டீப்ஸ்பாட் [Deep Spot] என பெயரிடப்பட்டுள்ள உலகிலேயே ஆழமான நீச்சல் குளம் [Diving pool] போலந்து நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. 25 மீட்டர் அளவுள்ள சராசரியான நீச்சல் குளத்தை நிரப்புவதற்கு ஆகும் நீரைப்போன்று 27 மடங்கு நீர் இந்த நீச்சல் குளத்தில் நிரப்பப்படும். 8,000 கன மீட்டர் அளவுள்ள நீர் இதற்காக தேவைப்படும். 45 மீட்டர் ஆழமுள்ள இந்த நீச்சல் குளமானது பல்வேறு சிறப்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய கப்பல் விபத்து, மாயன் வடிவமைப்புகள் இதற்குள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த டைவிங் பூல் ஆனது சிறப்பாக டைவிங் பூல்களை வடிமைக்கும் ஏரோடூனெல் எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைக்க $10.6 மில்லியன் டாலர்கள் [ இந்திய மதிப்பில் 73 கொடியே 67 லட்சம்] செலவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஆழமான நீச்சல் குளம் என்ற பெருமையை இந்த நீச்சல் குளம் சில மாதங்கள் வைத்திருக்கும். கிரேட் பிரிட்டன் தற்போது 50 மீட்டர் ஆழம் கொண்ட டைவிங் பூல் ஒன்றினை கட்டி வருகிறது, ஆகவே விரைவில் உலகின் ஆழமான டைவிங் பூல் என்ற சாதனையை அது எடுத்துச்செல்லும். டீப்ஸ்பாட் அறிமுகப்படுத்தப்பட்டபோது, போலிஷ் டைவிங் பயிற்றுவிப்பாளர் ப்ரெஸ்மிஸ்லா காக்பிராக் பேசும் போது ‘இங்கு அற்புதமான மீன் அல்லது பவளப்பாறைகள் எதுவும் இல்லை, எனவே இது கடலுக்கு மாற்றாக இல்லை. ஆனால் திறந்த நீரில் பாதுகாப்பாக முழுக்குவதற்கு கற்றுக்கொள்வதற்கும் பயிற்சியளிப்பதற்கும் இது நிச்சயமாக ஒரு நல்ல இடம். ’
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.