானதே. பறவைகள் இறந்ததற்கு காரணமாக இருக்கக்கூடிய அளவிற்கு சக்தியை உமிழக்கூடிய ஆற்றல் இந்த ஆன்டெனாக்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

 

உலகம் அனைவருக்குமானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேசமயம் பல நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்துக்கான சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கக்கூடிய சூழலில் ஒரு பகுதியில் ஏற்பட்ட பறவைகளின் மரணத்திற்கு 5ஜி சோதனை தான் காரணமென ஏதோ ஒரு இணையதளத்தில் வெளியிடப்பட்ட யூகமான செய்தியை அடிப்படையாக கொண்டு செய்திகளை பரப்புவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

 

செல்போன் நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், கதிர்வீச்சின் அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆனால்  பறவைகள் இறந்ததற்கு 5ஜி சோதனையால் ஏற்பட்ட கதிர்வீச்சுதான் காரணமென கூற இயலாது. அது வதந்தி.


TECH TAMILAN

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular