Bitcoin
நிலையற்ற தன்மை காரணமாக பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு அனுமதி அளிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் மறுத்து வருகின்றன. உலகிலேயே முதலாவது நாடாக எல் சல்வடோர் நாடு பிட்காயின் ஐ அதிகாரபூர்வ கரன்சியாக அறிவித்து உள்ளது.
எல் சால்வடார் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக ஒப்புதல் அளித்த முதல் நாடாக மாறியுள்ளது. எல் சால்வடார் காங்கிரஸ் ஜூன் 9 அன்று பிட்காயினை நாட்டில் சட்டப்பூர்வ கரன்சியாக மாற்றும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கலே ட்விட்டர் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். எல் சால்வடாரில் பிட்காயினில் முதலீடு செய்யும் நபர்களுக்கு நாட்டின் குடியுரிமை கிடைக்கும் என்றும் அவர் அறிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தில் மூன்று பிட்காயின்களை முதலீடு செய்யும் மக்களுக்கு அரசாங்கத்தால் குடியுரிமை வழங்கப்படும்.
எல் சால்வடாரில் 84 வாக்குகளில் 62 வாக்குகளைப் பெற்ற பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
“இந்த சட்டமானது பிட்காயினை அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல் மக்கள் அதனை அதிகாரபூர்வமாக பரிவர்த்தனைக்கு பயன்படுத்தவும் கட்டுப்பாடற்ற சூழலை தடுக்கவும் வழிவகை செய்கிறது” என்று சட்டம் கூறுகிறது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, எல் சால்வடார் குடிமக்கள் பிட்காயினில் விலைகளைக் காட்ட முடியும். டிஜிட்டல் நாணயத்துடன் வரி பங்களிப்பு செய்ய அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கிரிப்டோகரன்சி ஆதரவாளர்களுக்கு முடிவு ஊக்கம் தரலாம், ஆனால் மற்ற நாடுகளுக்கு அவர்களின் நாணயத்தை டிஜிட்டல் பணத்துடன் இணைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. எல் சால்வடாரால் அதைச் செய்ய முடிந்தது என்பதற்கு ஒரே காரணம், அதற்கு என சொந்த நாணயம் இல்லை என்பதுதான். தற்போது அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ நாணயமாக பயன்படுத்துகிறது அந்நாடு.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.