What is Influencers Marketing? Explained in tamil

Influencer Marketing

Influencers Marketing

“இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டால் இந்திய கிரிக்கெட் வீரர் கோலிக்கு 3.2 கோடி கொடுக்கப்படுகிறது, அதனைவிட அதிகமாக பிரியங்கா சோப்ரா பெறுகிறார்” இது என்ன விளம்பர யுக்தி, படியுங்கள்


இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டால் கோலிக்கு 3.2 கோடி ரூபாய் கிடைக்கிறது என்ற செய்தியை பார்த்திருப்பீர்கள் . இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவது அனைவரும் செய்யக்கூடியதுதானே அதற்க்கு யார் 3 கோடி ரூபாய் கொடுப்பார்கள்? இதெல்லாம் வெற்றுக்கதையாக இருக்கும் என நீங்கள் நினைத்தீர்களா? அது உண்மைதான் கோலியை விடவும் பல மடங்கு பணம் பெருகிறவர்கள் இருக்கிறார்கள், கோலி அந்த பட்டியலில் 23 ஆவது இடத்தில் தான் இருக்கிறார் என்பதுதான் உண்மை. அதுவொரு வகையிலான விளம்பர யுக்தி. அதனை ஆங்கிலத்தில் “Influencers Marketing” என கூறுவார்கள். “Influencers Marketing” என்றால் என்ன? யார் எதற்காக பணம் கொடுக்கிறார்கள் என்பதனை இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

டிஜிட்டல் அட்வெர்ட்டிசிங் மிகப்பெரிய வளர்ச்சி அடைத்துக்கொண்டு வரக்கூடிய சூழலில் அதன் ஒரு பகுதியாக Influencers Marketing ம் வளர்ச்சி அடைந்து வருகிறது. டிஜிட்டல் அட்வெர்ட்டிசிங் குறித்து இங்கே படிக்கலாம்.

What is Influencers Marketing?

kyliejenner Influencer Marketing

Influencers Marketing என்றால் என்ன என்ற கேள்விக்கு அதன் பெயரிலேயே பதில் இருக்கிறது. பெரும்பாலானவர்களிடம் “influence” செய்யக்கூடிய அளவிற்கு பின்தொடர்பவர்களை (followers) வைத்திருக்கும் ஒருவர் ஒரு நிறுவனத்தையோ அல்லது பொருளையோ பிரபலப்படுத்தும் விதமாகவோ அல்லது அதனை வாங்கிட அறிவுறுத்தும் விதமாகவோ பதிவிட்டால் அதற்க்கு Influencers Marketing என பெயர்.

உதாரணத்திற்கு நமது இந்திய அணி கேப்டன் கோலியை எடுத்துக்கொள்வோம். அவர் ஒரு ஷூ நன்றாக இருக்கிறது என்றோ அல்லது ஒரு பேட்டில் விளையாடுவது போன்றோ ஒரு பதிவினை போடுகிறார் எனில் அந்தப்பதிவு பலரால் பார்க்கப்படும். பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அதனை பலரும் வாங்கவும் துவங்குவார்கள். அப்படி நடந்தால் அந்த மார்க்கெட்டிங் தான் Influencers Marketing என அழைக்கப்படுகிறது.

Advantages of Influencers Marketing

மக்களுக்கு விளம்பரங்களை பார்த்து ஒரு பொருளின் மீது ஏற்படுகிற விருப்பதைக்காட்டிலும் யாராவது அந்த பொருள் பற்றி கூறினால் தான் அதிக விருப்பம் ஏற்படுகிறது. அதுதான் Influencers Marketing இன் அடிப்படையே. குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக followers களை கொண்டிருக்கின்ற ஒரு பிரபலம் ஒரு பொருளை பற்றி கூறும் போது அதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.

 

ஒரு நிறுவனம் அனைத்து மக்களிடமும் சென்று எங்களது பொருள் நன்றாக இருக்கும் என விளம்பரம் செய்வது எளிதான காரியம் இல்லை. அப்படி செய்தாலும் மக்கள் வாங்குவார்களா என தெரியாது. ஆனால் சமூக வலைத்தளங்களில் அதிக followers களை கொண்டிருக்கிற மக்கள் விரும்புகிற ஒருவரை அணுகி அவரை தங்கள் நிறுவன பொருளை பிராண்டிங் செய்யச்சொல்வது தான் எளிமையானது.

முந்தைய காலங்களில் தொலைக்காட்சி, ரேடியோ, செய்தித்தாள் போன்றவற்றில் வருகிற விளம்பரங்களினால் தூண்டப்பட்டார்கள். ஆனால் இப்போது மக்கள் மாறிவிட்டார்கள். மிகப்பெரிய கம்பெனிகளையும் அவர்கள் நம்புவதில்லை. தற்போதைய நிலையில் சமூக வலைத்தளங்களில் யாரேனும் பரிந்துரைக்கும் விளம்பரங்களையே மக்கள் கவனிக்கிறார்கள்.

ஏன் நிறுவனங்கள் Influencer Marketing ஐ தேர்ந்தெடுக்கின்றன?

Influencer Marketing

influencer marketing என்பது புதிய விளம்பர யுக்தி. ஆனாலும் தற்போது பல நிறுவனங்கள் அதனை செய்துபார்க்க துவங்கி இருக்கின்றன. அதற்க்கு பல காரணங்கள் இருக்கின்றன.

 

Success Rate :

 

விளம்பரம் செய்திடும் நிறுவனத்திற்கு தனது பொருள்கள் கூடுதலாக விற்பனை ஆவதும் தனது நிறுவனம் குறித்த ஒரு அறிமுகம் பிறருக்கு கிடைப்பதும் தான். 92% மக்கள் விளம்பரங்களை விட ஒரு நபர் பரிந்துரைப்பதனைதான் நம்புவதாக தெரியவந்துள்ளது.

 

Social Media Reach :

ஒருவர் தொலைக்காட்சியை பார்க்கும் நேரத்தை காட்டிலும் அதிக முறை, அதிக நேரம் facebook , youtube , instagram என சமூக வலைத்தளங்களில் தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஆகவே நிறுவனங்கள் ஒரு இணையதளம் வைத்திருப்பதோ தொலைக்காட்சிகளில் விளம்பரம் போடுவதோ மட்டும் போதுமானது இல்லை. சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு பொருள்களை கொண்டுசேர்க்க வேண்டும், அது குறித்த விவாதத்தை ஏற்படுத்திட வேண்டும். அதற்க்கு influencer marketing எளிமையான வழியாக இருக்கிறது.

Process behind Influencer Marketing

Followers , Likes , Shares என அனைத்தையும் விலைக்கு வாங்க தற்போது வழி இருக்கிறது. ஆகவே நல்ல Influencers ஐ தேர்தெடுப்பது என்பது சவாலான ஒன்றுதான். ஆனாலும் தற்போது அதற்க்கான ஏஜென்சிகள் இருக்கின்றன. நீங்கள் உங்களது நிறுவனத்திற்கு விளம்பரம் செய்திடவேண்டும் எனில் அவர்கள் அதற்க்கு தகுந்த Influencers ஐ உங்களுக்கு பரிந்துரைப்பார்கள் அல்லது Influencers உடன் அவர்களே நேரடியாக தொடர்பு வைத்துக்கொண்டு உங்களுக்காக பணியாற்றுவார்கள்.

Influencer என்பவர் மிகப்பெரிய பிரபலமாக உள்ளவராக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. குறிப்பிட்ட துறையில் பிரபலமானவராகவும் அவரை பின் தொடர்கிறவர்கள் அவர் சொல்வதனை நம்புபவர்களாகவும் அந்த நம்பிக்கையில் பொருள்களை வாங்குபவர்களாகவும் இருந்தால் அவரும் சிறந்த  Influencer தான். இந்தியாவில் இருக்கும் 24 வயது பெண்ணக்கு ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் க்கு $800 வழங்கப்படுகிறது. அப்படியானால் அவர் பரிந்துரைக்கும் ஒரு பொருளின் விலை, அதனை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அனைத்தையும் பொறுத்ததுதான் இந்த தொகை அவருக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

 

ஒரு நபர் போஸ்ட் பதிவிடும் போது அதற்க்கு அவரை பின்தொடர்பவர்களில் 5% பேர் லைக் செய்திருந்தால் அவர்களை ஓரளவிற்கு நம்பலாம். இதுபோன்று பல வழிகளில் நல்ல Influencers ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

Most paid Instagram celebrity influencers

Hopperhq எனும் நிறுவனம் இன்ஸ்டாகிராம் போஸ்ட் களுக்காக அதிக தொகையினை பெரும் புகழ்பெற்ற நபர்களது பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த கோலி , பிரியங்கா சோப்ரா முதலியோர் முன்னனியில் இருக்கிறார்கள்.

Kylie Jenner :

 

141 million followers

$1,266,000 per post

View this post on Instagram

Morning 💗 4 more days till my brand new @kylieskin summer products launch ✨

A post shared by Kylie ✨ (@kyliejenner) on

2. Ariana Grande

 

160 million followers

$996,000 per post

View this post on Instagram

i even wear @givenchyofficial in my videos ☺️

A post shared by Ariana Grande (@arianagrande) on

3. Christiano Ronaldo

 

176 million followers

$975,000 per post

View this post on Instagram

Work in progress. Focused into the new season ⚽️🏃🏻‍♂️💪🏻 #LiveAhead

A post shared by Cristiano Ronaldo (@cristiano) on

4. Kim Kardashian West

 

144 million followers

$910,000 per post

View this post on Instagram

🔥

A post shared by Kim Kardashian West (@kimkardashian) on

5. Selena Gomez

 

153 million followers

$886,000 per post

View this post on Instagram

My first time in Cannes! I’m so honored to have been a part of this movie with Jim and the whole cast. By the way Bill Murray and I are getting married.

A post shared by Selena Gomez (@selenagomez) on

இந்தியாவை பொறுத்தவரையில் 19 ஆவது இடத்தில் பிரியங்கா சோப்ராவும் ($196,000) விராட் கோலி 23 ஆவது இடத்திலும் இருக்கிறார்கள்  ($196,000)

View this post on Instagram

Positivity attracts positivity. Your choice defines your outcome. 🙏😇 #BTS

A post shared by Virat Kohli (@virat.kohli) on

Read this also :

டிஜிட்டல் அட்வர்டைசிங் என்றால் என்ன?

Click Here 

டிஜிட்டல் அட்வர்டைசிங் வளர்ச்சி ஏன்?

Click Here 

விளம்பரம் தோன்றுவதற்கு முன்னால் என்ன நடக்கும்?

Click Here





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.