Sunday, November 24, 2024
HomeUncategorizedவாட்ஸ்ஆப் திருட்டு, உஷார் மக்களே | Don’t share WhatsApp verification PIN

வாட்ஸ்ஆப் திருட்டு, உஷார் மக்களே | Don’t share WhatsApp verification PIN


வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் verification PIN ஐ எவரோடும் பகிர்ந்துகொள்ள கூடாது

வாட்ஸ்ஆப்பை அண்மையில் தொடர்பு கொள்ளும் பலர் “ஏன் வாட்ஸ்ஆப் எங்களுடைய verification PIN ஐ கேட்கிறது?” என்ற கேள்வியை முன்வைத்து வருகிறார்கள். இதுகுறித்து WABetaInfo என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பின்வரும் பதில் தரப்பட்டுள்ளது. 

 

This is #FAKE. WhatsApp doesn’t message you on WhatsApp, and if they do (for global announcements, but it’s soooo rare), a green verified indicator is visible.

WhatsApp never asks your data or verification codes.

 

@WhatsApp

 should ban this account. 😅

 

This is #FAKE. WhatsApp doesn't message you on WhatsApp, and if they do (for global announcements, but it's soooo rare), a green verified indicator is visible.
WhatsApp never asks your data or verification codes.@WhatsApp should ban this account. 😅 https://t.co/nnOehPL8Ca

— WABetaInfo (@WABetaInfo) May 27, 2020

அதாவது, இது போலியானது. நாங்கள் எப்போதும் உங்களுக்கு மெசேஜ் அனுப்புவதில்லை. அப்படியே அனுப்பினாலும் எப்போதாவது தான் நடக்கும். எங்களது கணக்கில் பச்சை டிக் இருக்கும். மேலும் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் வாட்ஸ்ஆப் எப்போதும் உங்களது வெரிபிகேஷன் எண்ணை கேட்பது கிடையாது என குறிப்பிட்டுள்ளது. 

 

உலகம் முழுமைக்கும் தற்போது பல பில்லியன் மக்களால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவரம் அறிந்தவர்கள் அறியாதவர்கள் என்ற பாகுபாடு இன்றி தற்போது இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. எளிதில் ஏமாறக்கூடியவர்களை குறிவைத்து உங்களுடைய வெரிபிகேஷன் எண்ணை அனுப்புங்கள் என்று ஒரு மெசேஜ் அனுப்புவார்கள். அப்படி மெசேஜ் வரும் எண்ணின் புரொபைல் போட்டோவில் வாட்ஸ்ஆப் லோகோ இருக்கும். சிலர் இந்த எண்ணை உண்மையான வாட்ஸ்ஆப் என்று நம்பி வெரிபிகேஷன் எண்ணை அனுப்பி விடுவார்கள். 

 

இந்த எண் கிடைத்தவுடன் உங்களது வாட்ஸ்ஆப் கணக்கின் கட்டுப்பாடு அவர்களுக்கு சென்றுவிடும். நீங்கள் இதனை அறிந்து உங்களது வாட்ஸ்ஆப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதற்குள் அவர்கள் உங்களது கணக்கில் இருந்து பல்வேறு தகவல்களை திருடிவிட வாய்ப்பு உள்ளது. உங்களது கணக்கு இப்படி திருடுபோனது தெரிந்தால் உடனடியாக logout செய்துவிடுங்கள். மீண்டும் login செய்துகொள்ளுங்கள். 

 

வாட்ஸ்ஆப்பின் FAQ பகுதியில் இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது உங்களது மொபைல் எண்ணை எவராவது வாட்ஸ்ஆப்பில் ரிஜிஸ்டர் செய்ய முற்பட்டால் உங்களது மொபைலுக்கு தான் PIN எண்ணை அனுப்புவார்கள். அந்த எண்ணை நீங்கள் பிறருக்கு அனுப்பி விட்டால் உங்களது வாட்ஸ்ஆப்பை அவர்கள் கட்டுப்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். இது புதுவித திருட்டாக இருக்கிறது. ஆகவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இந்த பதிவை உங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்திடுங்கள். 

 

“To keep your account safe, don’t share your verification code with others…When you receive this notification, it means that someone has entered your phone number and requested the registration code. This often happens if another user mistyped your number when trying to enter their own number to register, and can also happen when someone attempts to take over your account.”



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular