தற்போது ஆண்ட்ராய்டு 9 பை (android 9 pie) இயங்குதளத்தை பயன்படுத்தி வருகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது கூகுள் தனது அடுத்த இயங்குதளமான Android Q OS இன் பீட்டா வெர்சனை சோதனை முயற்சியாக வெளியிட்டுள்ளது. Google இன் Pixel போன்களில் மட்டும் பீட்டா வெர்சனை பயன்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும்.
——————————————————————————————
Advertisement :
——————————————————————————————
>> Dark Mode

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்திலேயே Dark Mode ஐ பரிசோதனை செய்திருந்தது கூகுள். தற்போது அதனை Android Q இல் நீடித்து இருக்கிறது. Android Q இல் Dark Mode ஐ செலக்ட் செய்திடும் வசதி இல்லை. ஆனால் battery saver mode ஐ ON செய்வதன் மூலமாக Dark Mode ஐ உங்களால் பார்க்க இயலும். அனைத்து ஆப்களின் background ம் கறுப்பு நிறத்தில் இருக்கும். தனியே பட்டன் இருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.
>> Bell Icon for notification
![]()
முந்தைய OS களில் நோட்டிபிகேஷன் வந்தால் இடது பக்கமோ வலது பக்கமோ தள்ளினால் (Swipe) செய்தால் அது போய்விடும். ஆனால் புதிய Android Q இல் வலது பக்கமாக தள்ளினால் (Swipe) மட்டுமே நோட்டிபிகேஷன் மறையும். மாறாக இடது பக்கமாக தள்ளினால் (Swipe) நோட்டிபிகேஷன் ஆப்சன்கள் வரும். புதிய bell icon மூலமாக எந்த நோட்டிபிகேஷன் புதியது என்பதனை தெரிந்துகொள்ள முடியும்.
>> Privacy Control : Location Access Control

Android Q OS இல் பிரைவசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. முந்தைய இயங்குதளங்களில் ஒரு ஆப்பிற்கு Location Access Control ஐ கொடுக்க முடியும் அல்லது நீக்க முடியும். ஆனால் Android Q OS இல் மூன்றாவதாக ஒரு ஆப்சனும் இருக்கிறது. அதன்படி ஆப் எப்போது பயன்படுத்தப்படுகிறதோ அப்போது மட்டும் Location ஐ access செய்திட அனுமதி அளித்திட முடியும்.
——————————————————————————————
Advertisement :
——————————————————————————————
>> New Share Menu

முன்பு நாம் share பட்டனை அழுத்தியவுடன் என்னென்ன ஆப்களின் வழியாக share செய்யப்போகிறோமோ அவை காட்டப்படும். ஆனால் Android Q OS இல் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் எந்த file ஐ share செய்யபோகிறீர்கள் என்பது மேலேயே தெரியும் விதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தவறான தகவலை பகிர்வது தவிர்க்கப்படும்.
>> New Options on Apps

ஒரு ஆப்பை நீங்கள் திறக்கும் போது அந்த ஆப் இயங்க தேவையான இன்டர்நெட், ப்ளூடூத், ஜியோ உள்ளிட்டவை ON செய்யப்படாமல் இருந்தால் நீங்கள் தனியாக settings க்கு சென்று அதனை ON செய்ய வேண்டும் என்பதில்லை. தற்போதைய Android Q OS இல் popup யிலேயே அதற்க்கான ஆப்ஷன்கள் தோன்றும். ஆகவே நீங்கள் அங்கேயே ON செய்துகொள்ள முடியும்.
>> Share Wi-Fi details from QR codes

புதிய Android Q OS இல் WIFI ஐ பிறருடன் பகிர்ந்துகொள்ள QR Code ஐ ஸ்கேன் செய்தாலே போதுமானது.
>> Android Q screen recorder

Android Q இல் திரையினை ரெகார்ட் செய்வதற்கு ஆப்சன் அதிலேயே இருக்கிறது. முன்பு இதற்கென தனியே ஆப் இன்ஸ்டால் செய்ய வேண்டி இருக்கும்
>> Screenshots support notches and corners

உங்களது மொபைல் திரையில் notches இருந்தால் நீங்கள் screenshot எடுக்கும் போது அவை போட்டோவில் வரும். அதனைப்போலவே மொபைலில் corners கூட நீங்கள் எடுக்கும் திரையில் வரும். ஆனால் உங்களுக்கு இந்த ஆப்சன் தேவை இல்லையெனில் அதனை நீக்கி கொள்ளும் வசதி இல்லை.
TECH TAMILAN
——————————————————————————————
Advertisement :
——————————————————————————————
இதையும் படிங்க,
[easy-notify id=1639]











[…] Read >> Android Q OS இன் சிறப்பம&#… […]